» »விளம்பி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 1

விளம்பி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 1

Written By: Udhaya

அதிர்ஷ்டம் என்பது வந்தும் நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அதற்கு பலன் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் அதனுடன் தன் உழைப்பும் சிறிது சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு இந்தந்த கோயில்களுக்கு சென்று வந்தால் வாழ்வில் பணம் மட்டுமல்ல ஆரோக்கயமும், அதிர்ஷ்டமும் அள்ளி அள்ளி வீசப்போகிறது இந்த புத்தாண்டு. அத்துடன் உங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டு, திருமணத்தடை, கல்வி, வியாபாரம் பெருகி உங்கள் அனைத்து செல்வங்களும் அதிகரிக்கப்போகிறது.

மொத்த முள்ள பன்னிரெண்டு ராசிகளில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிக பலன்கள் கிடைக்கப்போகிறது என்றாலும், மற்ற ராசிக்காரர்கள் இங்கு குறிப்பிட்டுள்ள கோயில்களுக்கு சென்று வருவதால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, உழைக்கும் ஆர்வமும், கல்வியில் நாட்டமும், தொழிலில் விருத்தியும் ஏற்படும். வாருங்கள் உங்கள் ராசிக்கேற்ற கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். இன்றைய ஆஸ்ட்ரோடிராவல் தொகுப்பில் நாம் பன்னிரெண்டு ராசிக்கேற்ற சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு செல்வோம்.

புளியரை தட்ணாமூர்த்தி கோயில்

புளியரை தட்ணாமூர்த்தி கோயில்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். பசுமை கொஞ்சும் பக்த தலமாக திகழ்ந்து வரும் இந்த புளியரை தட்ணாமூர்த்தி கோயிலுக்கு மேஷ ராசிக்காரர்கள் சென்று வர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் உயர்ந்து குடும்பத்தில் திருமண பேச்சு நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும்.

இந்த கோயிலில் சதாசிவ மூர்த்தி, சிவகாமி அம்மையார் கோயிலில் தனி சன்னதியில் குருபகவான் தட்சனாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். புளியமரத்தின் பொந்திலிருந்து வெளிப்பெயர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் இந்த கோயிலுக்கு இப்படி பெயர் வந்தது.

தென்காசி, செங்கோட்டையிலிருந்து இந்த ஊருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் வாடகை வண்டிகள், தானிகள் (ஆட்டோக்கள்) மூலமாகவும் இந்த கோயிலை அடையலாம்.

Parvathisri

 சோலைமலை சுப்ரமணிய சுவாமி கோயில்

சோலைமலை சுப்ரமணிய சுவாமி கோயில்

மேஷ ராசிக்காரர்களே,... உங்கள் ராசிக்கு நீங்கள் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சோலைமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தமிழ்புத்தாண்டு அன்று வழிபட்டு வர குருபகவான் மூலம் உங்களது வாழ்வில் இன்பங்கள் வந்தேறும். வியாபாரத்திலும், பிற உத்தியோகத்திலும் கூடுதல் இலாபத்தை பெற்று செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியடைவீர்.

மதுரையில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஊர். வாடகை வண்டிகள் தானிகள் மூலமாகவும் இந்த இடத்தை அடையலாம்.
Empty Frames Photography

ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயில்

ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயில்

சென்னை மாவட்டம் ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயிலுக்கு சென்று வந்தால் ரிஷிப ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். பல கஷ்டங்கள் இந்த ஆண்டில் உங்களுக்கு வந்தாலும் நீங்கள் விடா மனதைரியம் கொண்டு அதை விரட்டி அடிப்பீர்கள். உங்கள் மன வலிமையை அதிகரிக்க வண்டலூர் அருகேயுள்ள லட்சுமி கோயிலுக்கு சென்றுவாருங்கள்.

வண்டலூரிலிருந்து நடந்தோ அல்லது வாடகை வண்டிகள், தானிகள் மூலமாகவோ செல்லும்படியாக அமைந்துள்ளது இந்த கோயில். இந்த கோயிலுக்கு சென்று லட்சுமி குபேர பூசை செய்துவந்தால் நீங்கள் விரைவில் கோடீஸ்வரர் ஆகும் யோகம் உங்களுக்கு வந்து சேரும். உழைப்பும் நேர்மையும் அதிர்ஷ்டமும் இந்த கோயிலுக்கு வந்தால் உங்களுக்கு கிடைக்கும்.

Dineshkannambadi

 புன்னைநல்லூர் முத்துமாரி துர்க்கை கோயில்

புன்னைநல்லூர் முத்துமாரி துர்க்கை கோயில்


தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூர் முத்துமாரி துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வந்தால் தேடிவந்த பிரச்சனைகள் விலகி ஓடும். அதுமட்டுமின்றி கடின உழைப்பும், தொலைநோக்குச் சிந்தனையும் என உங்களை நிரூபிக்கும் காலமாக இது இருக்கும். ரிஷப ராசி உடையோருக்கு சூரியன் இம்மாதம் 14ம் தேதியன்று பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார். தொடர்ந்து சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார்.

தஞ்சாவூரிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்துக்கு வாடகை வண்டிகள், தானிகள் மூலமாக எளிதில் வந்தடையலாம். வெறும் பதினைந்து நிமிடங்களில் இந்த இடத்தை அடையமுடியும்.

Srithern

துர்க்கையம்மன் கோயில் பட்டீச்சரம்

துர்க்கையம்மன் கோயில் பட்டீச்சரம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டீச்சரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கு சென்று வந்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும். குருவின் பார்வையால் மிகுந்த பலன்கள் கிடைக்கும். செல்வம் வந்தேறும். எதிரிகள் தொல்லை மற்றும் வீண் அலைச்சல்களைத் தவிர்த்து இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைகிறது. ஆனால் கவலைப் படவேண்டாம், பட்டீச்சரம் கோயிலுக்கு சென்று வழிபட்டால் துன்பம் நீங்கும்.

இந்த அம்மனுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் எட்டு கரங்களில் ஒன்றில் கிளியை வைத்துள்ளார். காலை மகிஷாசுரன் தலைமேல் வைத்துள்ளார். ஆறடி உயரம், அழகான புடவை, எலுமிச்சை, ரோஜா மாலை அணுவித்து காட்சிதருகிறார்.

Ssriram mt

கடலூர் வரதராஜ பெருமாள் கோயில்

கடலூர் வரதராஜ பெருமாள் கோயில்

தமிழ்புத்தாண்டின் தொடக்கம் முதல் 2019 பிப்ரவரி வரை ராகு இரண்டிலும், கேது எட்டிலும் தொடர்கிறது. எனவே, கடலூர் மாவட்டம், கண்ணங்குடியில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று மூலவருக்கு பூஜை செய்து வர சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சேர் மார்க்கெட், பங்குதாரர்கள் உள்ளிட்டவை மூலம் நல்ல வரவு கிடைக்கும்.

கடலூரிலிருந்து 62 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

Ssriram mt

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

பொன்பேத்தி பவானீஸ்வரர் கோயில்

பொன்பேத்தி பவானீஸ்வரர் கோயில்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 30கிமீ தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அமைந்துள்ளது இந்த பைரவர் கோயில். இது பவானீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பைரவ சித்தர் என்பவர் நிறுவிய பைரவர் , சொர்ணாதேவியுடன் அருள்பாலித்து வருகிறார். கடக ராசிக்காரர்கள் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் குரு பகவானால் ஏற்படும் மன உளைச்சல் குறையும். நேர விரயம், பொருள் விரயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வந்தால் அவற்றின் பாதிப்பு குறையலாம்.

Vitbaisa

 பவளமலை முத்துகுமார சுவாமி திருக்கோவில்

பவளமலை முத்துகுமார சுவாமி திருக்கோவில்

கடக ராசி உடையோருக்கு சனிபகவான் தொடர்வதால் சற்று மனவுளைச்சல்கள் வந்துசெல்லும். ஈரோடு மாவட்டம், பவளமலையில் உள்ள முத்துகுமார சுவாமி திருக்கோவிலுக்கு தமிழ்புத்தாண்டு அன்று சென்று வழிபட்டு வர குருபகவான் மூலம் மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளும் அரங்கேறும்.

ஈரோட்டிலிருந்து பவளமலை 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, வாடகை வண்டிகள் மூலம் பயணித்தால் எளிதில் சென்றடையலாம்.

நந்தீஸ்வரர் கோயில்

நந்தீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கூடுவாஞ்சேரி என்று அறியப்பட்டாலும் இந்த ஊர் நந்திவரம் என்றும் அழைக்கப்படுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூரைத் தாண்டியதும் வரும் ஊர்தான் கூடுவாஞ்சேரி. இங்கு நந்தீஸ்வரர், சௌந்தர்யநாயகியுடன் அருள்பாலிக்கிறார்.

SKsiddhartthan

 கார்க்கோடேஸ்வரர் கோவில்

கார்க்கோடேஸ்வரர் கோவில்


சிம்ம ராசிக்காரர்களுக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் தொடர்வதால் வீட்டில் மகிழ்ச்சிகரமான விசேச நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாத வகையில் தொழிலில் லாபம் அடைய அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மறைமுக எதிரிகளால் சில தடங்கல்களும் ஏற்படும். இதனைத் தவிர்க்க அரியலூரில் உள்ள அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

இந்த கோயில் அரியலூரிலிருந்து 40கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மணி நேர பயணத்தில் இந்த கோயிலை அடையமுடியும்.

தில்லை காளி கோயில்

தில்லை காளி கோயில்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் அமைந்துள்ளது இந்த தில்லை காளிகோயில். 1229ம் ஆண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு வளமாக அமைய சில தடைகள் இருக்கலாம். ஆனால் செல்வம் நிச்சயம் வந்தே தீரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். எனவே நீங்கள் இந்த கோயிலுக்கு சென்றுவந்தால் லாபமோ லாபம்தான்.

Arnab Dutta

தகட்டூர் பைரவர் கோயில்

தகட்டூர் பைரவர் கோயில்

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 2019 பிப்ரவரி வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எத்ததனை பிரச்சனைகள் வந்தாலும் அதனைக் கடந்து செல்லும் மனவலிமை கிடைக்கும். இருப்பினும் 4யில் சனி தொடர்வதால் நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் எழுந்தருளியுள்ள பைரவரை வழிபடுவது மேலானது. இதனால், செல்வாக்கும், பங்குச் சந்தையில் நல்ல வரவும் கிடைக்கும்.

நாகப்பட்டினத்திலிருந்து 53கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்