Search
  • Follow NativePlanet
Share
» »கண்திருஷ்டி, கயவர்கள் பார்வைக்கு பரிகாரம் தரும் சிவனணைந்த போற்றி..!

கண்திருஷ்டி, கயவர்கள் பார்வைக்கு பரிகாரம் தரும் சிவனணைந்த போற்றி..!

கண்திருஷ்டி, சூனியம் போன்றவை நம்மை வேதனையடையச் செய்யும். அவ்வாறான தீயப் பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டுமா உடனே இந்த சிவன் கோவிலுக்கு செல்லுங்கள்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் கண்திருஷ்டி என்கிறார்கள். குழந்தைக்கு திருஷ்டிபடக் கூடாது என்பதற்காக தாய் கன்னத்தில் திருஷ்டி பொட்டு இடுகிறாள். வீட்டின் முன் மிளகாய், எலுமிச்சை என திருஷ்ட்டியைத் தடுக்க நாம் பல வழிமுறைகளை பின்பற்றுகிறோம். இவ்வாறு தொடர்ந்து கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டு வருவோரா நீங்க, அவ்வாறான திருஷ்டி மற்றும் கயவர்களின் கெட்டப் பார்வையில் இருந்து விலக வேண்டுமா உடனே இந்த சிவன் கோவிலுக்கு செல்லுங்கள்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விருதுநகரில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது சிவனணைந்த போற்றி கோவில். மதுரையில் இருந்து 80 கிலோ மீட்டர் பயணித்தாலும், சிவகாசியில் இருந்து 21 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம்.

Harizen20

சிறப்பு

சிறப்பு


சிவனணைந்த போற்றி கோவிலில் சிவன் சன்னதியும், விஷ்ணு சன்னதியும் அமைந்துள்ளது. மேலும், ஆதிநாராயனணுக்கு எதிரே எமதர்மர் எழுந்தருளியுள்ளது இத்தலத்தின் கூடுதலான சிறப்பம்சமாக உள்ளது. சிவன், விஷ்ணு எமன் என மூன்று உக்கிரக் கடவுள்களையும் ஒரே சமயத்தில் தரிப்பதன் மூலம் தீயப் பார்வை விட்டு விலகும்.

Nsmohan

திருவிழா

திருவிழா

சிவனுக்கு உகந்த நாட்களான மகா சிவராத்திரி, தை, அமாவாசை, ஆடி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது.

Steve Evans

நடைதிறப்பு

நடைதிறப்பு


மற்ற கோவில்களைப் போலவே காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை திறக்கப்படுகிறது. பின், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படுகிறது.

PJeganathan

வழிபாடு

வழிபாடு

இத்திருத்தலத்தில் உள்ள சிவனையும், ஆதிநாராயணனையும் வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது தொன் நம்பிக்கை. மேலும், காவல் தெய்வமான சங்கிலி வீரப்ப சாமி, பொன் மாடன், ஊன முத்து ஆகியோரை வழிபட்டால் தொழில் பிரச்சனைகள் நீங்கி இலாபம் பெருகும். பில்லி, சூனியம், கண் திருஷ்டி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது.

Ilya Mauter

திருஷ்டி நீக்கும் எமன்

திருஷ்டி நீக்கும் எமன்


இத்திருத்தலத்திலேயே எமனுக்கான சன்னதியும் உள்ளது. எம தர்மனுக்கு புதன் கிழமைகள் தோறும் விளக்கேற்றி வழிபட்டால் கயவர்களின் கண்திருஷ்டியில் இருந்து நீங்கி பலன் கிடைக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் புதன் கிழமையன்று வருவர்.

Redtigerxyz

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கு சிறப்பு அழங்கார பூஜைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆபிசேக அழங்காரம் செய்து அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

Raji.srinivas

புராணக் கதை

புராணக் கதை


மதுரை, ராஜபாளையம் பகுதி விஸ்வகர்ம வம்சாவழியினரால் இக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. எமதர்மன் தனது பணிகளில் அலட்சியமாக இருந்தால் அவரது தற்தையான சூரியனின் சாபம் பெற்று பூலோகம் வந்து ஆதிநாராயணனையும், சிவனையும் வழிபட்டு விமோட்சனம் பெற்றார். அதன் அடிப்படையிலேயே சூரிய ஆதிநாராயணனான சூரிய நாராயணனுக்கு எதிரே இத்திருத்தலத்தில் எமதர்மன் காட்சியளிக்கிறார்.

Xplorenisar

தலசிறப்புகள்

தலசிறப்புகள்


விநாயகர், முருகன், மீனாட்சி, சிவனணைந்த போற்றி, ஆதிநாராயணன், சங்கிலி வீரப்பசாமி, எமதர் ராஜா உள்ளிட்ட தெய்வங்கள் ஒரே தலத்தில் காட்சியளிப்பது காணக்கிடைக்காத அம்சமாகும்.

Booradleyp1

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விருதுநகர் செல்ல திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மதுரை விமான நிலையம் விருதுநகரின் அருகில் உள்ள விமான நிலையமாகும். விருதுநகரில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் மம்சாபுரத்தில் உள்ள சிவனணைந்த போற்றி திருக்கோவிலை அடையலாம்.

SarThePhotographer

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X