Search
  • Follow NativePlanet
Share
» »மனதை விழுங்கும் மலப்புரத்தின் மறுமுகம் தெரியுமா ?

மனதை விழுங்கும் மலப்புரத்தின் மறுமுகம் தெரியுமா ?

கேரளா மாநிலத்தில் பிரசிதிபெற்ற மாவட்டங்களில் ஒன்று மலப்புரம். மலைகளும், சிறு குன்றுகளும் நிறைந்த மலப்புரத்திற்கு சமீப காலமாக வளைகுடா நாடுகளிலிருந்தும் கூட அதிக அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு வற்றாத ஜீவ நதிகளாக ஓடிக் கொண்டிருக்கும் சாளியாறு, பாரதப்புழா, கடலுண்டி ஆகிய மூன்று நதிகளும் மலப்புரத்தின் மண் வளத்துக்கும், கலாச்சார மேன்மைக்கும் முக்கிய காரணங்களாக திகழ்ந்து வருகின்றன. வேறுபட்ட பாரம்பரியங்கள் மற்றும் தனித்துவமான சுற்றுலா மையமாக விளங்கும் இங்கு வேறென்னவெல்லாம் உள்ளது என தெரியுமா ?

கடலுண்டி பறவைகள் சரணாலயம்

கடலுண்டி பறவைகள் சரணாலயம்

மலப்புரம் மாவட்டத்தில் அழகிய சிறு தீவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் பிற மாநில சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த பறவைகள் சரணாலயம் கடலுண்டி எனும் எழில் கொஞ்சும் சிறிய கிராமத்தில், கடலுண்டி ஆறு அரபிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட குன்றுகள் சூழ அமைந்துள்ள இது பறவை காதலர்களுக்கு மறக்க முடியாத பல அனுபவத்தை கொடுக்கும். இந்த சரணாலயம் ஏராளமான புலம்பெயர் பறவையினங்களுக்கு பருவ கால வசிப்பிடமாக இருந்து வருகிறது. கடலுண்டி சரணாலயத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா வருவது சிறந்ததாக இருக்கும்.

Dhruvaraj S

திருநாவாயா கோவில்

திருநாவாயா கோவில்

கேரளாவின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான திருநாவாயா கோவில், பாரதப்புழா நதிக்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவில், திருநாவாயா நவ முகுந்த ஷேத்ரம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. திருநாவாயா கோவிலின் முதன்மை தெய்வமான விஷ்ணு பகவான், நவ முகுந்தன் என்ற வடிவத்தில் அருள்பாலிக்கிறார். மைசூர் பேரரசு இந்தப் பகுதிகளில் படையெடுத்து வந்தபோது திப்பு சுல்தான் ராணுவத்தால் இந்தக் கோவில் சூறையாடப்பட்டதுடன், இடித்துத் தகர்க்கப்பட்டது. எனினும் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோவில் இன்றளவும் புகழ் குன்றாமல் இருந்து வருகிறது.

Jamstechs

பொன்னனி

பொன்னனி

மலபாரில் கடல் போல் காட்சியளிக்கும் பாரதப்புழா நதிக்கரையில், மேற்கே பிரம்மாண்ட அரபிக் கடல் சூழ அழகே உருவாய் அமைந்திருக்கிறது பொன்னனி. இந்த நகரம் கடற்கரைகளுக்காகவும், எண்ணற்ற மசூதிகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசிபெற்றது. அதோடு தென்னிந்தியாவின் பழமையான துறைமுக நகரங்களில் ஒன்றான பொன்னனியில், பாரதப்புழா நதியும், திரூர் ஆறும் பிரம்மாண்டமான அரபிக் கடலில் கலப்பதற்கு முன் சங்கமாகும் அலைவாயில் ஒன்று உள்ளது. இவ்விடம் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகளுக்கு தற்காலிக புகலிடமாக விளங்கி வருகிறது.

Dhruvaraj S

கல்பெட்டா

கல்பெட்டா

மலபாருக்கு அருகில் உள்ள மற்றுமொரு புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலம் கல்பெட்டா. இங்கே கோவில்கள் பிரசிதிபெற்ற தலங்களாக இருந்தாலும், மீன்முட்டி, சூச்சிப்பாறை, கந்தன்பாறை போன்ற அருவிகளுக்கும் சென்று உல்லாசமாக பொழுதை கழிக்கலாம். மேலும் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையையே கொண்டிருக்கும் கல்பெட்டா நகரை அதன் பனிக் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

Anil R.V

நீலம்பூர்

நீலம்பூர்

உலகிலேயே மிகப்பழமையான கொனொல்லி பிளாட் எனப்படும் தேக்குமரத் தோட்டம் நிறைந்த பகுதிதான் நீலம்பூர். நாட்டில் முதல் தேக்கு அருங்காட்சியகமும் இந்த நகரத்தில் தான் அமைந்துள்ளது. மிக அழகான காட்சிக்கூடத்தை கொண்டிருக்கும் இந்த மியூசியத்தில் தேக்கு மரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அத்தனை விஷயங்களையும் தாவரவியல் ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம். உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான தேக்கு மரம் ஒன்றும் நீலம்பூர் தேக்கு பாதுகாப்பு பண்ணையில் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில், வித்தியாசமான காட்டுயிர் அம்சங்கள், கண்ணைக்கவரும் நீர்நிலைகள், ராஜகம்பீர இருப்பிடங்கள் மற்றும் உயிரோட்டமான காலனிய வரலாற்றுப்பின்னணி போன்ற அம்சங்களுடன் காட்சியளிக்கும் நீலம்பூர் மலபார் கேரளப்பகுதியிலுள்ள ஒரு முக்கிய நகரமாகும்.

Vengolis

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X