Search
  • Follow NativePlanet
Share
» »திகிலூட்டும் பேய் கனவால் நிம்மதி போச்சா... கொஞ்சம் கூட தாமதிக்காம இங்க போய்ட்டு வாங்க ?

திகிலூட்டும் பேய் கனவால் நிம்மதி போச்சா... கொஞ்சம் கூட தாமதிக்காம இங்க போய்ட்டு வாங்க ?

PC : Fayaz29

கனவுகளில் பல வகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு நமக்கு மனதளவிலோ, உடலளவிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், இந்த கெட்ட கனவு இருக்கே.. உங்களுக்கு ஒரு பயத்தை காட்டிவிட்டுச் சென்றுவிடும். அடுத்த ஒரு சில நாட்கள்ள உங்களை பாடாய் படுத்திவிடும்.

ஏன் இந்த கெட்ட கனவுகள் வருகின்றன ?

ஏன் இந்த கெட்ட கனவுகள் வருகின்றன ?

PC : Henry Fuseli

இயல்பாக நமது ஒவ்வொரு செயலும், சுற்றியுள்ள தன்மையுமே நமக்கான வாழ்நாளை தீர்மாணிக்கின்றன. அப்படித்தான் இந்தக் கனவுகளும். சிலருக்கு கனவில் கடவுள் வரும். அவர்களைச் சுற்றிலும் பல நல்ல விசயங்கள் அன்றாடம் நடைபெறுவதன் மூலம் இது ஏற்படுகிறது. ஆனால், சிலருக்கு பயமுறுத்தும் பேய்க் கனவுகளே வரும். இப்படிப்பட்ட பேய் கனவினால் வரும் பயமும், தீமையும் விலக என்ன செய்யலாம்?

தாமதம் வேண்டாம்

தாமதம் வேண்டாம்

PC : Aruna

இதுபோன்ற பேய் கனவுகள் அன்றாடம் வந்து உங்களது தூக்கத்தையும், வாழ்நாட்களையும் தொடர்ந்து இடையூறு செய்கிறது என்றால் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை உங்களுக்கு வரும் தீமையை முன்கூட்டி தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை மணிபோல் வந்துள்ளது. இதுபோன்ற அமானுஷ்யம் நிறைந்த கனவுகள் வந்தோர் உடனடியாக இந்த கோவிலுக்கு போய் பரிகாரம் செய்வதன் மூலம் நெருங்கி வந்த தீமை விலகி ஓடும்.

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?

PC : Aruna

கேரள மாநிலம் சிட்டிலன்சேரி என்னும் பகுதியில் உள்ளது நெட்டூரி பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகள் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை. மேலும், நாகதோஷம், கனவில் பாம்பு வருதல் உள்ளிட்டவற்றில் இருந்தும் இந்த திருத்தலம் காக்கிறது.

திருத்தல அமைப்பு

திருத்தல அமைப்பு

PC : Ssriram mt

நெட்டூரி பகவதி அம்மன் கோவிலில் விக்னேஸ்வரர், சிவன் மற்றும் நவகன்னிகைகளும் உள்ளனர். ஆதிசேஷனைப் போல் காட்சியளிக்கும் ஐந்து தலை நாகம் இந்தக் கோவிலின் சிறப்பாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பகவதி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்து தீவினைகளை விலக்கிக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

PC : Aruna

கேரளாவில் ஆலப்புழா அருகே அமைந்துள்ள இந்த பகவதி அம்மன் கோவில் சென்னையில் இருந்து சுமார் 690 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில் இருந்து சுமார் 264 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. கோவையில் இருந்து வருவோர் பாலக்காடு, திருசூர், கொச்சி, ஆலப்புழா அல்லது கோட்டயம் வழியாக இங்கு வந்தடையலாம்.

சென்னை- ஆலப்புழா

சென்னை- ஆலப்புழா

PC : KannanVM

சென்னையில் இருந்து ஆலப்புழா வந்தடைய தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ், டாடாநகர்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், திருவணந்தபுரம் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் என 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் உள்ளது.

தவறவிடக் கூடாத பகுதிகள்

தவறவிடக் கூடாத பகுதிகள்

PC : wikipedia

ஆன்மீகப் பயணமாகவோ, அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட காரணத்திற்காகவோ ஒருவேலை கேரளாவிற்கு நீங்கள் சென்றுள்ளீர்கள் என்றால் நீங்கள் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலாத் தலங்களால் நிறம்பி காணப்படும். இதில், வர்கலா, பேக்கல், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகள், ஆலப்புழா படகு இல்லம், பசுமை விரிந்த மூணார், மீன்குளத்தி, மாங்கோட்டு பயகதி அம்மன் கோவில்கள் உங்களை தாய்நாட்டிற்கு திரும்ப விடாத சுற்றுத்

தலங்களாக கேரளாவிற்கு பெருமை சேர்க்கின்றன.

கடற்கரைச் சுற்றுலா

கடற்கரைச் சுற்றுலா

PC : Nikolas Becker

வர்கலா, பேக்கல், கோவளம், மீன்குன்னு, செராய், பய்யம்பலம் உள்ளிட்ட கடற்கரைகள் கேரள மாநிலத்தை வேறெதுக்கும் இணையற்ற சுற்றுலாத் தலமாக திகழச் செய்கிறது. கேரளாவின் மயக்கும் உப்பங்கழிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆலப்புழா, குமரகம், திருவல்லம், காசர்கோட் போன்ற பகுதிகளில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்வில் அதுவரை அனுபவித்திடாத நொடிகளாகவே இருக்கும்.

தேன் நிலவு தலங்கள்

தேன் நிலவு தலங்கள்

PC : Airin010

கேரளாவின் தொன்மை வாய்ந்த அற்புத மலைச் சுற்றுலாத் தலமான மூணார் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இல்லாமல் வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் தனித்துவம் பெற்றுள்ளது. அதோடு வயநாடு மாவட்டத்துக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற தேன் நிலவு தலமாகவும் மூணார் விளங்குகிறது. மேலும் வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட கண்கவர் மலைத் தொடர்களும் கேரளாவில் நிறைந்து கிடக்கின்றன.

ஆன்மீகம் நிறைந்த கேரளம்

ஆன்மீகம் நிறைந்த கேரளம்

PC : Vinayaraj

இந்தியாவில் தற்போதைய மற்ற பகுதிகளைப் அல்லாமல் கேரளா ஒரு சமத்துவமிக்க மாநிலமாக திகழ்கிறது. வேறுபட்ட மதத்தினர் சரிசமமாகவே இப்பகுதியின் இன்றளவும் சுதந்திரமாக வாழ்கின்றனர். வானுயர்ந்த கிருத்துவ ஆலயங்கள், சோட்டாணிக்கரா பகவதி கோவில், ஆட்டுக்கால் பகவதி கோவில், மீன்குளத்தி பகவதி அம்மன், மங்கோட்டு காவு பகவதி உள்ளிட்டவை கேரளாவின் பிரதான மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் பகவதி கோவில்களாகும்.

இத விட்டுட்டு வரமுடியுமா ?

இத விட்டுட்டு வரமுடியுமா ?

PC : Augustus Binu

நீங்கள் சுற்றுலாவிற்காக கேரளா செல்லும்போது ஆலப்புழா நகரத்தோடு, கொல்லம், குமரகம், பூவார் உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடாதீர்கள். சுற்றுவட்டாரப் பகுதியான தலசேரி, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளத்திற்கே உரித்தான புட்டுக் கறி, பாலப்பம் என வகை வகையான உணவுகளை சுவைத்துவிட்டு வாங்க...

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more