Search
  • Follow NativePlanet
Share
» »ராஜஸ்தானில் சாகசங்கள் செய்வோம் வாருங்கள்! #சாகசஉலா

ராஜஸ்தானில் சாகசங்கள் செய்வோம் வாருங்கள்! #சாகசஉலா

ராஜஸ்தானில் சாகசங்கள் செய்வோம் வாருங்கள்! #சாகசஉலா

By Udhaya

இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. 1200 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தில் இந்த மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலம் தனது செழுமையான வரலாற்றுப்பின்னணி காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக திகழ்கிறது. புராதன தொல்லியல் ஸ்தலங்கள் மற்றும் அற்புதமான பருவநிலை போன்றவை இந்த ஸ்தலத்தின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. இப்படிபட்ட இடத்தில் சாகசபயணம் செய்வது சாகச விரும்பிகளான உங்களுக்கு மிகவும் பிடித்த விசயம்தானே.. என்ன தயாரா சாகசத்தை தொடங்குவோமா?

மௌண்ட் அபு

மௌண்ட் அபு


நக்கி ஏரி, சன்செட் பாயிண்ட், டோட் ராக், சிட்டி ஆஃப் அபு ரோட், குரு ஷிகார் பீக் மற்றும் மௌண்ட் அபு சரணாலயம் போன்றவை மௌண்ட் அபு ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். மேலும், பல வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களையும் இது பெற்றுள்ளது. தில்வாரா ஜெயின் கோயில், ஆதார்தேவி கோயில், தூத் பாவ்ரி, ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் மற்றும் ஆச்சால்கர் கோட்டை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மௌண்ட் அபு நகருக்கான பிரயாண வசதிகள் விமானம், ரயில் மற்றும் சாலைவழி போன்ற போக்குவரத்து வசதிகளால் மௌண்ட் அபு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மௌண்ட் அபு நகரத்துக்கு அருகில் 176 கி.மீ தூரத்தில் உதய்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. வருடமுழுவதுமே இம்மலை நகரத்தில் இனிமையான பருவநிலை நிலவினாலும் கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா மெற்கொள்வது சிறந்தது.

Andreas Kleeman

சோனார் குய்லா

சோனார் குய்லா

ராஜஸ்தானில் உள்ள எல்லா பாலைவன நகரங்களையும் போலவே ஜெய்சல்மேர் நகரமும் இங்குள்ள ராஜகம்பீர கோட்டைகள், கோட்டை மாளிகைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கோயில்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ஜெய்சல்மேரின் பெருமைக்குரிய சின்னமாக கருதப்படும் ஜெய்சல்மேர் கோட்டை இந்த தங்க நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். சூரியன் மறையும் அந்தி நேரத்தில் இந்த மஞ்சள் நிற மணற்பாறைகளால் ஆன கோட்டை தங்க நிறத்தில் ஜொலிக்கின்றது. அதனாலேயே இது தங்க கோட்டை அல்லது சோனார் குய்லா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோட்டைக்கு அக்காய் போல், ஹவா போல், சூரஜ் போல் மற்றும் கணேஷ் போல் என்ற வாசல்கள் உள்ளன. ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலையை இணைத்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Adrian Sulc

 படிக கண்ணாடி கலைப் பொருள்களின் ஊர்

படிக கண்ணாடி கலைப் பொருள்களின் ஊர்

‘சிட்டி பேலஸ் மியூசியத்தில் ராஜவம்சம் தொடர்பான பல அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனையின் ஒரு அங்கமாக ஸ்படிகக்கண்ணாடி கலைக்கூடத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இங்கு அற்புதமான ஓஸ்லர் படிகக்கண்ணாடி கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அழகிய சொகுசு இருக்கைகள், ஆபரண வேலைப்பாடுகளுடன் கூடிய தரை விரிப்புகள், ஸ்படிக வேலைப்பாடு கொண்ட ஆடைகள், நீர் ஜாடிகள் மற்றும் பீங்கான் பொருட்கள் ஆகிய பொருட்களையும் இங்கு காணலாம். மற்றொரு பிரசித்தமான அருங்காட்சியகமான ‘அஹார் தொல்லியல் அருங்காட்சியகம்' புராதன கால மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புடைய அரிய பொருட்களைக் கொண்டுள்ளது. சஹேலியான் கி பாரி, படா மஹால், குலாப் பாக், மஹாராணா பிரதாப் மெமோரியல், லக்ஷ்மி சௌக் மற்றும் தில் குஷால் போன்ற பல அழகிய தோட்டங்களும் மாளிகைகளும் இங்கு நிறைந்துள்ளன.

S Ballal

ராஜஸ்தானின் வீரப்பாரம்பரியம் கொண்ட கோட்டை

ராஜஸ்தானின் வீரப்பாரம்பரியம் கொண்ட கோட்டை


ரணதம்போர் ஸ்தலத்தின் மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் 944 ம் ஆண்டைச்சேர்ந்த ரணதம்போர் கோட்டையாகும். ராஜஸ்தான் மாநிலத்தின் வீரப்பாரம்பரியம் மற்றும் பல வரலாற்றுப் பின்னணிகளின் மகுடமாக இந்த ரண்தம்போர் கோட்டை கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. சுற்றியுள்ள பீடபூமிப்பகுதியிலிருந்து 700 அடி உயரத்தில் பரந்த நிலப்பரப்பில் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிவன் கோயில், விநாயகர் கோயில் மற்றும் ராமர் கோயில் ஆகிய கோயில்களை இந்த கோட்டைக்குள் தரிசிக்கலாம். இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இந்த கோட்டை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ரணதம்போர் சுற்றுலாத்தலத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஜெய்ப்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் மற்றும் சவாய் மாதோபூர் ரயில் நிலையம் ஆகியவை முறையே ரண்தம்போருக்கு அருகிலுள்ள விமானத்தளமாகவும் ரயில் நிலையமாகவும் அமைந்துள்ளன. வருடமுழுதும் மிதமான பருவநிலையை ரண்தம்போர் பிரதேசம் பெற்றுள்ளது. அக்டோபர் முதல் ஏப்ரல் வரையான இடைப்பட்ட காலத்தில் பருவநிலை இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிப்பதால் இப்பருவத்தில் ரணதம்போருக்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது.

THerrington

 பரதரின் பெயரில் அமைந்த ஊர்

பரதரின் பெயரில் அமைந்த ஊர்

ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பரத்பூர் நகரம் ராமபிரானின் சகோதரரான பரதரின் பெயராலேயே பரத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பரத்பூர் நகர மக்கள் ராமரின் மற்றொரு தம்பியான லக்ஷ்மணனையும் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அதோடு 'லோஹாகர்' என்றும் அறியப்படும் பரத்பூர் நகரம் ஜெய்ப்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வழியாகவும் இருந்து வருகிறது. மேலும் ஹரியானா, உத்தர்பிரதேஷ், தோல்பூர், கராவ்லி, ஜெய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்களுடன் பரத்பூர் நகரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

பரத்பூருக்கு அருகில் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்களின் அல்லது பேருந்து மூலம் வெகு சுலபமாக பரத்பூரை நகருக்கு வந்து சேரலாம்.

Anupom sarmah

Read more about: travel trip india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X