Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் அற்ற மரக் காடு..! இன்று எப்படி இருக்கு ?

ஒரு நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் அற்ற மரக் காடு..! இன்று எப்படி இருக்கு ?

பசுமை மாறாக்காடுகள், அலையலையாய் மடிந்து கிடக்கும் மலைகள், பாறைப்பாங்கான பீடபூமி பிரதேசங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பல்வேறு எழில் அம்சங்களைக் கொண்டதுதான் ஜார்கண்ட் மாநிலம். இம்மாநிலத்தின் பெரும் பகுதி நிலம் காடுகளால் சூழப்பட்டிருப்பதால் புலிகள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனித நடமாட்டமேயில்லாத அடர்த்தியான சால் மர காட்டுப்பகுதிகள் இந்த பூமியில் பரவலாக அமைந்திருந்தன. இங்கு புதைந்து கிடக்கும் கனிம வளத்தின் இருப்பு கண்டறியப்பட்ட பிறகே இம்மாநிலம் ஒரு தொழில் பிரதேசமாகவும், வாழ்விடங்களாகவும் வளரத்துவங்கியது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றை அடக்கிய மூன்று முக்கிய பருவங்களை ஜார்கண்ட் மாநிலம் பெற்றிருக்கிறது. இன்னும் எத்தனையோ சிறப்புகளைக் கொண்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தின் பிரசிதிபெற்ற ஓர் சுற்றுலாத் தலத்தை தேடிப் போகலாம் வாங்க.

பலமு

பலமு

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலமு வளமான நிலங்கள் மற்றும் வனவிலங்குகள் இயற்கை காதலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கின்றது. இந்த மாவட்டத்தின் தலைநகராக டால்டொன்கஞ்ச் விளங்குகின்றது. இப்பகுதியில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் கண்களுக்கு விருந்தளிக்கக் கூடிய அழகிய காட்சியானது சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

Karan Dhawan India

செழுமையான நீரோடைகள்

செழுமையான நீரோடைகள்

பலமு பகுதியில் கோல் ஆறு மற்றும் அதன் கிளை நதிகளான ஔரங்கா மற்றும் அமனத் போன்றவை பாய்கின்றன. மேலும் இங்கு சிறு நீரோடைகள் பாறைகளின் வழியே பாய்ந்து ஓடுகின்றன. ஆகவே இந்தப் பகுதி மிகவும் செழிப்பாகக் காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் சல் மற்றும் மூங்கில் மரங்கள் செழித்து வளருகின்றன.

কাজারি

காட்டில் முகாம்

காட்டில் முகாம்

வன மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மற்றும் மலையேறுபவர்கள் வாகன ஓட்டிகளுக்கு பலமு சிறந்த தலமாக உள்ளது. இங்குள்ள அடர்ந்த காடுகளில் கூட அந்த காலகட்ட பங்களாக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்ககூடிய வகையில் அமைந்துள்ளத. மேலும், இயற்கைச் சூழலில் முகாமிட்டு ரசிக்க விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற பகுதிகளும் இங்கே உள்ளது.

Koppertone

பலமு புலிகள் சரணாலயம்

பலமு புலிகள் சரணாலயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரே புலிகள் சரணாலயம் இந்த பலமு புலிகள் சரணாலயம் தான். மேலும், இது நாட்டில் உள்ள ஒன்பது முதன்மையான புலிகள் சரணாலயத்தில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த சரணாலயம் சுமார் 1,014 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்தச் சரணாலயத்தின் மைய பகுதி மட்டுமே சுமார் 414 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 600 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு விரிந்துள்ளது.

Dr. Raju Kasambe

சாகசவிரும்பிகளுக்கு

சாகசவிரும்பிகளுக்கு

பலமு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 1947-ஆம் ஆண்டில் இந்திய வன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. இங்கு நீங்கள் புலிகளை தவிர்த்து, யானை, சிறுத்தை, காட்டெருமை, சாம்பார் மற்றும் காட்டு நாய்கள் போன்ற மற்ற விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம். சாகசத்தை விரும்பும் பயணிகளூக்கு இந்த காடு அழகான நீர் வீழ்ச்சிகள், மலை சரிவுகள், இலையுதிர் புல்வெளிகள், போன்றவற்றை வழங்குகின்றது. இந்தப் பகுதியில் முர்ஹு, ஹுலுக், குல்குல், மற்றும் நெதர்ஹத் போன்ற மிக முக்கியமான மலைகளும் இருக்கின்றன.

Eddyvishal

பலமு கோட்டைகள்

பலமு கோட்டைகள்

தற்பொழுது அழிவின் விளிம்பில் நிற்கும் இரண்டு கம்பீரமான கோட்டைகள் பலமு சுற்றுலாவின் மிக முக்கிய அங்கமாகும். இஸ்லாமிய பாணியிலான பழைய கோட்டை மற்றும் புதிய கோட்டைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில் உள்ளன. பலமு கோட்டைகள் ச்ஹெரொ வம்சத்தவற்களுக்கு பாத்தியப்பட்டதாகும். இந்தக் கோட்டை ராஜா மெடினி ரே என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையானது அந்தக் கால கட்டத்தில் எதிரிகளிடமிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கியது. ஆகவே இந்த இரண்டு கோட்டைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.

Marlisco

பிட்லா தேசிய பூங்கா

பிட்லா தேசிய பூங்கா

ஜார்கண்ட் ச்ஹொதங்க்புர் பீடபூமியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இது இந்தியாவில் உள்ள பழமையான வன பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு மிகுந்துள்ள பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் வெப்ப மண்டல காடுகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. தற்பொழுது புலிகள் பாதுகாப்பு திட்டம் கீழ் இந்தியாவில் உருவாக்கபட்ட ஒன்பது புலிகள் காப்பகத்தில் இந்தப் பூங்காவும் வருகின்றது. பருவமழைக் காலங்களில் யானை மந்தைகளை நாம் இங்கு மிக எளிதாக காணமுடியும். சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இந்தப் பகுதிக்கு வருகை புரிகின்றனர். வனப் புகைப்படக்காரர்களுக்கு உதவ இங்கு பல்வேறு கண்காணிப்பு கோபுரங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Biswarup Ganguly

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X