» »கோடையை குளுகுளுவாக்கும் தென்மலை...

கோடையை குளுகுளுவாக்கும் தென்மலை...

Written By: Sabarish

தெனிந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் ஏராளமான சுற்றுலாத்தளங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் பல ஆயிரம் கிலோ மீட்டர் விரித்து வைத்த பச்சைப் பாய்போல மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சுற்றுலா என்றும் நாம் வெறுக்காத ஒன்று. என்னதான் இந்த மலைத் தொடரில் இருக்கும் பகுதிகளுக்கு நாம் சுற்றுலா சென்றிருந்தாலும் இதில், அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அத்தகைய சுற்றுலாத் தலத்திற்கு ஒர் ரவுண்டு போலாமா..!

இந்தியாவின் முதல் சூழல் சுற்றுலா

இந்தியாவின் முதல் சூழல் சுற்றுலா


கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தென்மலா பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சூழல் சுற்றுலா. இந்த தென்மலை கொல்லம் மாவட்டத்தில் புனலூர் என்ற நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் முதல் சூழல் சுற்றுலா மையம் என்ற பெருமையை இவ்விடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kerala Tourism from India

தென்மலை

தென்மலை


இயற்கைக்கு சீர்கேடு விளைவிக்காமல் பசுமைக் காட்டை கொஞ்சி ரசிக்கவும், அறிவியல் பூர்வமாக அவ்விடங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் விரும்புகிறவர்களுக்காகவே இந்தச் சுற்றுலாத் தலம் பிரத்தேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Jaseem Hamza

சாகச விரும்பிகளுக்காக...

சாகச விரும்பிகளுக்காக...


பனி மூட்டத்தில் திடீரென விலகும் மேகக்கூட்டத்தின் ஊடாக வெள்ளித் தட்டுபோல தென்மலாவில் இருக்கும் ஏரியில் நாம் படகு பயணம் செல்லலாம். கரடுமுரடான மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டலாம், ட்ரெக்கிங் பயணமும் மேற்கொள்ளலாம். இடிமுலங்கான் பாரா, ராக் வூட், ரோஸ் மலா என ட்ரெக்கிங் செல்ல மூன்று அற்புதமான இடங்கள் இருக்கின்றன. நீங்கள் சாகச விரும்பியாக இருந்தால் தராளமாக உங்களுக்கு என்ஜாய் தான்.

Haravinth rajan

எப்போது செல்லலாம் ?

எப்போது செல்லலாம் ?


பள்ளி கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் இங்கு பயணம் சென்று வருவது ஆகச்சிறந்தது. விடுமுறை நாட்களை பயனுள்ளதாகச் செலவிட இதைத் தவிற வேறுபகுதி இருக்க முடியுமா என்ன ?. குழந்தைகளுக்கு மட்டுமில்லைங்க, வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க பெரியவர்களே இங்கு சென்று மகிழ்ந்து வரலாம்.

Jaseem Hamza

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


தென்மலைக்கு அருகில் பாலருவி, மாம்பழத்தாரா பகவதி அம்மன் கோவில், கோட்டயம் தேவி கோவில், 13 கண் பாலம், அம்பநாடு எஸ்டேட் உள்ளிட்டவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

Akhilsunnithan

13 கண் பாலம்

13 கண் பாலம்


தென் மலைக்கு அருகில் உள்ள 13 கண் பாலம் மிகவும் பிரசிதிபெற்றதாகும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த பாலம் வழியே பகவதிபுரம் முதல் ஆரியங்காவு இடையே 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மலைக்குகையும், கழுதுருட்டி- தென்மலை- இடமண் இடையே 4 மலைக் குகைகளும், 5 பெரிய பாலங்களும், 120-க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன.

Sktm14

பாலருவி

பாலருவி

தென்மலையில் இருந்து சுமுர் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாலருவி. அடர் வனப் பகுதியின் நடுவே, பாறை முகட்டில் இருந்து வென்மை நிற பாலை ஊற்றியதைப் போல காட்சியளிக்கும் இது நிச்சயம் உங்களது மனதை மயக்கச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Jaseem Hamza

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


தென்மலை ரயில் நிலையம் சுற்றுலாத் தலத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. அம்ரிதா எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், கேப் மும்மை எக்ஸ்பிரஸ், சென்னை மெயில், எர்நாடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் மூலம் தென்மலா ரயில் நிலையத்தை அடையலாம்.

Jayeshj

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்