» »உலகின் மிகவும் சிறிய தீவு இதுதான்! எங்க இருக்கு தெரியுமா?

உலகின் மிகவும் சிறிய தீவு இதுதான்! எங்க இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

உலகின் மிகவும் சிறிய தீவு என்றவுடன் பசிபிக்கிலோ, அமெரிக்கா அருகிலோ இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு, இது இந்தியாவில் அதுவும் ஒரு நதியில் அமைந்துள்ளது என்பது கேள்விப்படும்போதே சற்று அதிர்ச்சியைத் தரலாம். ஏன்னா நம்ம நாட்டுல ஒரு விசயம் நடந்தா நம்ம மேல நமக்கே நம்பிக்கை இருக்காது. முந்தாநாளு வச்ச கஞ்சிய குடிக்குறத கூட அமெரிக்கா காரன் சொல்லித்தான நம்ம செய்யுறோம். நீ மட்டும் என்ன ஒழுங்கானு அடுத்தவங்கள நோக்கி கைவிர நீட்டுறத விட்டுட்டு நம்ம நாட்டு சிறப்புகள தெரிஞ்சிக்க முயற்சிப்போம். சரி தூக்குன ஷோல்டர இறக்கிட்டு இத கவனிங்க.. உலகிலே நிறைய சிறிய தீவுகள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தீவு, அதுவும் ஆத்துல இருக்குர ஒரே சிறிய தீவுதான் இது. வாங்க அந்த தீவுக்கு போய்ட்டுவரலாம்.

 உமானந்தா

உமானந்தா

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் அமைந்துள்ளது இந்த தீவு. இது வடக்கு கவுஹாத்திக்கும், தெற்கு கவுஹாத்திக்கும் நடுவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறிப்பாக நான்கு புறமும் நீர் சூழ, பிரம்மபுத்திர நதியின் மத்தியில் அமைந்துள்ளது.

எப்படி போகலாம்

எப்படி போகலாம்

சென்னையிலிருந்து விமானம் மூலமாகவும், ரயில் மூலமாகவும், பேருந்து மூலமாகவும் செல்லமுடியும். ஆனால் நேரம் குறைவானவர்கள் விமானம் மூலம் பயணித்தலே சிறப்பு.

PC:Aniruddha Buragohain

விமான வழி

விமான வழி

ஏறக்குறைய 3மணி நேர விமான பயணத்தில் கவுஹாத்தியா அடையமுடியும். கவுஹாத்தியில் லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான கட்டணங்கள் 10000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. சென்னையிலிருந்து கவுஹாத்தி சென்று பின் அங்கிருந்து 26.2 கிமீ பயணித்தால் இந்த தீவை அடையலாம்.

பேருந்து

பேருந்து


சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு பேருந்தில் பயணிக்கவேண்டும், மேலும், அங்கிருந்து புவனேஸ்வருக்கு பயணிக்கவேண்டும். அங்கிருந்து கவுஹாத்தியை எளிதில் அடையலாம். சென்னையிலிருந்து விஜயவாடா 550ரூ குறைந்தபட்ச கட்டணம், 9 மணி நேர பயணதூரம். விஜயவாடாவிலிருந்து புவனேஸ்வர் 12 மணி நேரத்தில் அடையலாம். குறைந்த பட்ச கட்டணம் 600ரூ இருக்கும். பின் அங்கிருந்து கவுஹாத்தி 1500ரூபாய் கட்டணத்தில் செல்லலாம். எனினும் இது மிகவும் கடினமான பயணம்.

 ரயில்வழி

ரயில்வழி

சென்னையிலிருந்து கவுஹாத்தி 48 மணி நேரப் பயணமாகும். இதன் கட்டணம் 2400 ஆகும்.

இரண்டு நேரடி ரயில்கள் இருக்கின்றன. திப்ருகர் எக்ஸ்பிரஸ் மற்றும் கவுஹாத்தி எக்ஸ்பிரஸ். இரண்டும் ஒரே நேரத்தில் சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பி ஒரே நேரத்தில் கவுஹாத்தியை அடைகிறது. இதுதவிர சென்னை சென்ட்ரலில் இருந்து சில ரயில்களும், பெரம்பூரிலிருந்து சில ரயில்களும் இயக்கப்படுகின்றன.

கவுஹாத்தியிலிருந்து

கவுஹாத்தியிலிருந்து

ரயில், பேருந்து, விமானம் மூலமாக கவுஹாத்தியை அடைந்த பிறகு, இந்த இடத்தை வாடகை வண்டி மூலம் அடையவேண்டும். மேலும் அங்கிருந்து பெர்ரி படகு சேவை இருக்கிறது. இந்த இடத்தின் பெயரே கவுஹாத்தி பெர்ரிதான். 10நிமிடம் இடைவெளியில் பெர்ரி வண்டிகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவை காலை
7மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படுகிறது. வெறும் பத்து நிமிடத்தில் இந்த தீவை அடையலாம்.

PC:Kinshuk Kashyap

மயில் தீவு

மயில் தீவு

இந்த தீவு உமானந்தா தீவு என்று அழைக்கப்படுவதற்கு புராணத்தை காரணமாக கூறுகின்றனர் சிலர். இந்த தீவு சிவனால் தோற்றுவிக்கப்பட்டதாக நம்புகின்றனர் அவர்கள். இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் வந்த பின்னர், அவர்கள் இந்த தீவுக்கு மயில் தீவு என்று பெயரிட்டனர்.

PC:Subhrajit

மனிதர் வசிக்கும் சிறிய தீவு

மனிதர் வசிக்கும் சிறிய தீவு

உலகில் மக்கள் இன்றளவும் வசிக்கும் மிகச் சிறிய தீவு இதுதான். இந்த தீவு மிகச் சிறியதோடு அல்லாமல் மிகவும் அழகானது. பழங்குடிமக்கள் அதிகம் வசிக்கும் தீவு என்பதால், அவர்களுக்கே உரிய இயற்கை தகவமைப்புகளுடனே இந்த தீவு விளங்குகிறது. மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல் வசதி வாய்ப்புகளை இவர்கள் நாடவில்லை. மேலும் இயற்கையையும் தொந்தரவு செய்வதில்லை இவர்கள்.

தொன்னம்பிக்கைகள்

தொன்னம்பிக்கைகள்

சிவபெருமானின் தீராத உழைப்பால் மனக்கவலைக் கொண்ட பார்வதி தேவி, சிவனின் கடின உழைப்பை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாராம். இதனால் சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசம் வழங்கினாராம். தான் இயங்காவிட்டால் உலகம் இயங்காமல் போய்விடும் என்று கூறியதுடன், பார்வதி மகிழ்ந்திருக்க தனியாக ஒரு தீவை உருவாக்கினாராம் சிவபெருமான். அங்கு பார்வதி தேவியை செல்லப் பணித்தாராம். இப்படித்தான் அந்த கதை நம்பப்பட்டு வருகிறது.

உமாநந்தா கோயில்

உமாநந்தா கோயில்

மயில் தீவில் அமைந்துள்ள ஒரே கோயில் இதுதான். மிகவும் அழகான இயற்கை சுற்றுப்புறத்தில் பசுமைக்கு நடுவில் கற்களில் கலை வண்ணம் வடித்தார்போல அமைந்துள்ளது கோயில். பார்ப்பதற்கு ஒரிசா மாநிலத்தில் இருக்கும் சிலைகளைப் போல இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

அமாமாசை பவுர்ணமி நாட்களில் இங்கு செல்வது கூடுதல் பலத்தை அளிக்குமாம்.


PC:Rajuonline

முக்கிய திருவிழாக்கள்

முக்கிய திருவிழாக்கள்


சிவன் கோயில் என்பதால் சிவராத்ரி மிகுந்த ஆர்வத்தோடு கொண்டாடப்படுகிறது.

பௌர்ணமியில் பிரார்த்தித்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திங்கள்கிழமை அதிகம் பேர் வருகை தருகிறார்கள்.

PC:Ashwin Ganesh M

 குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்


இந்த கோயிலில் வந்து வழிபட்டால் குழந்தையின்மை நீங்கி, விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாகி இருக்கிறது. மேலும் இந்த கோயிலுக்கு திங்கள்கிழமை வருபவர்கள் வேண்டியவை உடனுக்குடன் நடப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் கடவுள் என்ன ஓரவஞ்சனையா செய்யப்போகிறார். அதிக காசு கொடுப்பவர்கள் விரைவில் வரிசையில் நிற்காமல் செல்வதைப் போல, அல்லாமல் கடவுள் எல்லாருக்கும் சமமாக வே அருள் புரிவார்.

PC:Vishma thapa

மாலை நேரங்களில்

மாலை நேரங்களில்

மாலை வேளைகளில் இந்த தீவுக்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும். இங்கு மாலை மங்கும் நேரத்தில் அழகிய புகைப்படங்கள் எடுக்க சிறப்பானதாக இருக்கும்.

PC:Vikramjit Kakati

தங்க நிற லாங்கூர்

தங்க நிற லாங்கூர்

உலகில் அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் தங்க நிற லாங்கூர் வகை குரங்குகள் இந்தியாவிலேயே இந்த இடத்தில் மட்டும்தான் கொஞ்சம் காணப்படுகின்றன. இவற்றை பேணிப் பாதுகாப்பது நம் கடமையாகும்.

PC:Amartyabag

Read more about: travel forest island india summer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்