Search
  • Follow NativePlanet
Share
» »ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள்..! எதைக் குறிக்கிறது ?

ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள்..! எதைக் குறிக்கிறது ?

நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும். லிங்க வடிவத்திலோ, உருவ வடிவத்திலோ இந்த அண்டத்தைக் காக்கும் கடவுளாக சிவன் நம்முடினேயே பயணித்து வருகிறார் என்பது நம்பிக்கை. சிவலிங்கம் என்பது பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவமாக உள்ளது நாம் அறிந்ததே. லிங்கத்தின் தோற்றம் உடலுறுப்பு போன்ற வடிவமைப் கொண்டுள்ளது, நீள் வட்டத் தோற்றம் சூரியக் குடும்பத்தின் பாதையை குறிக்கிறது, பிரதான உணவான அரிசியைக் குறிக்கிறது என்று பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இன்னும் எத்தனை எத்தனையோ மகிமைகள் இந்த சிவலிங்கத்தில் புதைந்து கிடக்கின்றன. அதெல்லாம் சரி, யாருக்கேனும் ஒரே கருவறையில் தோற்றமளிக்கும் இரண்டு சிவலிங்கம் குறித்து தெரியுமா ?. வாருங்கள் அது எங்கே என பார்க்கலாம்.

தல சிறப்பு

தல சிறப்பு

நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டே வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் உள்ள ஒரு திருத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள் சிவன் கருவறையில் இரண்டு லிங்கமாக காட்சியளிக்கிறார். நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள இந்தத் தலத்தில் மட்டுமே இத்தகைய வியக்கத்தகுந்த நிகழ்வு நடந்துள்ளது.

Balu 606902

கோவில் வரலாறு

கோவில் வரலாறு

சிவபெருமானையும், சக்தி அன்னையையும் வழிபட வந்த முனிவர், சிவனை மட்டும் வழிபட்டுச் சென்றார். இதனால் மனமுடைந்த அன்னையோ, சிவனிடம் எனக்கும் உங்களது அருளில் சம பங்கு வேண்டும் என கூற, பூலோகத்தில் உள்ள கச்சியம்பதிக்குச் சென்று என்னை தரிக்க வேஷ்டும் என சிவன் அறிவுருத்தினார். அன்னையும் அவ்வாறு வழிபட்டு வரம் பெற்றார். பின், திருவருணைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் தங்கிய அன்னை, கனககிரி நாதரை வேண்டி தவமருந்தார். இதனாலேயே இக்கோவில் அமைந்துள்ள பகுதி தேவிகாபுரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்னரே திருவருணை எனப்படும் திருவண்ணாமலையில் தேவி இடப்பாகம் பெற்றார்.

Balu 606902

தல அமைப்பு

தல அமைப்பு

சுமார் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது கனககிரீசுவரர் கோவில். மூன்று நிலை கோபுரமும், நந்தி, விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, அகோர வீரபத்திரர் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர். விசாலாட்சி அம்மனுக்கு என தனிச் சன்னதியும் உள்ளது. மலையின் கீழே பெரியநாயகி அம்மையாருக்கு சன்னதி உள்ளது. இது விஜயநகர கிருஷ்ணதேவராயர் காலத்திய கோவில் என சான்றுகள் மூலம் அறியப்படுகிறது.

Balu 606902

சுடுநீரில் அபிஷேகம்

சுடுநீரில் அபிஷேகம்

ஒரு காலத்தில் மலையில் இருந்த கிழங்குச் செடியை எடுக்க இரும்புக் கம்பி கொண்டு ஒருவர் தோன்டியுள்ளார். அப்போது நிலத்தின் அடியில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. மேலும் தோன்டியபோது சிவலிங்கம் ஒன்று அடிபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் காயம் குணமடைய வேண்டி அப்போது சுடுநீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை இத்தல லிங்கத்திற்கு சுடு நீர் கொண்டே அபிஷக பூஜை நடைபெறுகிறது.

Balu 606902

அன்னையின் திருவடி

அன்னையின் திருவடி

கோவிலின் உள்மண்டப தூணில் அழகிய சிற்பங்களாக 9 பெண்களின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மலையை விட்டு கிழே இறங்கும் வழியில் தேவி தவம் இருந்ததற்கு ஆதாரமாக அன்னையின் திருவடி உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோவில் 9 கல்லை மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்.

Balu 606902

வழிபாடு

வழிபாடு

கனககிரீசுவரரை வேண்டி வழிபட்டால் திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தலத்து ஈசனை வழிபட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படுகிறது.

Benjamín Preciado

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

வேண்டிய காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சிலர், தயில், இளநீர், எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தும், மூலவருக்கும், அம்பாளுக்கும் புத்தாடைகள் வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Thamizhpparithi Maari

நடை திறப்பு

நடை திறப்பு

மலையின் மீதுள்ள அருள்மிகு கானககிரீசுவரர் ஆலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. மலையடிவாரத்தில் உள்ள அம்மன் கோவிலில் காலை 6 மணி முத்ல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடு நடத்தப்படுகிறது.

Kazhian

திருவிழா

திருவிழா

பங்குனி மாதத்தில் 10 நாட்களுக்கு திருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாட்களில் அன்றாடம் பஞ்சமூர்த்திகளும் மலைக்குச் சென்று வரும் காட்சி மிகவும் பிரசிதிபெற்றது. இதைத் தவிர பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவில் ஒன்று.

Balu 606902

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் அமைந்துள்ளது கனககிரீசுவரர் கோவில். திருவண்ணாமலை நகரில் இருந்து வேலூர், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கருந்துவாம்பாடி, போளூர், மட்டபியூர் வழியாக சுமார் 51 கிலோ மீட்டர் பயணித்தால் இக்கோவிலை அடையலாம். கீழ்பென்னாத்தூர், அவலூர்பேட்டை வழியாகவும் வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள இத்தலத்தை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X