» »அழிவின் விளிம்பில் 65 அடி உயர விஷ்ணு சிலை ! உலகை அச்சுறுத்துகிறதா?

அழிவின் விளிம்பில் 65 அடி உயர விஷ்ணு சிலை ! உலகை அச்சுறுத்துகிறதா?

Written By: Udhaya

சேஷ் செய்யாவில் விஷ்ணுவின் 65 அடி உயரச் சிலை உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் சாரன்கங்கா' நதி ஆரம்பிக்கிறது. சேஷ் செய்யா பாந்தவ்கார் ஹில்லில் அமைந்துள்ளது. மேலும் பாந்தவ்கார் தேசிய பூங்காவில் உள்ள இடங்களில் காலால் நடந்தே செல்லக் கூடிய இடம் இது மட்டுமே. இதன் பெயர் குறிப்பிடுவது போல் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்ட விஷ்ணுவின் சிலை இங்குள்ளது. இந்த சிலையின் வடிவமைப்பு மிகவும் புராதனமானது. இதில் என்ன அச்சுறுத்தல் என்கிறீர்களா? விஷ்ணு சிலை கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. இதனால் உலகம் அழியும் என்ற கதையும் பரப்பப்பட்டு வருகிறது. வாருங்கள் சென்று பார்த்துவிட்டு வரலாம்.

பச்சை குளம்

பச்சை குளம்


சேஷ் செய்யாவின் சிலை ஒரு பச்சை குளத்தின் நடுவே உள்ளது. இந்த பச்சைக் குளத்தில் இருந்து சாரன்கங்கா நதி உற்பத்தியாகிறது என சொல்லப்படுகிறது. இந்து மத நம்பிக்கையின் படி சாரன்கங்கா நதி விஷ்ணுவின் பாதத்தில் இருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. எனவே இந்த நதி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

BluesyPete

 சிறக்கும் தீபாவளி

சிறக்கும் தீபாவளி

இந்த குளத்தின் கரையில் ஏராளமான பழம் தரும் மரங்கள் உள்ளதால் மலபார் பைய்ட் ஹார்ன்பில் போன்ற பறவைகள் வருகை தருகின்றன. புனிதத்தளமான இந்த இடத்திற்கு ஏராளமான பயணிகள் தீபாவளி பண்டிகையின் பொழுது வருகை தருகின்றனர்.

Prithwiraj Dhang

பழமை

பழமை

பாந்தவ்கார் கோட்டையின் கட்டுமானத்தை பற்றிய எந்த ஒரு பதிவுகளும் வரலாற்றில் இல்லை. இந்த கோட்டை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது. ஏனெனில் `நாரத்-பஞ்சரத்ரா' மற்றும் `சிவ புராணம்' போன்றவற்றில் இந்த கோட்டையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புராணங்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழைய புராணங்கள் ஆகும்.

BluesyPete

ஆட்சி

ஆட்சி

இந்த கோட்டையில் இருந்து பல வம்ச அரசர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். உதாரணமாக `மகா' வம்ச அரசர்கள், மற்றும் `வகதகஸ்' அரசர்கள் 3-ம் நூற்றாண்டில் இருந்தும், `ஸென்கார்ஸ்' அரசர்கள் 5 ம் நூற்றண்டில் இருந்தும், `கல்ச்ஹுரிஸ்' அரசர்கள் 10-ம் நூற்றண்டில் இருந்தும் இங்கிருந்து ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பாக்ஹெல் வம்சத்தின் மகாராஜா `விக்ரமாதித்யா சிங்' 1635-ல் பாந்தவ்கார் கோட்டையில் இருந்து தனது தலைநகரை ரேவாவிற்கு மாற்றிக் கொண்டார்.

Sanju71821

 பாந்தவ்கார் கோட்டை

பாந்தவ்கார் கோட்டை

உண்மையில் பாந்தவ்கார் மலை மீது அமைந்துள்ள பாந்தவ்கார் கோட்டை ஒரு பிரபலமான சுற்றுலா இடமாகும். நீங்கள் கோட்டையில் இருந்து பார்க்கும் முதல் பார்வையில் இதைச் சுற்றியுள்ள வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உங்களுடைய கண்களுக்கு புலப்படும். தற்பொழுது பாந்தவ்கார் கோட்டை மற்றும் புலிகள் சரணாலயம் உள்பிணைக்கப்பட்டதாய் இருக்கிறது. பெண்புலி மற்றும் அவற்றின் குட்டிகளை பார்பதற்கு இந்த கோட்டை ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.

LRBurdak

கிளைம்பர்ஸ் பாயிண்ட்

கிளைம்பர்ஸ் பாயிண்ட்

கிளைம்பர்ஸ் பாயிண்ட் என்பது பாந்தவ்கார் தேசிய பூங்காவில் உள்ள ஒரு அழகிய இடம் ஆகும். இது மலை உச்சியின் அழகிய காட்சிகள் மற்றும் சாகசம் விரும்பும் பயணிகளுக்கு ஒரு சிறந்த இடமாகும். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,005 அடி உயரத்தில் அமைந்துள்ளது. எனவே இங்கு மலையேறும் சுற்றுலா பயணிகள் இங்கிருந்து சரணாலயத்தின் அழகிய காட்சிகளை கண்டு களிக்க முடியும். நீங்கள் தாவரவியல் மாணவர் என்றால், இங்கு சால் மரங்களுடன் சேர்ந்து பௌஹினியா வாஹிலி மற்றும் புடியா ஸுபெர்பா போன்ற தாவரங்களை இந்த பள்ளத்தாக்கில் காணலாம்.

Swaroop Singha Roy

புகைப்பட காதலர்களே

புகைப்பட காதலர்களே


நீங்கள் இங்கிருந்து காட்டு விலங்குகள் மற்றும் பல்வேறு வகையிலான பறவைகளையும் காணலாம். கிளைம்பர்ஸ் பாயிண்ட் வெறும் பார்வைக்குரிய இடம் மட்டுமல்ல, இது புகைப்பட காதலர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் கண்ணுக்கினிய அழகின் சுரங்கமாக உள்ளது. பாந்தவ்காரில் நீங்கள் உங்களுடைய விடுமுறையை கழிக்கும் பொழுது கண்டிப்பாக இந்த இடத்திற்கு விஜயம் செய்ய வேண்டும்.

Ishan.chourasia.2001

 பாந்தவ்கார் ஹில் கடல்

பாந்தவ்கார் ஹில் கடல்

பாந்தவ்கார் ஹில் கடல் மட்டத்திலிருந்து 807 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதுவே பாந்தவ்கார் சரணாலயத்தின் மிக உயர்ந்த மலை ஆகும். இந்த மலை மணல் மற்றும் சரளைக் கற்களால் ஆனது. எனவே இந்த மலையை தண்ணீர் ஊடுருவிச் செல்கிறது. அது இந்த இடத்தின் மிகப் பெரிய வரமாகும். இந்த தனிப்பட்ட உருவாக்கத்தின் விளைவாக, இந்த மலையில் பல நீரூற்றுகள் உள்ளன. மேலும் இங்கிருந்து பல நீரோடைகள் உருவாகின்றன. இந்த மலையின் கிழக்கு பகுதியில் `சன்', மற்றும் `ஜொகிலா' நதிகள் ஓடுகிறது. மேற்கு பகுதியில் `உம்ரார்' நதி ஓடுகிறது. 3

Subhrajyoti Parida

சதுப்பு நிலங்கள்

சதுப்பு நிலங்கள்

பாந்தவ்கார் மலையின் உச்சிகள் பெரும்பாலும் தட்டையாகவே உள்ளது. மேலும் அந்த புல்வெளிகள் சதுப்பு நிலங்களாக காணப்படுகின்றன. இந்த மலை சரிவுகளில் பல்வேறு மூங்கில் மற்றும் சல் மரங்களால் நிறைந்து காணப்படுகிறது. இங்கு பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரமன ட்ரொசெர பெல்டாடா போன்றவை இங்கு உள்ள அச்கொரஸ் கலாமஸ் அல்லது புச் போன்ற தாவரத்துடன் இணைந்து காணப்படுகின்றன. பாந்தவ்கார் ஹில் அதன் அழகிய கண்ணுக்கினிய இயற்கை அழகு மற்றும் குளிர் காலநிலைக்கு மிகவும் பிரபலமானது. மலைகளின் மனதை மயக்கும் பார்வையை நாம் சுமார் 30 கி. மீ. தொலைவில் இருந்தும் பார்க்க முடியும்.

Brian Gratwicke

 டாலா கிராமம்

டாலா கிராமம்

டாலா கிராமம், பாந்தவ்கார் சுற்றுலாவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது பாந்தவ்கார் சரணாலய பகுதியில் உள்ள ஆழம் குறைந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் ஏராளமான சேறு வீடுகள் உள்ளன. இயற்கையில் அமைந்த சரிவுகளில் இந்த வீடுகளை பார்க்கும் பொழுது அது இயற்கை அன்னை நெய்த அழகிய ஆடை போல் காணப்படுகிறது. ஒரு சிறந்த சுற்றுலா கிராமமான இதில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் உள்ளன.

T R Shankar Raman

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அமைதியாக விடுமுறையை கழிக்கும் பொருட்டு இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். இயற்கை அன்னை இந்த கிராமத்திற்கு அளவிடமுடியாத அழகை அள்ளித் தந்திருக்கிறாள். இந்த கிராமத்தில் இருந்து நீங்கள் கீழிருந்து மேலாக பாந்தவ்கார் சரணாலயத்தை முழுவதும் பார்க்கலாம்.

Aadya Khatavkar

 மென்மையான காதலர்கள்

மென்மையான காதலர்கள்

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், நீங்கள் இந்த கிராமத்தில் இருந்து காட்டு விலங்குகளை பார்க்கலாம். டாலா கிராமம் ஒரு மென்மையான காதலர்களுக்கான இடம் ஆகும். இது சாகசம் விரும்பும் பயணிகளுக்கான இடமாகவும் கருதப்படுகிறது. இந்த கிராமத்திற்கு செல்லும் சுற்றுலா உங்களுடைய உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். நீங்கள் இந்த கிராமத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கை என்றும் ஒரு அற்புதமான நினைவாக இருக்கும்.

Teesta31

 கார்புரி அணை

கார்புரி அணை

கார்புரி அணை பாந்தவ்காரின் புறநகரில் அமைந்துள்ளது. இது பாந்தவ்கார் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணை இதன் கட்டுமானத்திற்காக பிரபலமாக உள்ளது. அணையை சுற்றியுள்ள இடங்கள் கண்ணுக்கினிய காட்சியை வழங்குகின்றன. ஏனெனில் அணையில் உள்ள தண்ணீருக்காக பல்வேறு வகையிலான பறவைகள் வருகின்றன. மேலும் இங்கு பல்வேறு வகையிலான மீன்கள் உள்ளன.

Ekabhishek -

பறவைகள்

பறவைகள்

ஈரநிலப் பறவைகளான பிளாக் இபிஸ், ஸரஸ் கொக்குகள், எக்ரெட், பைய்ட் வேக்டைல், ரெட்-வாட்டெல்ட் லாப்விங்க், லெஸ்ஸர் அட்ஜுடண்ட் நாரை, இந்திய குள ஹெரான் மற்றும் பொதுவான மற்றும் பல வண்ணங்களால் ஆன கிங்க்பிஷ்ஷர் போன்றவைகள் காணப்படுகின்றன. இங்கு நாம் ஆண்டு முழுவதும் பறவை ஆர்வலர்களை அவர்களுடைய விலையுர்ந்த உபகரணங்களுடன் காணலாம்.

Francesco Veronesi

பாந்தவ்கார் சுற்றுலா

பாந்தவ்கார் சுற்றுலா

கார்புரி அணை என்பது ஒரு கம்பீரமான 20 கிலோமீட்டர் நீளமுடய அணை ஆகும். இந்த அணை அழகான மற்றும் வண்ணமயமான பறவைகள் பற்றி பேசி மற்றும் நடப்பதற்கான ஒரு சிறந்த இடம் ஆகும். எனவே இது பாந்தவ்கார் சுற்றுலாவில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது.

A.Savin

Read more about: travel, temple, falls, forest