Search
  • Follow NativePlanet
Share
» »வியக்கவைக்கும் நவபாஷாண லிங்கம், ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!

வியக்கவைக்கும் நவபாஷாண லிங்கம், ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!

போகர் மகத்துவத்தில் மிகவும் போற்றும் தன்மைபெற்ற நவபாஷண சிலையாக பழனி முருகன் சிலை அனைவரும் அரிந்த ஒன்றே. ஆனால் உலகமே வியக்கும் நவபாஷாணத்தால் ஆன சிவன் சிலை தெரியுமா ?

நம் நாட்டில் நவபாஷாண சிலை வழிபாடு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பழநி முருகன் கோவில் தான். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும். இதைத்தவிர்த்து இரண்டாவதாகவும் ஓர் நவபாஷாண சிலை கண்டறியப்பட்டது. அது, கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் உள்ளது. அடுத்தாக சிவகாசி அருகே காரிசேரி லட்சுமி நாராயணர் கோவிலிலும் நவபாஷாணத்தில் அமைந்த பெருமாள் சிலை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிகு எல்லாம் மேலாக, கடவுல்களிலேயே மூத்தவ ஆதிக்கடவுள் என போற்றப்படும் சிவபெருமானுடைய நவபாஷாண சிலையும் தற்போது கண்டறியப்பட்டு சைவ மதத்தினரை மாபெரும் வியப்படையச் செய்துள்ளது. அது எங்கே உள்ளது ? வழிபட்டால் என்ன சிறப்பு என அறிந்துகொள்வோம்.

தல சிறப்பு

தல சிறப்பு


சித்தர்களின் கூற்றுப்படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷணம் என்கிறார்கள். இதில் சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷணம், கௌரி பாஷணம், தொட்டி பாஷணம் என ஒன்பது பாஷணங்கள் அடங்கியிருப்பதாக சில ஆய்வுகளும், லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரசசெந்தூரம், வெள்ளி பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என வேறு சில ஒன்பது பாஷணங்களும் கலந்திருப்பதாக மாற்றுக் கருத்துக்களும் உள்ளன. இத்தகைய பாஷாணங்களின் வழிபாடு நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அறியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுல் நவபாஷாண லிங்க வழிபாடு நம் தமிழகத்தில் உள்ளது மேலும் வியக்கத்தகுந்ததாகும்.

Ganeshmanohar

கோவில் வரலாறு

கோவில் வரலாறு


உலகிலேயே மிகப்பெரியதும், உயர்ந்ததுமான மலைத்தொடர் இந்த இமயமலை. இதற்கே ஈடாக தென்னகத்தில் பெரியமலை என்ற ஒரு மலையும் இருந்தது. ஆனால் அது அகத்தியரின் காலடிபட்டு தடைமட்டமானதாக புராண வரலாறு உள்ளது. முன்னொரு காலத்தில் தடைமட்டமான அந்த மலைப் பகுதிக்கு வந்த முனிவர் நவபாஷாணத்தால் லிங்கத்தை வடிவமைத்து சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். அப்போது, முனிவரின் தியானத்தை பரிசோதிக்க எண்ணிய சிவன் யானை ஒன்றி அனுப்பி இடையூறு செய்தார். ஆனால், முனிவரோ தனது தவத்தை தொடர்ந்து நிகழ்த்தினார். இதனால் வியப்படைந்த சிவபெருமான் முனிவரின் கண் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, முனிவரோ பெரிய மலையில் இருந்து காட்சியளிக்க வேண்டும் என கேட்டார். சிவபெருமானும், அதேப்போன்று பெரியமலையில் நின்று முனிவருக்கு காட்சியளித்து மறைந்தார். பின், முனிவர் சிவனின் காலடி பட்ட இடத்தில் அந்த நவபாஷாண லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

CNRNair

தல அமைப்பு

தல அமைப்பு


கோவில் வளாகத்தில் பலிபீடமும், நந்தி தேவரும் உள்ளது. பிரதோஷ வேளைகளில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படகிறது. கோவிலில் நுழைந்தவுடன் முதலில் கண்ணில் தென்படுவது சித்தி விநாயகர்.பரவசப்பட வைக்கும் பளிங்குக் கல் மூலம் இந்த விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமானும், துர்க்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர் போன்ற விக்கிரகங்கள் ஆகம விதிப்படி அமைந்துள்ளன. பாம்பாட்டிச் சித்தர் இன்னும் வசித்து வருவதாகச் சொல்லப்படும் குகை ஒன்றும் இந்தப் பிராகாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

B Saranya

தென் கயிலாயம்

தென் கயிலாயம்


சிவபெருமானுக்கும், பார்வதி அம்மையாருக்கும் கயிலாயத்தில் திருமணம் நடைபெற்றபோது சிவன், அகத்தியரை பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அகத்தியரும் தென்பகுதியில் வந்து இஞ்சிமேடு பகுதியில் இருந்த பெரியமலையில் நின்று இந்த பெரிய மலையின் மீது அழுத்தம் கொடுத்தார். அந்த நிமிடமே இமயமலைப் போல இருந்த இந்த பெரியமலை பூமியின் அடியில் சென்றது. அன்றுமுதல் தென் கயிலாயம் என்றே இந்த பெரிய மலை அழைக்கப்பட்டு வருகிறது.

Roberto Mura

வழிபாடு

வழிபாடு


பெரியமலையில் உள்ள ஒரு சுனை தீர்த்தத்தை வைத்துதான் மூலவராக உள்ள நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தமானது பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. குழந்தை பாக்கியம் அற்றவர்கள் இந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தல நம்பிக்கையாக உள்ளது.

Manveechauhan

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


இத்தலத்திற்கு வந்து வேண்டுதல் விடுக்கும் பக்தல்கள் அக்காரியம் நிறைவேறியதும் சிவபெருமானுக்கும், அம்பாள் அம்மையாருக்கும் அபிஷேகம் செய்து, புடை ஆடைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

TeshTesh

திருவிழா

திருவிழா

வருடந்தோறும் படி விழா, ஆண்டு விழா, பொங்கல் விழா, மகா சிவராத்திரி, விநாயக சதுர்த்தி, ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபத் திருவிழா போன்ற வைபவங்கள் விமரிசையாக நடக்கின் றன. தினமும் மூன்று கால பூஜையும், பௌர்ணமி யில் கிரிவலமும் தற்போது நடந்து வருகிறது.

Arunankapilan

நடைதிறப்பு

நடைதிறப்பு


அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

BishkekRocks

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருவண்ணாமலையில் இருந்து சுமார் 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஞ்சிமேடு பகுதியில் உள்ளது பெரியமலை. அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு வழியாக பெரியமலையை அடையலாம். இந்த இஞ்சிமேடு பெரியமலை ஆலயம், பெரணமல்லூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மினி பேருந்து, வாடகைக் கார்கள் மூலம் எளிதில் செல்லலாம். ஆரணியில் 22 கிலோ மீட்டர் பயணித்தாலும் இஞ்சிமலையை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X