Search
  • Follow NativePlanet
Share
» »பிறர் கண்களுக்குத் தெரியாமல் இன்றும் உயிருடன் வாழும் மகான்கள்..!

பிறர் கண்களுக்குத் தெரியாமல் இன்றும் உயிருடன் வாழும் மகான்கள்..!

இந்தியாவில் ஒன்பது மகான்கள் ஒரே இடத்தில் சமாதி கொண்டுள்ள இடம் எது ?. இவர்களின் சமாதியின் மேல் தான் பிரஹலாதர் தவம் செய்தாரா ? அப்படிசென்றால் உன்மையிலேயே பிரஹலாதர் இப்பூமியில் வாழ்ந்தாரா ? எப்போது வாழ்ந்தார் என பல்வேறு கேள்விகளுக்கு பதிலின்றி குழம்பி வருகிறீர்களா.

நீங்க டிஸ்கவரி சேனல்ல பாக்கரத நேர்ல பாக்க ஆசையா? அப்பறம் என்ன போலாம் வாங்க

இத்தகைய சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்பினால் இந்த பிருந்தாவனத்திற்கு பயணம் செய்யுங்க. அதுமட்டும் இல்லைங்க, இத்திருத்தலத்தில் மனமுறுகி வேண்டுவதன் மூலம் மனக்குறை முதல் மற்ற எல்லா குறைகளும் தீரும் என்பது தொன்நம்பிக்கை. சரி வாங்க, அப்படி என்னதான் இருக்குன்னு போய் பார்க்கலாம்...

துறவிகளின் சமாதி

துறவிகளின் சமாதி

13, 14 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மத்வாசார்யர், த்வைதம் என்ற கொள்கையை உலகிற்கு அறிவித்தார். தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை ஓரத்தில், கர்நாடக மாநிலத்தில் பிறந்த ஸ்ரீ மத்வாச்சார்யர், பாரதமெங்கும் யாத்திரை சென்று தனது கொள்கையை பரவச் செய்தார். இவரது வழியைப் பின்பற்றுபவர்கள், மத்வ மதத்தினர் எனப்பட்டனர். இந்த மதத்தைச் சேர்ந்த ஒன்பது துறவிகளின் சமாதிகள் அமைந்திருக்கும் இடம் தான், நவபிருந்தாவனம்.

Narayanan Palani

பிருந்தாவனப் பிரவேசம்

பிருந்தாவனப் பிரவேசம்

நவபிருந்தாவனத்தில் சமாதி கொண்டுள்ள ஒன்பது மத்வ மத மகான்களும், ஸ்ரீ மத்வாசார்யருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சாமிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது, கி.பி. பதினான்காம் நூற்றாண்டு - கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரையிலான முந்நூறு ஆண்டு காலத்தில் வாழ்ந்து பிருந்தாவனப் பிரவேசம் செய்தவர்கள்.

Nsmohan

யார் இவர்கள் ?

யார் இவர்கள் ?

நவபிருந்தாவனத் திட்டில் சமாதி கொண்டுள்ள மஹான்கள் அனைவரும் கர்நாடகப் பகுதியை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பிறந்து, புனித வாழ்க்கை மேற்கொண்டு, இப்பகுதியில் தான் உயிர்நீத்து பிருந்தாவனம் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன், இங்கு வந்து சமாதி கொண்டுள்ளனர்.

Raja Ravi Varma

பிரஹலாதர் யாகம்

பிரஹலாதர் யாகம்

முக்தியடைந்த மகான்கள் இறுதி இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்த இவ்விடம், பெரும் சக்திவாய்ந்த தலம் என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் இங்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாகவே, பிரஹலாதர் யாகம் செய்து, தவநிலை மேற்கொண்டதாக தொன்நம்பிக்கைகள் நிலவி வருகிறது.

Ramanathan.k.i

எங்கே அமைந்துள்ளது ?

எங்கே அமைந்துள்ளது ?

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் துங்கா மற்றும் பத்ரா என்னும் இரு நீரோடைகள் கர்நாடகத்தில் ஷிமோகா நகருக்கு அருகே, கூடலி என்ற இடத்தில் இணைந்து துங்கபத்ரா என்ற பெருநதியாகப் பாய்கின்றன. இதன் வட கரையில் உள்ள ஆனேகுந்தி பகுதிதான், நம் இராமாயண இதிகாசத்தில் விவரிக்கப்பட்டுள்ள, ஹனுமார், சுக்ரீவன் போன்ற வானர வீரர்கள் வாழ்ந்த கிஷ்கிந்தை. இதனருகேதான் நவ பிருந்தாவனமும் அமையப்பெற்றுள்ளது.

Aleksandr Zykov

ஹம்பி மாநகரம்

ஹம்பி மாநகரம்

இதனருகே, துங்கபத்ரா நதியின் தென்கரையில், கட்டிட மற்றும் சிற்பக்கலைக்கும், செல்வச் செழிப்புக்கும், சிறந்த வாழ்க்கை முறைக்கும் உலகப்புகழ் பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரான ஹம்பி மாநகரம் அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே, துங்கபத்ரா ஆற்றின் மத்தியில், பெரும் பாறைகளாலான மலைகளுக்கும், நடுவே அமைந்துள்ள சிறிய தீவுப் பகுதியில் தான் புண்ணியத் தலமான ஸ்ரீ நவபிருந்தாவனம் உள்ளது.

Bjørn Christian Tørrissen

இன்றும் உயிருடன் மகான்கள்

இன்றும் உயிருடன் மகான்கள்

மகான்களின் காலத்துக்குப் பின், அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் இந்த பிருந்தாவனங்கள் என்றாலும், இவை அனைத்தும் ஜீவனுடைய அதாவது உயிரோட்டமுள்ள சமாதிக் கோவில்கள் என்பது தான் இவற்றுக்குள்ள பெரும் சிறப்பாக கருதப்படுகிறது. இன்றும் பிறர் கண்களுக்குத் தெரியாமல் இந்த மகான்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.

Jubair1985

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து வேலூர், சித்தூர், சிக்கபல்லபுரா, அனந்தபூர், பல்லாரி வழியாக சுமார் 660 கிலோ மீட்டர் பயணித்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நவ பிருந்தாவனத்தை அடையலாம். மதுரை- மும்பை குர்லா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - தாதர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சாய்நகர் ஸ்ரீதி எக்ஸ்பிரஸ், கச்சிகுடா எக்ஸ்பிரஸ் அகமதாபாத் சிறப்பு ரயில் என ஏராளமான ரயில் சேவைகளும் சென்னையில் இருந்து அனந்தபூர் வரைக்கும் உள்ளது.

அருகில் உள்ள ஆன்மீகத் தலங்கள்

அருகில் உள்ள ஆன்மீகத் தலங்கள்

நவ பிருந்தாவனத்தின் அருகிலேயே சூரிய நாராயணா கோவில், சிந்தாமனி கோவில், ஆனேகுந்தி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ நாகலிங்க கோவில், மதுவானா ஹனுமான் கோவில், விநாயகர் ஆலயம் என சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பல்வேறு ஆன்மீகத் தலங்களால் நிறைந்து காணப்படுகிறது. இதில் அனைத்து காவில்களுமே பிரம்மான்ட கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பது வியப்படையச் செய்கிறது.

Contributions/BRK

சுற்றுலாத் தலம்

சுற்றுலாத் தலம்

ஆனேகுந்தியில் இருந்து 79 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொப்பல். மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள அழகிய திருக்கோவில்கள் இந்த கொப்பல் நகரத்தின் சிறப்பம்சமாகும். பெங்களூரிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த கொப்பல் நகரம் இங்குள்ள கோவில்களின் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் ஆன்மீக பின்னணிக்காக பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த தலத்தை தரிசிக்க வருடம் முழுவதுமே பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் உள்ளனர்.

Ravibhalli

கொப்பல் யாத்ரீக தலத்தின் சிறப்பம்சங்கள்

கொப்பல் யாத்ரீக தலத்தின் சிறப்பம்சங்கள்

கொப்பல் பகுதி கங்க வம்சம், ஹொய்சள வம்சம் மற்றும் சாளுக்கிய வம்சங்களால் ஆளப்பட்டுள்ளது. வரலாற்றின் இறுதியில் இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. இந்த நகரத்தின் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் அக்காலத்திய மேன்மைக்கு சான்றாய் விளங்குகின்றன.

Ravibhalli

கோவில்களுக்கெல்லாம் ராஜா

கோவில்களுக்கெல்லாம் ராஜா

கொப்பல் தலத்திலுள்ள மஹாதேவா கோவில் அதன் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றுள்ளது. சாளுக்கியர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் காணப்படும் கல்வெட்டில் கோவில்களுக்கெல்லாம் ராஜா இந்த கோவில் என்று புகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Dineshkannambadi

அருகில் உள்ள கோவில்கள்

அருகில் உள்ள கோவில்கள்

மஹாதேவா கோவிலை அடுத்து இதர முக்கியமான கோவில்களாக அமிர்தேஷ்வரர் கோவில், காசிவிஸ்வேஷ்வரா கோவில் மற்றும் தொட்டபப்பஸ கோவில் போன்றவை அருகருகே காணப்படுகின்றன. இங்கு சென்றுவர கொப்பல் பேருந்து நிலையத்தில் நாள் முழுக்கவும் வெவ்வேறு அருகாமை நகரங்களிலிருந்து பேருந்துகள் வந்தவண்ணம் இருக்கும்.

Dineshkannambadi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more