» »ஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகள்... தரிசனத்திற்கு போக ரெடியா ?

ஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகள்... தரிசனத்திற்கு போக ரெடியா ?

Written By: Sabarish

முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது அனைவரும் அறிந்ததே. நம் எல்லோருக்கும் அறுபடையின் அனைத்து வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அப்படி ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி ஒரு சில விடுமுறை நாட்களில் சென்று வருவது என தெரியாமல் உள்ளீர்களா ?. கவலைய விடுங்க. இந்த ரூட்டை எல்லாம் பாலோப் பண்ணி போனா, மூனே நாள்ல அறுபடை முருகளை வழிபட்டு வரத்தை அள்ளி வரலாம்.

சிறந்த வாகனம்

சிறந்த வாகனம்

மூன்றே நாட்களில் அறுபடை வீடுகளுக்கு சென்று வர வேண்டும் என திட்டமிடப்பட்டுள்தால் இருசக்கர வாகனத்தில் செல்வது அவ்வளவு சிறந்ததாக இருக்காது. ஏனெனில், உடல் சோர்வு, வாகன பெட்ரோல் என அதிகப்படியானவற்றை விரையம் செய்ய வேண்டியிருக்கும். பேருந்து அல்லது காரில் பயணிப்பதின் மூலம் புத்துணர்ச்சி குறையாமல் முருகனை வழிபடலாம். மேலும், இதில் திருத்தணி தவிர மற்ற ஜந்து வீடுகளும் குறைந்த பயணத்தூரம் கொண்டது. திருச்செந்தூரில் தொடங்கி திருத்தணியில் முடியும் வரைபடம் இங்கே காட்டப்பட்டுள்ளது. உங்கள் வசதியை பொறுத்து நீங்கள் இதே வழித்தடத்திலோ அல்லது திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்கலாம்.

Ssriram mt

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?

உங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களில் ஒவ்வொரு கோவிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரத்தை அறிந்து திட்டமிட்டு செல்லுங்கள்.

Mahinthan So

சென்னை - திருத்தணி

சென்னை - திருத்தணி

சென்னையில் இருந்து சுமார் 92 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருத்தணி முருகன் கோவில். சென்னையில் இருந்து, படியனல்லூர், வெள்ளியூர், திருவள்ளூர் வழியாக ஆற்காடைக் கடந்து திருத்தணி முருகன் கோவிலை அடையலாம்.

Srithern

திருத்தணி

திருத்தணி

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து திருத்தணிக்கு போகலாம். சென்னையிலிருந்து திருத்தணிக்கு மின்சார இரயில் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. காரில் சென்றால் நேராக கோவிலுக்கே சென்று விடலாம். எப்படியும் மதியம் 1 மணிக்குள் தரிசனம் ஆகிவிடும். அன்றே நீங்கள் ஊர் திரும்பிவிடலாம். நேரமிருந்தால் அங்கிருந்து வேலூர் பக்கத்தில் உள்ள தங்க கோவிலுக்கும் சென்று வரலாம்.
தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

Srithern

திருத்தணி - சுவாமிமலை

திருத்தணி - சுவாமிமலை


திருத்தணி முருகன் கோவிலில் இருந்து 295 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுவாமிமலை. பழனியிலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஏறினால் சுவாமிமலையை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. ஒரு வேளை தாமதமானால் தஞ்சாவூரிலிருந்து காரில் போவது நல்லது. உங்களுக்கு நேரம் இருந்தால் இன்னும் நிறைய கோவில்களும் கும்பகோணத்தில் பார்ப்பதற்கு இருக்கிறது. கும்பகோணம் பித்தளை பாத்திரங்கள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு பெயர் பெற்றது.
தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை

Jothi Balaji

சுவாமி மலை - பழனி

சுவாமி மலை - பழனி


சுவாமிமலையில் இருந்து 234 கிலோ மீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்து அமைந்துள்ளது பழனி ஆண்டவர் கோவில். சுவாமிமலையில் இருந்து திருச்சியை அடைந்தால் அங்கிருந்து பழனிக்கு காரில் போகலாம். பேருந்தில் செல்வதாக இருந்தால் திண்டுக்கல் சென்று அங்கிருந்து போவது எளிது. அங்கு போய்ச்சேர இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும். மலை அடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல படி, வின்ச் மற்றும் ரோப் கார் இருக்கிறது. ரோப்காரில் 5 நிமிடத்தில் சென்று விடலாம். தரிசனம் முடிந்ததும் சீக்கிரம் கீழே வந்து முடிந்தவரை 1 மணிக்கு முன்பாக பழனியிலிருந்து கிளம்பினால் அன்றே பழமுதிர்சோலை முருகனை பார்த்து விடலாம்.
தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

SivRami

பழமுதிர்சோலை - திருப்பரங்குன்றம்

பழமுதிர்சோலை - திருப்பரங்குன்றம்

பழமுதிர்சோலை கோவிலும், திருப்பரங்குன்றம் கோவிலும் மதுரைக்கு அருகில் இருக்கிறது. திருசெந்தூரிலிரிந்து மதுரைக்குச் செல்ல மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மதுரைக்குப் போகும் நேரத்தை பொறுத்து இரண்டில் எந்த கோவிலுக்கு முதலில் போகலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால் பழமுதிர்சோலை மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மற்றும் மலை மீது உள்ளதால் கோவிலின் நடையை ஆறு மணிக்கே மூடி விடுவார்கள். அதனால் நான்கு மணிக்கு முன்னரே மதுரைக்கு வந்துவிட்டால் மட்டுமே அங்கு முதலில் செல்லவும்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

காரிலோ அல்லது பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு போகலாம். மதுரை செல்ல மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் முதலில் திருப்பரங்குன்றம் கோவிலை தரிசித்து விடலாம். பேருந்தில் 30 நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகும். நேரமிருந்தால் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர்மகால், மற்றும் கடைகளுக்கும் சென்று வரலாம். முதல் நாள் பழமுதிர்சோலை செல்ல முடியவில்லை என்றால், இரண்டாம் நாள் காலை முதல் கோவிலாக பழமுதிர்சோலை செல்லவும். மூன்று கோவில்கள் செல்ல வேண்டும் என்பதால் 6 மணிக்கே கோவிலை அடைய முயற்சி செய்யுங்கள்.
திருப்பரங்குன்றம் தரிசன நேரம் : காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை) மதியம் 1 மணியிலிருந்து 4 மணிவரை நடை சாத்தப்படும்
பழமுதிர்சோலை தரிசன நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை

Ssriram mt

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

மதுரையில் இருந்து தூத்துக்குடி வந்து அங்கிருந்து பேருந்து அல்லது காரில் திருச்செந்தூருக்கு வரலாம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கு உள்ள நாழி கிணறு மற்றும் வள்ளிகுகையையும் நேரம் இருந்தால் பார்த்துவிடுங்கள். முதல்முறை வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக இதனை குறிப்பிடலாம்.
தரிசன நேரம் : காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

Sathish DJ

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்