» »பல்லாயிரம் ஆண்டுகளாக ராணி ஒருவர் வாழும் ஏரி! எங்க இருக்கு தெரியுமா?

பல்லாயிரம் ஆண்டுகளாக ராணி ஒருவர் வாழும் ஏரி! எங்க இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லோய் ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில் உள்ளது. இந்த ஏரிக்கு பயணம் செய்வோம் வாருங்கள்.

லாட்ஸம்

லாட்ஸம்

ஸில்லோய் ஏரி உள்ளூர் மக்களால் லாட்ஸம் என அழைக்கப்படுகிறது. ஏரி அமைந்துள்ள மனதை மயக்கும் இடம், நம்முடைய பயணத்தை பயனுள்ளதாக செய்கிறது. மியான்மர் எல்லையில் அமைந்துள்ள பட்கை சரிவுகள் வரை உள்ள இந்த ஏரி 0.25 முதல் 0.30 சதுர கி.மீ. பரப்பளவுடையது. இந்த ஏரியின் ஆழம் 4 மீட்டர் ஆகும்.

Jim Ankan Deka

 ஏரியில் வாழும் ராணி

ஏரியில் வாழும் ராணி

ஒரு பழைய, வியப்பு மிகுந்த கதை உள்ளூர் மக்களால் இந்த ஏரியைப் பற்றி சொல்லப்படுகிறது. அந்த கதை இந்த ஏரியின் புகழை மங்கச் செய்கிறது. அந்த வாய் வழிக் கதையின் படி, ஒரு ஜோடி மர்மமான முறையில் இந்த ஏரியின் அருகே தங்கள் பெண் குழந்தையை இழந்து விட்டது. அவர்கள் எவ்வளவோ முயற்சி போதிலும் ஏரியின் மையத்தில் இருந்து அவளை திரும்ப பெற முடியவில்லை. அதன் பின் அந்த இளம் பெண் ஏரி ராணி ஆனதாக நம்பப்படுகிறது. மக்கள் அந்த இளம் பெண்ணை லாட்ஸம் என அழைக்கின்றனர். அதன் பின்னர் இந்த ஏரி இன்றும் குடிநீருக்காகவோ, பாசனத்திற்கோ அல்லது மீன்பிடிக்கவோ பயன்படுத்தப்படவில்லை. .

Sharada Prasad CS

 எப்படி செல்வது

எப்படி செல்வது

கோஹிமாவிலிருந்து 271கிமீ தூரத்திலும், மெலுரியிலிருந்து 108 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த ஏரி. இதன் அருகிலுள்ள விமான நிலையம் திமாப்பூர். இங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் ஏரியை எளிதில் அடையலாம். கோஹிமாவிலிருந்து பேருந்துகள் மூலம் ஏரியை அடைவது எளிது. நெருங்கிய ரயில் நிலையமும் திமாப்பூரில் இருப்பதுதான். உங்கள் பகுதியிலிருந்தே பேருந்தில் பயணிப்பதாயிருந்தால், கோஹிமா வரை வந்துவிட்டு, அங்கிருந்து உள்ளூர் பேருந்துகளில் பயணிக்கலாம்.

Khamo88

என்னவெல்லாம் செய்யலாம்

என்னவெல்லாம் செய்யலாம்


இங்கு நீங்கள் நிறைய மீன்பிடி விளையாட்டுத் தளங்களை காணமுடியும். ஜூன் முதல் செப்டம்பர் வரை அதற்கான காலமாகும். சைபீரியன் கொக்குகளும், மற்ற நாட்டு பறவைகளும் நிறைய இங்கு வருகை தருகின்றன. படக்கை மலைகளில் நிறைய இடங்கள் சுற்றுலா அம்சங்களோடு நிறைந்திருக்கின்றன.

P Jeganathan

 அருகில் காணவேண்டியவை

அருகில் காணவேண்டியவை

கெசக்கேனோ கிராமம், குளோரி சிகரம், பெக் நீர்வீழ்ச்சி, ஷுடு ஏரி ஆகியன இங்கு அருகில் கட்டாயம் போகவேண்டிய தளங்களாகும்.

Sumitotimi

Read more about: travel lake trekking summer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்