Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தின் இரண்டாவது நவபாஷண சிலை எங்க இருக்கு தெரியுமா ? அவிழும் முடிச்சுகள்...!

தமிழகத்தின் இரண்டாவது நவபாஷண சிலை எங்க இருக்கு தெரியுமா ? அவிழும் முடிச்சுகள்...!

தமிழகத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சித்தர்களில் ஒருவர் போகர். கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை, எவ்வித நோயையும் உடனே நீக்கும் மருத்துவம், அழிவில்லா ஆயுள் என போகரின் மகத்துவத்தை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அவ்வாறாக, போகரால் உருவாக்கப்பட்டதே நவபாஷண சிலை என்பது அனைவரும் அறிந்ததே.

மாற்றம் கண்ட சித்தர்

மாற்றம் கண்ட சித்தர்

போகர் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகளை விட்டுச்செல்ல திட்டமிட்டார். ஆனால், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல சித்தர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றும், மனிதன் அனுபவிக்க வேண்டிய இன்ப, துன்ப காரியங்களை முழுமையாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் கூறினர். அவற்றை காதில் வாங்காத சித்தராக போகர் தனித்து திகழ்ந்தார்.

ஓடும் மூலிகையை பிடித்துக் காட்டிய சித்தர்

ஓடும் மூலிகையை பிடித்துக் காட்டிய சித்தர்

Wikipedia

சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றிக் காட்டினார். அந்த மந்திரம், தம்பணா மந்திரம் என்றழைக்கப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகைகளைத் தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.

நவபாஷணம்

நவபாஷணம்

Ranjithsiji

சித்த முறைப்படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷணம் என்கிறார்கள். இதில் சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷணம், கௌரி பாஷணம், தொட்டி பாஷணம் என ஒன்பது பாஷணங்கள் அடங்கியிருப்பதாக சில ஆய்வுகளும், லிங்கம், குதிரைப் பல்,இ கார்முகில், ரசசெந்தூரம், வெள்ளி பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என வேறு சில ஒன்பது பாஷணங்கள் கலந்திருப்பதாகவும் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.

நவக்கிரகங்கள்

நவக்கிரகங்கள்

Karthickbala

இந்த நவ பாஷணத்தின் தன்மையில் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, இராகு, கேது ஆகிய நவக்கிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளது. நவபாஷணங்களின் கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகவும் தற்போது வரை போற்றப்படுகிறது. நவபாஷணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

அனைவரும் அரிந்த ஒன்று

அனைவரும் அரிந்த ஒன்று

SivRami

முருகனின் இருப்பிடமாக உள்ள பழனி மலை அனைவரும் அரிந்த ஒன்று. பழனியின் பெருமைகள் பலவற்றையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷண சிலை ஆகும். இதனை வழிபடவும், அபிசேகம் செய்யப்பட்ட நீரை அருந்துவதற்கெனவே ஆண்டுதோரும் உள்நாடு, வெளிநாடு என லட்சக் கணக்கான பயணிகள் இங்கே வருகின்றனர்.

இத்தனை மகத்துவமா ?

இத்தனை மகத்துவமா ?

Prateek Pattanaik

நவபாஷணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப்படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிப்படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அமைகிறது. பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்த தீர்த்த நீரை பருகுவதால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

பிணிநீக்கும் விசம்

பிணிநீக்கும் விசம்

Ranjithsiji

பழனியில் உள்ள முருகனின் நவபாஷண சிலை ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்த கலவையாகும். முதலில் இதை உருவாக்கையிலேயே சோதனையின் போது விசத்தன்மையால் பலர் உயிர் இறந்துள்ளனர். இதனால், போகர் மேலும் சில மூலிகைகளைக் கலந்து மருந்தாக வழங்கி வெற்றிகண்டார். அதனாலேயே இரவில் பழனியில் உள்ள சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்து அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

இரண்டாவது நவபாஷண சிலை

இரண்டாவது நவபாஷண சிலை

V.B.Manikandan

சித்தர்கள் தங்களது வாழ்நாளில் கண்டுபிடித்த மூலிகைகளில் சிலவற்றை பிறறுக்கு தெரியப்படுத்தாத வகையில் மூடி மறைத்துள்ளனர். பல மூலிகைகள் பிற்காலத்தில் பயன்பெரும் வகையில் குறிப்புகளையும், மீதங்களையும் இட்டுச் சென்றுள்ளனர். அவ்வாறாக, போகர் மகத்துவத்தில் மிகவும் போற்றும் தன்மைபெற்ற நவபாஷண சிலையை இரண்டு அல்லது மூன்றாக உருவாக்கியுள்ளார். அதில் ஒன்று பழனியுலும் மற்றொன்று இன்னொரு மலைப் பகுதியிலும் உள்ளதாக குறிப்புகள் மூலம் கண்டறியப்படுகிறது.

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?

Marcus334

கொடைக்கானலில் இருந்து சுமார் 19 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற முருகன் கோவில் அமையப்பெற்ற பகுதியாகும். போகர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர். ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவரால் நவபாஷணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது ஒருசிலர் மட்டுமே அறிந்த உண்மையாகும்.

பழனி

பழனி

Jaseem Hamza

பத்து முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் போகர் தமிழ்நாட்டில் பாண்டவர் வனவாசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கடைசியாக வந்தது 12-வது வனமான பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல். பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்.

பூம்பாறை

பூம்பாறை

Cutepraba

தமிழகத்தில் இருந்து சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்த போகர் ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார். அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியில் உள்ள அருணகிரிநாத முருகன்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து சுமார் 545 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த பூம்பாறை. சென்னை, விழுப்புரம், நெய்வேலி வழியாக புதுக்கோட்டை, திண்டுக்கல், கொடைக்கானல் சென்று பின் அங்கிருந்து மலைமீதுள்ள பூம்பாறை செல்ல வேண்டும். கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோர் பயணிக்கும் பட்டியலில் நிச்சயமாக இப்பகுதியினைத் தவறவிடக் கூடாது.

Read more about: palani murugan temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more