Search
  • Follow NativePlanet
Share
» »12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா ?

12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா ?

மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூனர் கோவிலில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கம்.

இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூனர் கோவிலில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கம். இது ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பிற ஜோதிர்லிங்கத்தில் இத்தலம் மட்டும் சிறப்பு பெற்றிருக்கக் காரணம், மல்லிகார்ஜூனர் கோவிலானது 12 ஜோதிர்லிங்களில் மிக பழமையான கோவிலாகும். இங்கு சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருமே லிங்க வடிவில் இருப்பது தான் தனித்துவம் வாய்ந்தது. மல்லிகார்ஜூனா எனும் பேரில் மல்லிகா என்பது பார்வதி தேவி அம்மையாரையும் அர்ஜூனா என்பது சிவ பெருமானின் பேரையும் குறிக்கின்றன. வாருங்கள், இத்தலத்தின் சிறப்பு மற்றும் எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


மல்லிகார்ஜூனா கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்று இத்தலம் 275 பாடல் பெற்ற சிவாலயங்களில் இந்தக் கோவிலும் ஒன்று. பாடல் பெற்ற தலங்கள் என்றால் சிவ பெருமானுக்கு உரிய சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்கள் ஆகும். சைவ நாயன்மார்களின் சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத் தலமாக இந்த கோவில் 6-வது மற்றும் 7-வது நூற்றாண்டுகளில் விளங்கியுள்ளது.

Vjvikram

சக்தி பீடம்

சக்தி பீடம்


52 சக்தி பீடங்களில் மல்லிகாரஜூனர் கோவிலும் ஒன்றாக திகழ்கிறது. சிவ பெருமான் தனது மனைவி சதி தேவியுடன் அழிவு நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது, விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் சதி தேவியின் எரிந்த உடலை துண்டுகளாக வெட்டி விடுகிறார். அவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகள் பூமியில் விழுந்த ஒவ்வொரு இடமும் சதி தேவியின் கோவில்களாக சிறந்து போற்றப்பட்டு வருகின்றது. அவைகள் தான் இன்று சக்தி பீடங்களாக திகழ்கின்றன. விஷ்ணுவால் வெட்டப்பட்ட பாகங்களில் சதி தேவியின் உதடு விழுந்த இடம் தான் இந்த மல்லிகார்ஜூனர் கோவில். எனவே, இந்த கோவில் இந்துக்களின் புன்னிய தலமாக போற்றப்படுகிறது.

Vjvikram

புராணக்கதை

புராணக்கதை


இளவரசி சந்திராவதி குறித்து மல்லிகார்ஜூனர் கோவில் சுவற்றில் செதுக்கப் பட்டிருப்பதை காணலாம். சந்திராவதி அவர்கள் பிறந்தது இளவரசியாக, ஆனால் அவர் அவரது வாழ்நாளை தவம் செய்வதிலேயே கழித்து வந்தார். ஒரு நாள் அவர் கதலி காட்டில் ஆழ்ந்த தவத்தில் மூழ்கி இருந்த போது ஒரு கபில பசுவை வில்வ மரத்தின் கீழ் பார்த்தார். அந்த பசு தனது மடியில் இருந்து தானாக தரையில் பாலை ஊற்றி கொண்டு இருந்தது. இதே போல் தினமும் நடந்துக் கொண்டு இருந்தது.

Vjvikram

சுயம்பு லிங்கம்

சுயம்பு லிங்கம்


ஒருநாள் இளவரசி சந்திராவதி அந்த மரத்தின் கீழே தோண்டிப் பார்த்தார். அங்கு அவர்க்கு ஒரு சுயம்பு சிவ லிங்கம் கிடைத்தது. அந்த சிவ லிங்கம் நெருப்பு போன்று பிரகாசமாக இருந்தது. இளவரசி சந்திராவதி சுயம்பு லிங்கத்திற்கு வழிபாடு நடத்தி இந்த ஜோதிர்லிங்கத்திற்கு ஒரு பெரிய கோவிலை கட்டினார். இதுவே அவர் மிகப் பெரிய சிவ பக்தை என்பதற்கு அடையாளம். சந்திராவதிக்கான நேரம் வந்தவுடன் அவர் கைலாசத்திற்கு காற்றின் மூலமாக சென்று சிவனின் பாதங்களில் சரணடைந்து முக்தி அடைந்தார்.

Vjvikram

மல்லிகார்ஜூனர் வழிபாடு

மல்லிகார்ஜூனர் வழிபாடு


மல்லிகார்ஜூனரை மனதார வழிபடுவதால் அனைத்து செல்வ வளமும் கிடைக்கப் பெற்று செல்வாக்கோடும் மன நிம்மதியுடனும் வாழலாம். உண்மையான பக்தியுடன் சிவனை வழிபட்டால் அனைத்துவிதமான வேண்டுதல்களும், ஆசைகளும் நிச்சயம் கிடைக்கப் பெறுவீர்கள் என்பது நம்பிக்கை.

Vjvikram

திருவிழாக்கள்

திருவிழாக்கள்


ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மல்லிகார்ஜூனர் கோவிலில் மகா சிவராத்திரி தான் மிக மிக முக்கியமான திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா மிகவும் ஆடம்பரமாகவும் மற்றும் நேர்த்தியாகவும் கொண்டாடப்படும்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது மல்லிகார்ஜூனா கோவில். வினகொண்டா, திரிபுரந்தகம் வழியாக சுமார் 143 கிலோ மீட்டர் பயணித்தால் இக்கோவிலை அடையலாம். ஸ்ரீசைலம் அருகே மார்க்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்தரயில் நிலையத்தை எளிதாக அடையலாம். அங்கிருந்து தோரநல்லா வரை வாடகைக் கார்கள் மூலம் செல்ல முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X