» »தமிழர்களின் மூதாதையரான மூதேவியை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

தமிழர்களின் மூதாதையரான மூதேவியை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

Posted By: Sabarish

PC: Jyeshtha

இன்று நாம் பிறறை திட்ட பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய சொல்லான மூதேவி நம் முன்னோர்கள் வழிபட்ட ஒரு தெய்வம் என்பது நம்மில் எந்ததனை பேருக்கு தெரியும். எதற்கும் பயன்படாதவள், அவலமானவள், அவஷ்டகுனம் உள்ளிட்டோரை குறிக்கக் கூடிய சொல்லாக இன்று நாம் அந்த சொல்லை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், ஒரு காலத்தில் ஸ்ரீதேவிக்கே மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாக வணங்கப்பட்டவள்.

மூதேவி யார் ?

மூதேவி யார் ?

PC: Ms Sarah Welch

ஸ்ரீதேதிக்கு மூத்த தேவி எனும் சொல்லே பிற்காலத்தில் மருவி மூதேவி என்று அழைக்கப்படுகிறது. மூத்த தேவி என்பவள், சில இந்துதர்ம நூல்களில் குறிப்பிடப்படும் துர்ஷ்ட குனம்படைத்த தேவதை ஆவாள். இக்கடவுளுக்கு தவ்வை, முகடி, மாமுகடி, காக்கைக்கொடியோள், மூத்ததேவி, தூமாவதி, ஜேஷ்டா என இன்னும் பல பெயர்களும் உள்ளது.

தமிழ்நாட்டில் கோவில்கள்

தமிழ்நாட்டில் கோவில்கள்

PC: Booradleyp

தமிழர்களின் பண்டைய காலத்து வழிபாடானது இயற்கையிலிருந்து தொடங்குகிறது. மரம், மாரி, சூரியன் என வழிபடத்துவங்கிய மனிதன், பின் போரில் வீரமரணம் அடைந்தவர்கள் நினைவாக நடுகல் நட்டி வழிபட்டான். இதனையடுத்து வந்த பெண்கள் வழிபாடு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. மாரிதெய்வமாக மழையையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழர் மரபு.

செல்வ, வளம் செழிக்கச்செய்யும் மூதேவி

செல்வ, வளம் செழிக்கச்செய்யும் மூதேவி

PC: wikipedia

துர்தஷ்ட்டத்தின் அடையாளமாக கருதப்படும் தவ்வையை தொன்றுதொட்ட தமிழர்கள் செல்வத்துக்காகவும், பசுமை வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர். பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் போன்ற ஊர்களில் கிடைத்த கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வையின் சிற்பங்களின் மூலம் இந்த வரலாற்றை அறியமுடிகிறது. இன்றளவும் கூட ஒரு சில கிராம விவசாய பகுதியில் உள்ள தவ்வையின் சிலையை வணங்கியே விவசாயப் பணிகள் துவங்கப்படுகிறது. மேலும், காவல் தெய்வமாகவும் இந்த மூத்த தேவி திகழ்கிறாள்.

காஞ்சி கைலாசநாதர் கோவில்

காஞ்சி கைலாசநாதர் கோவில்

PC: Keshav Mukund Kandhadai

சோழர் காலம் வரை தமிழகத்தில் மூத்த தேவியின் வழிபாடு பெருமளவில் சிறந்து விளங்கியிருக்கிறது என்பதற்கு பல தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோவிலில் இந்த பெண் தெய்வத்திற்கென ஒரு சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், திருப்பரங்குன்றத்தில் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் படைத்தளபதி மனைவியான நக்கன் கொற்றியார் ஆணைப்படி தவ்வைக்கு ஒரு குடைவரைக் கோவில் எடுக்கப்பட்டுள்ளது.

மூத்த தேவி எங்கே உள்ளார் ?

மூத்த தேவி எங்கே உள்ளார் ?

PC: Kurumban

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோவிலில் தவ்வை என்ற மூத்த தேவிக்கென தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. மேலும், காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்கு கோவில் உள்ளது தமிழர்களின் மரபு வழி வழிபாட்டிற்கு சிறப்பளிக்கிறது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோவில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோவில்களும் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் விவசாய நிலங்களில் தொல்லியல் துறையின் எவ்வித கவணிப்பும் இன்றி கிடப்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: travel