» »படையப்பா பாணியில் பஞ்சாயத்து பன்னும் ஆஞ்சநேயர்..!!

படையப்பா பாணியில் பஞ்சாயத்து பன்னும் ஆஞ்சநேயர்..!!

Written By: Sabarish

தென்னிந்தியாவில் ஆஞ்சநேயர் என்று அன்போடு அழைக்கப்படும் அனுமன் புராணங்களின் அடிப்படையில் ராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் ராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக படையில் இடம் பெற்றவரும் இவரே. பொதுவாக, நம்மில் பெருமபாலானோர் ஆஞ்சநேயரை சேட்டைகள் செய்யும் கடவுளாகவே அறிவோம். ஆனால், இங்கே ஒரு ஊரில் இவர்தான் பஞ்சாயத்து தலைவராக நின்று, பிரச்சனைகளுக்கு தீர்ப்பு வழங்குகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா ?

அனைவரும் அறிந்தது

அனைவரும் அறிந்தது


சுந்தர காண்டத்தில் அனுமனின் வீரச் செயல்கள் பேசப்படுகின்றன. அதில், அனுமன் ராமனை பிரிந்து தவிக்கும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதாக இராமாயணம் மூலம் அறிந்திருப்போம். இதிலேயே "சொல்லின் செல்வன்" என ஆஞ்சநேயர் அழைக்கப்படுகிறார்.

Praveencbe

ஆஞ்சநேயரின் உருவங்கள்

ஆஞ்சநேயரின் உருவங்கள்


பல்வேறு உருவங்களில் ஆஞ்சநேயர் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இதில் தென்னிந்தியாவில் பெரும்பாலும் நின்ற நிலையில் உள்ள ஆஞ்சநேயர் உருவச் சிலைகளே காணப்படுகின்றன. இந்தியாவின் வடக்குப் பகுதியில் முகம் மட்டுமே கொண்டு வழிபடும் வழக்கம் நிலவுகிறது.

Narendra Upman

ஹனுமன் கோவில்

ஹனுமன் கோவில்


பிலாஸ்பூர் நகரின் மாசிரப்பாரா என்னும் பகுதியில் ஒரு ஹனுமன் கோவில் உள்ளது. இங்குள்ள ஹனுமன் தான் அப்பகுதியில் நடக்கும் வழக்குகளுக்கு முடிவு சொல்லும் நீதிபதியாக உள்ளார். அருகாமையில் நீதிமன்றங்களும், காவல்நிலையங்களும் இருந்தாலும் கூட மக்கள் இவரையே நாடிவருவது புதிதாகக் காண்போருக்கு சட்டென ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

Sangamesh SM

பஞ்சாயத்து ஆஞ்சநேயர்

பஞ்சாயத்து ஆஞ்சநேயர்


சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆஞ்சநேயர் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் கடவுளாகவும், பஞ்சாயத்து தலைவராகவும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 111 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிலாசுப்பூர் நகரில் தான் இந்த வியக்கத்தக்க அதிசயங்கள் நிலவிவருகிறது.

Ms Sarah Welch

பஜ்ரங்கி மந்திர்

பஜ்ரங்கி மந்திர்


பிலாஸ்பூர் பகுதியில் பஜ்ரங்கி பஞ்சாயத்து என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தான் கடந்த பல ஆண்டுகளாக ஊர்ப் பிரச்சனைகளும், குடும்பப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினரால் பெருமையாகக் கூறப்பட்டு வருகிறது. மேலும், குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்பான விசயங்களைக் கூட இந்த ஆஞ்சநேயரிடம் முறையிட்டு வேண்டினால் தீர்த்து வைப்பார் என்பது தொன்நம்பிக்கை.

Ashok modhvadia

தல வரலாறு

தல வரலாறு


சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, சுருக்காக்கி என்னும் ஆஞ்சநேய பக்தர் அஸ்வத் மரத்தின் கீழ் ஆஞ்சநேயரின் சிலை வைத்து வழிபாடு செய்தார். அப்போது அவரது தியானத்தில் உதயமான ஆஞ்சநேயர் தனது அற்புதங்களை உணரச் செய்து, சுருக்காக்கியின் பிரச்சனைகளை தீர்த்துள்ளார். இதனைத்தொடர்ந்தே, அந்த ஊரின் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் ஆஞ்சநேயர் பக்தர்கள் இணைந்து பெரியளவில் கோவில் கட்டியுள்ளனர்.

LASZLO ILYES

தீர்ப்பு சொல்லும் ஆஞ்சநேயர்

தீர்ப்பு சொல்லும் ஆஞ்சநேயர்


படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி எப்படி முருகனின் சாட்சியாக தீர்ப்பு வழங்கினாரோ, அதேப் போல மாசிரப்பாராவில் ஏதேனும் பிரச்சனை நடந்துவிட்டால் இந்த ஆஞ்சநேயர்தான் அங்கு சாட்சியாக வைக்கப்படுகிறார். பின், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் விசாரணை நடந்துமுடிந்தவுடன் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது, 'இது ஆஞ்சநேயரின் முடிவு' என கூறி தீர்ப்பு முடிக்கப்படுகிறது. இதனாலேயே சுற்றுவட்டாரப் பகுதியில் இந்தக் கோவில் பஜ்ரங்கி பஞ்சாயத்து மந்திர் என்றழைக்கப்படுகிறது.

Srileka06

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


பிலாஸ்பூரில் தொல்பொருள் இடங்களும், கோவில்களும் ஏராளமாக உள்ளன. அசனாக்மர் வன உயிர் சரணாலயம் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சுற்றுலா இடமாக இருக்கிறது. ஹஸ்தேவ் பங்கோ அணை, மல்ஹார் மற்றும் ரதன்பூர் தொல்பொருள் மையங்கள், தலாகிராம் எனப்படும் தியோரானி-ஜெதானி கோவில், பபிள் ஐலாண்ட் எனப்படும் கேளிக்கை பூங்கா என இங்கு ஏராளமான சுற்றுலாதளங்கள் இருக்கின்றன.

Ramanjogi

துறவிகள் பூமி

துறவிகள் பூமி


குடாகட் என்ற இயற்கை காட்சி நிரம்பிய இடமும், துறவிகள் நிறைந்த கபீர் சோபுதாரா என்ற இடங்களும் கூட இப்பகுதியில் புகழ்பெற்று விளங்குகின்றன. ஆப்ரா நதிக்கரையில் உள்ள இந்த மாவட்டத்தில் சொன்முடா என்ற மற்றொரு மலை சார்ந்த சுற்றுலா தளமும் உள்ளது.

Jini.ee06b056

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்