Search
  • Follow NativePlanet
Share
» »இது பட்ஜேட்டுக்கு ஏற்ற காஷ்மீர்..! சம்மர் ட்ரிப் போகலாம் வாங்க...

இது பட்ஜேட்டுக்கு ஏற்ற காஷ்மீர்..! சம்மர் ட்ரிப் போகலாம் வாங்க...

இந்தியாவுல வடக்கே இருக்குற காஷ்மீர் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்னு தெரியும். ஆனா, மேற்கே ஓர் மலை காஷ்மீர் கூடவே போட்டிபோடுற அளவுக்கு அட்டகாசான தோற்றத்துடன் இருப்பது தெரியுமா ?

இந்தியாவில் இரண்டாவது காஷ்மீர் என்ற தலைப்பிலேயே இப்ப நாம எந்தப் பகுதிக்கு சுற்றுலா போக போறோம்ன்னு உங்களுக்கு தோராயமா தெரிஞ்சுருக்கும். ஆமாங்க, இந்த சம்மர் லீவுல ஜாலியா ட்ரிப் போக காத்திருக்குறவங்களும் சரி, அடுத்தடுத்த முகூர்த்தத்துல திருமணத்த முடிச்சுட்டு ஹனிமூன் போக காத்திருக்குவங்களும் சரி, ஒட்டுமொத்தமா அனைத்துத் தரப்பு மக்களையும், பயணிகளையும் கவரும் வகையில மகாராஸ்டிராவுல அமைஞ்சிருக்குற பஞ்ச்கனி மலைப் பிரதேசத்துக்குதான் ஜாலியா ட்ரிப் போக போறாம். சரி வாங்க, அப்படி அங்க எக்கவெல்லாம் இருக்கு, எப்படி போகனும்னு பாக்கலாம்.

பஞ்ச்கனி

பஞ்ச்கனி


மகாராஷ்டிரா மக்களால் சின்ன காஷ்மீர் என்று அழைக்கப்படும் பஞ்ச்கனி புதுசா வர சுற்றுலா பயணிகளுக்கு இமயமலைப் போலத்தான் காட்சியளிக்கும். வானுயர்ந்து வளர்ந்துள்ள மரங்கள், அடர்வனக் காடுகள், பச்சைப்பசேலேன்று இருக்கும் இந்த மலைப் பகுதியில் சில்வர் ஓக் மரங்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்தான். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று. பஞ்ச்கனியிலில் பிரசிதிபெற்றது பார்சி காட்சி முனை. இங்கிருந்து மலைப்பாறைகளின் ஊடாக ஜில்லென்று பாய்ந்து ஓடும் கிருஷ்ணா நதியை ரசிப்பது பரவசமான அனுபவமாக இருக்கும். இதனருகருகே அமைந்துள்ள தட்சிணகாசி என்று அழைக்கப்படும் வாயு பகவான் கோவில், டூம்டாம் வியூ பாயின்ட், நீர் விளையாட்டு பூங்காக்கள் உள்ளிட்டு பல்வேறு அம்சங்களை பஞ்ச்கனி தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லைங்க, பாண்டவர் குகை, கமல்கட் கோட்டை உள்ளிட்ட புராணச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்களும் இங்கே உங்கள் கண்ணுக்கு விருத்தளிக்கவுள்ளன.

Himanshu Sharma

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


பஞ்ச்கனிக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பிரசிதிபெற்றது மஹாபலேஷ்வர் மலைத் தொடர். மஹாபலேஷ்வர் முக்கிய பெரு நகரங்களான மும்பை, புனே போன்றவற்றிலிருந்து சுமார் 264 கிலோ மீட்டர் மற்றும் 117 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் ஒரு நெரிசல்மிக்க நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வெடுக்க மிக பொருத்தமான மலைப் பிரதேசமாக திகழ்கிறது.

Tejas gujrati

கொஞ்சும் மலைச்சரிவுகள்

கொஞ்சும் மலைச்சரிவுகள்


மஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 வியூ பாயிண்ட்கள் இங்கே அமைந்துள்ளன. இவற்றிலிருந்து காணும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை முழுவதுமாக பார்த்து ரசிக்கலாம்.

Akhilesh Dasgupta

கொட்டும் அருவிகள்

கொட்டும் அருவிகள்


மழைக்காலத்தின் போது மஹாபலேஷ்வர் பகுதி படத்தில் காட்டப்படும் சொர்க்கலோகம் போன்றே தோற்றமளிக்கும். எங்கு திரும்பினாலும் பச்சைபசேலென்று கொட்டும் அருவிகள் என்றும் பரவசப்படுத்தும். இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காணப்படும்.

MGA73bot2

வியூ பாயிண்ட்

வியூ பாயிண்ட்


இந்த மலைச் சுற்றுலாத் தலத்தில் வில்சன் பாயிண்ட் அல்லது சன்ரைஸ் பாயிண்ட் எனும் மலைக்காட்சி முனைகள் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப் பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும். ஆர்தர் சீட், எக்கோ பாயிண்ட், எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட் உள்ளிட்டவையும் தவறவிடக்கூடாத காட்சிமுனைகளாக இம்மலைப் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tropicana

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்


பஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் மலைப் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் சைனாமேன் நீர்வீழ்ச்சி, தோபி நீர்வீழ்ச்சி, பிரதாப்கர் கோட்டை, எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வர வேண்டும்.

Dhananjay Odhekar

தோபி அருவி

தோபி அருவி


மஹாபலேஷ்வரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தோபி அருவி. சராசரியாக 50 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் இந்த அருவி கோய்னா பள்ளத்தாக்கில் விழுந்து, கடைசியாக கோய்னா ஆற்றில் கலக்கிறது. இது எல்பின்ஸ்டோன் மற்றும் லோட்விக் மலைக்காட்சித் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

Clive Dadida

பிரதாப்கட் கோட்டை

பிரதாப்கட் கோட்டை


மஹாபலேஷ்வரில் இருந்து சுமார் 20 கிலோ மிட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிரதாப்கட் கோட்டை. பிரம்மாண்டமான அறைகளையும், இயந்திரப்பொறிக் கதவுகளையும் கொண்டுள்ள இந்தக் கோட்டை, மாவீரர் சிவாஜியை எதிர்த்து போரிட்ட பீஜாப்பூர் சுல்தானின் தளபதி அஃப்சல் கானின் மரணம் நிகழ்ந்த இடமாகவும் வரலாற்றில் இடம் பெறுகிறது. அதோடு இந்தக் கோட்டையில் அஃப்சல் கானுக்கான சமாதி ஒன்றும், பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. மேலும், இந்தக் கோட்டைக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகிறது.

Ms.Mulish

தோம் அணை

தோம் அணை


மஹாபலேஷ்வரிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் வாயி நகருக்கு அருகே கிருஷ்ணா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது தோம் அணை. சுமார் 2,478 நீளம் கொண்ட இந்த அணை மஹாபலேஷ்வர், பஞ்ச்கனி, வாயி போன்ற நகரங்களுக்கு நீர்த்தேவையை பூர்த்தி செய்வதுடன், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.

Wikinaturecontest

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் பஞ்ச்கனிக்கும், மஹாபலேஷ்வர் மலைப் பகுதிக்கும் இயக்கப்படுகின்றன. அதோடு மஹாபலேஷ்வரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன. மாநகரத்தின் முக்கியப் பகுதிகளில் இருந்து தனியார் வாடகைக் கார்கள் மூலமாகவும் இந்த சுற்றுலாத் தலத்தை அடைய முடியும். பஞ்ச்கனியில் இருந்து 109 கிலோ மீட்டர் தொலைவில் புனே விமான நிலையமும், 248 கிலோ மீட்டர் தொலைவில் மும்பை விமான நிலையமும் அமைந்துள்ளன.

Shabbir "Leo" Ali

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X