» »சென்னை - பஞ்சாப் : அஸ்வின் வழியில் அட்டகாச பயணம் போலாமா?

சென்னை - பஞ்சாப் : அஸ்வின் வழியில் அட்டகாச பயணம் போலாமா?

Written By: Udhaya

சென்னையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு பயணம் செய்து, டி20 கிரிக்கெட் நடக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அங்கு என்னவெல்லாம் பார்க்கலாம், என்னென்ன உணவுகளை சுவைக்கலாம் என்பதை இந்த பதிவில் காண்போம்.

சென்னையிலிருந்து விமானம் மூலமாக செல்வதே சிறந்தது. எனினும் ரயில் மூலமாக செல்லும் தடங்கள் குறித்தும் இந்த பதிவில் கலந்தாய்வோம். மேலும் சண்டிகர் உள்ளிட்ட அருகாமை பகுதிகளிலும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் காண்போம்.

நெடிய வரலாற்று பின்னணி நிரம்பிய இந்த பூமியின் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் மற்றும் மத்திய ஆசிய இனத்தவர்கள் போன்றோர் இந்தியாவுக்கு வருகை தந்தனர்; போர்களை நிகழ்த்தினர்; இந்திய மண்ணின் வரலாற்றையும் மாற்றினர். பின்னாளில் கடல் வழியே இந்தியாவின் தென்பகுதிக்கு வந்து பின்னர் இந்தியா முழுமையும் ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அது ஒரு தனி வரலாறாக நீண்டு முடிந்தது. கிரேக்கர்கள் மற்றும் ஜொராஷ்டிரர்களின் வரலாற்றுக்குறிப்புகளில் இந்த பஞ்சாப் பூமி உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கும் பெருமையை பெற்றிருக்கிறது. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் வளமான பூமியாக பஞ்சாப் தேசத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாருங்கள் பயணிக்கலாம்.

 சென்னையிலிருந்து விமானம் மூலமாக

சென்னையிலிருந்து விமானம் மூலமாக

சென்னை (எம்ஏஏ) விலிருந்து அமிர்தசரஸ் (ஏடிக்யூ) விமான நிலையத்துக்கு பயணிக்க முதலில் திட்டமிடவேண்டும். குறைந்த பட்ச கட்டணம் ஏறக்குறைய 5 ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 23 ஆயிரம் ரூபாய் வரை வசதிகளைப் பொறுத்து விமான பயணம் மாறுபடுகிறது. இதுதவிர அந்தந்த விமான நிறுவனங்கள் தரும் சலுகைகளைப் பொறுத்து விமான கட்டணம் மாறுபடும்.

விமானத்தில் பயணிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 5.30 மணி நேரங்கள் ஆகின்றன. சில விமான சேவைகள் இந்த பயணத்துக்கு 8மணி நேரங்கள் வரை எடுத்துக்கொள்கின்றன. விமானத்தில் பயணிக்க விருப்பம் இல்லாதவர்களுக்காக ரயில் சேவை குறித்த தகவல்களையும் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

ਗੁਰਲਾਲ ਮਾਨ

 ரயில்கள்

ரயில்கள்

சென்னையில் இருந்த சண்டிகருக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இவ்விரு நகரங்களுக்கு இடைப்பட்ட தூரம் 2515கிமீ ஆகும். சென்னையிலிருந்து சண்டிகருக்கு ரயிலில் பயணிப்பது எளிமையானது. டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து காலை 9.45க்கு கிளம்பி மறுநாள் அதிகாலை 4.40மணிக்கு சண்டிகரை அடைகிறது. இது 43 மணி நேர பயணம் ஆகும்.

Jaypee

பஞ்சாப்

பஞ்சாப்

அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் நிகழ்ந்த 20ம் நூற்றாண்டின் பாதியிலிருந்தே இந்த பஞ்சாப் மாநிலம் பல்வேறு இயந்திர தொழில்நுட்ப கருவிகளின் தயாரிப்பு மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் கேந்திரமாக திகழ்ந்து வருகிறது. பலவகையான உபகரணங்கள், இயந்திரங்கள், விளையாட்டுப்பொருட்கள், ஸ்டார்ச்சு, விவசாய உரத்தயாரிப்பு, சைக்கிள் தயாரிப்பு, சர்க்கரை மற்றும் ஆடை உற்பத்தி போன்றவற்றில் இந்த மாநிலம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக விவசாயக்கருவிகள்,அறிவியல் உபகரணங்கள் மற்றும் மின்சாதனக்கருவிகள் போன்றவற்றுக்கு இம்மாநிலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது.

Jaspinder Singh Duhewala

விளையும் பொருட்கள்

விளையும் பொருட்கள்


பருவநிலையை பொறுத்தவரையில் பஞ்சாப் மாநிலம் கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தையும் கடும் குளிர் நிலவும் குளிர்காலத்தையும் பெற்றிருக்கிறது. மழைக்காலங்களில் கடும் மழைப்பொழிவையும் இம்மாநிலம் பெறுகிறது. இருப்பினும் இயற்கையான வனப்பகுதி என்று எதுவும் இந்த பஞ்சாப் மாநிலத்தில் இல்லை. ஆனால் ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், பீச், அத்தி, மல்பெரி, ஏப்ரிகாட், பாதாம் மற்றும் பிளம் போன்ற பழங்கள் இப்பகுதியில் அதிகம் விளைகின்றன.

Malikhpur

 சுற்றுலா பகுதிகள்

சுற்றுலா பகுதிகள்


கம்பீரமான அரண்மனைகள், கோயில்கள், சன்னதிகள் மற்றும் வரலாற்று யுத்தங்கள் நடந்த ஸ்தலங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்த நகரை ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன. இது தவிர ஃபரித்கோட், ஜலந்தர், கபுர்தலா, லுதியானா, பதான்கோட், பாடியாலா, மொஹாலி போன்ற பல முக்கியமான நகரங்களும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சுற்றுலாத்தலங்களாக புகழ் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களோடு பஞ்சாப் மாநிலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அம்சங்கள் பஞ்சாப் மாநிலத்தின் எல்லா சுற்றுலா சுவராசியங்களிலும் அடித்தளமாக அமைந்திருக்கின்றன.

Haseeb Ahmad Farooq

வரலாறு பேசும் இடங்கள்

வரலாறு பேசும் இடங்கள்

இங்கு கோபிந்த்கர் கோட்டை, கிலா முபாரக், ஷீஷ் மஹால், ஜகஜித் அரண்மனை போன்ற வரலாற்று சின்னங்கள் கடந்து போன உன்னத காலங்களின் தடயங்களாக இங்கு வீற்றிருக்கின்றன. இவை தவிர அட்டாரி பார்டர், ஆம் காஸ் பாக், பரதாரி தோட்டப்பூங்கா, தக்காத் இ அக்பரி, ஜாலியன் வாலா பாக் மற்றும் ரௌஸா ஷரீஃப் போன்ற முக்கியமான அம்சங்களும் பஞ்சாபில் அவசியம் பார்க்க வேண்டியவையாகும். கவர்ன்மெண்ட் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரி, ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம், புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி மற்றும் மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் போன்றவை பஞ்சாபில் உள்ள முக்கியமான அருங்காட்சியகங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. வரலாற்று பிரியர்கள் விரும்பக்கூடிய பல அரும்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Real Jsu

சண்டிகரில் கிரிக்கெட் மைதானம்

சண்டிகரில் கிரிக்கெட் மைதானம்

சண்டிகர் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது இந்த கிரிக்கெட் மைதானம். மேலும் இதன் அருகே பல அருமையான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. டிம்பர் டிரைய்ல் எனப்படும் ரோப் கார் பயணம், மோர்னி மலைக்குன்றுகள். நலகர்க் கோட்டை, சனவர் இயற்கை கேம்ப், பரோக் ரயில் நிலையம், பரத்கர் கோட்டை, நஹான், முகல் சராய், சோலன், சோகி உள்ளிட்ட இடங்கள் அருகாமையில் காணப்படுகின்றன. மேலும் 100கிமீ க்கும் அப்பால் காணப்படும் அருகாமை இடங்களான நல்தேரா, டேராடூன், நர்கந்தா, ராஜாஜி தேசிய பூங்கா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு நீங்கள் பயணிக்கலாம். ஆனால் தெளிவான திட்டமிடல் அவசியம்.

Wiki

 திட்டமிடலுடன் உருவாக்கப்பட்ட நகரம்

திட்டமிடலுடன் உருவாக்கப்பட்ட நகரம்

இந்தியாவில் முறையான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்ட நகரம் சண்டிகர் ஒன்று தான். பிரஞ்சு நாட்டு கட்டிடக்கலை நிபுணர் கோர்புசியர் என்பவரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நகரம் பஞ்சாப் மற்றும் ஹரியான ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக விளங்குகிறது. ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்நகரில் இயற்கை அழகும், கட்டிடக்கலை நுட்பமும் அழகியல் கலவையாக மிளிர்கிறது இந்நகரம். சரி வாருங்கள் சண்டிகர் நகருக்கு அருகில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள் இருக்கும் சில அருமையான இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்

Shivam chhabra

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்