Search
  • Follow NativePlanet
Share
» »இந்த அருவியை நெருங்கினாலே காது செவிடாகுமா ?

இந்த அருவியை நெருங்கினாலே காது செவிடாகுமா ?

அருவிகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது குளுமையான நீரும், அதனைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளுமே. பெரும்பாலும் அருவிகள் வனத்தின் மையத்தில் பசுமை மரங்கள் சூழ, பாறைகள் சற்று நிறைந்து காணப்படும். பல அருவிகள் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருக்கும். மலைகளில் பல மூலிகை மரங்களையும், செடிகளையும் உரசி வருவதால் இந்த தன்மையை அருவி நீர்கள் பெருகின்றன. ஆனால், இங்கே ஒரு ஊரில் கொட்டும் அருவியின் அருகில் சென்றாலே காது செவிடாகும் என்ற பொருளில் ஓர் அருவி இருப்பது வியப்பளிக்கிறது. அப்படி அந்த அருவி எங்கே உள்ளது ? என்ன சிறப்பு என பார்க்கலாம் வாங்க.

சிர்சி

சிர்சி

பசுமையான காடுகளும், உயரமான நீர்வீழ்ச்சிகளும், பழமையான ஆலயங்களும் ஒருங்கிணைந்த நகரம் சிர்சி. உத்தர கன்னடா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இது பெங்களூரிலிருந்து சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

Sachin Bv

அஹனாஷினி நதி

அஹனாஷினி நதி

சிர்சி அருகில் உள்ள தோனிஹாலா அடர் வனப்பகுதியில் இருந்து உருவெடுக்கும் அஹனாஷினி நதி, சிர்சியின் மலை குன்றுகளைக் கடந்து, சிறப்பு வாய்ந்த பல அழகிய அருவிகளாக கொட்டுகிறது. சிர்சியில் தவறாமல் பெய்யும் பருவ மழையும், வளமையான வெப்பமண்டல காடுகளும் தான் வருடம் முழுவதும் இங்கே அருவி வற்றாமல் இருக்கக் காரணம் எனலாம். இதனாலேயே எந்த காலநிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Kishisykes

கெப்பா ஜாக்

கெப்பா ஜாக்

சிர்சியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உஞ்ச்சலி அருவி என்னும் அழகிய அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கெப்பா ஜாக் என்ற சிறப்பும் பெயரும் உண்டு. கெப்பா ஜாக் என்றால் காதை செவிடாக்கும் ஒலி எழுப்பும் அருவி என்று பொருளாகும். ஆனால், இந்த அருவியின் சுற்றுப்புரமும், அருவி கொட்டும் ஓசையின் அழகும் நம் ஆழ்மனதை கரையச் செய்து விடும் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு அற்புதங்களை இந்த உஞ்ச்சலி அருவி கொண்டுள்ளது.

Balaji Narayanan

மாரிகம்பா கோவில்

மாரிகம்பா கோவில்

சிர்சியின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்று மாரிகம்பா கோவில். 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இங்கு காணப்படும் கவி ஓவியங்களை ரசிக்கவும், ஏழு அடி நீள மாரிகம்பா மர சிலையை காணவும் ஏராளமான ஆன்முக பயணிகள் வருவது வழக்கம். கி.பி. 1611-ல் நகரத்துக்கு வெளியே ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரிகம்பாவின் சிலைக்கு, அப்போதைய மன்னர் சதாசிவ ராவ் இரண்டாம் மன்னர் அதே ஆண்டில் கோவில் எடுப்பித்தார். அன்று முதல் இன்று வரை தன் பொழிவை இழக்காமல் இக்கோவில் உள்ளது.

Raghu Naik NC

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

சிர்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள் பனவாசியும், சஹஸ்ரலிங்கமும் தான். பனவாசி முன்பொரு காலத்தில் கர்நாடகாவின் தலை நகரமாக விளங்கியது. சஹஸ்ரலிங்கத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் இருக்கும் நதிகளில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள், நீரில் அமிழ்ந்து காட்சியளிக்கின்றன. இதனை காணவும் திரளான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள்.

Shashidhara halady

சஹஸ்ரலிங்கம்

சஹஸ்ரலிங்கம்

இந்த ஆன்மீகத் தலம் சிர்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், ஷால்மலா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இங்கு மகா சிவராத்திரியை தவிர மற்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்படும். இங்கு வரும் சிவபக்தர்களுக்கும், பயணிகளுக்கும் கடவுளின் அருள் கிடைப்பதோடு, இந்த சிவலிங்கங்களை தழுவிச் செல்லும் நீரோடையின் பேரழகும் காணக்கிடைக்காத காட்சியாக அமையும்.

Anirban0001

கடக்

கடக்

சாளுக்கிய மன்னர் கால கலை அம்சங்களின் பல உன்னதமான படைப்புகளை கடக் பகுதி கொண்டுள்ளது. வித்தியாசமான தனித்தன்மை கொண்ட சிற்பச்செதுக்கு பாணியையும் அலங்கார கலை அம்சங்களையும் கொண்டுள்ள இந்த கோவில்கள் அக்காலத்தின் மேன்மையை நமக்கு எடுத்துச்சொல்லும் வகையில் காணப்படுகிறது.

Dineshkannambadi

திரிகூடேஷ்வர கோவில்

திரிகூடேஷ்வர கோவில்

கடக்கில் காணப்படும் அற்புதமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று திரிகூடேஷ்வர கோவில். கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை மட்டுமின்றி ஆன்மீக அம்சங்களும் யாத்ரீகர்களுக்காக இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கான கோவில்கள் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

Dineshkannambadi

கார்வார்

கார்வார்

சிர்சியில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது கார்வார். வாசனைப்பொருட்களை அதிக அளவில் விளைவிக்கும் கேரளாவிற்கு அருகிலுள்ள இது ஒரு இயற்கைத் துறைமுகம் என்பதால், வரலாற்றுக் காலத்தில் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள், அரேபியர்கள் போன்ற கடலோடிகளுக்கும் தற்சயம் இந்திய அரசாங்கத்தின் கடற்படைக்கும் இந்த துறைமுகம் மிக முக்கிய இடமாக திகழ்கிறது.

Ayan Mukherjee

தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரை

தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரை

கார்வார் துறைமுகத்துக்கு அடுத்த படியாக இங்கு மீன் பிடி தொழிலும், சுற்றுலாவும் முக்கிய பொருளாதாரமாக விளங்குகின்றன. தூய்மையுடன் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரைகளும் அதைச் சுற்றிலும் தென்னை மரங்களும், தேக்கு மரங்களும் சூழ்ந்த மாசுமருவில்லாத இயற்கை அழகும் பிற மாநில சுற்றுலாப் பயணிகளையும் இங்கே ஈர்க்கிறது.

Vivo78

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சிர்சிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் கும்தா ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து வாடகை கார் அல்லது பேருந்துகள் மூலம் எளிதில் சிர்சி மற்றும் உஞ்ச்சலி அருவியை அடையலாம். ஹூப்ளி விமான நிலையம் இதனருகே உள்ள விமான தலமாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more