Search
  • Follow NativePlanet
Share

ஸ்ரீசைலம் - மோட்சம் தரும் புண்ணிய பூமி!

18

சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரம் ஹைதராபாத்திலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீசைலம் நகரத்துக்கு ஆண்டு தோறும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த நகரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்காகவும், தீர்தங்களுக்காகவும் புனித யாத்ரீகர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

ஸ்ரீசைலம் நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக கருதப்படும் பிரம்மாரம்பா மல்லிகார்ஜுனசுவாமி கோயில் சிவபெருமானுக்காகவும், பார்வதி தேவிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இங்கு மல்லிகார்ஜுனசுவாமி வடிவத்தில் சிவனும், பிரம்மாரம்பா வடிவத்தில் பார்வதியையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோயில் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்ரீசைலம் வரும்போது நீங்கள் மல்லேல தீர்த்தம் எனப்படும் அழகிய அருவியை தவற விட்டுவிடக் கூடாது. இந்த அருவியின் நீர் பாவங்களை கழுவும் சக்தி உள்ளதாக நம்பப்படுவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை பார்க்கலாம்.

ஸ்ரீசைலம் நகரத்தில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் ஏதுமில்லை என்றாலும் சுலபமாக நகரை அடைந்து விட முடியும். இந்த சமயச் சிறப்பு வாய்ந்த நகரத்துக்கு பனிக் காலங்களில் சுற்றுலா வருவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

ஸ்ரீசைலம் சிறப்பு

ஸ்ரீசைலம் வானிலை

சிறந்த காலநிலை ஸ்ரீசைலம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஸ்ரீசைலம்

  • சாலை வழியாக
    ஸ்ரீசைலம் நகரை சீமாந்திராவின் பிற பகுதிகளிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடையலாம். அதோடு ஸ்ரீசைலம் நகருக்கு சீமாந்திராவின் முக்கிய நகரங்களிலிருந்து தினமும் எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஸ்ரீசைலம் நகரின் அருகாமை ரயில் நிலையமாக குண்டூர்-ஹூப்ளி ரயில் பாதையில் அமைந்துள்ள மர்காப்பூர் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் ஸ்ரீசைலம் நகரிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கு வந்து சேர்ந்த பின்பு பயணிகள் பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் சுலபமாக ஸ்ரீசைலம் நகரை அடைந்து விட முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஸ்ரீசைலம் நகரிலிருந்து 201 கிலோமீட்டர் தொலைவில் ஹைதராபாத் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு எந்த சிரமமுமின்றி ஸ்ரீசைலம் நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri