Search
  • Follow NativePlanet
Share
» »புது அனுபவமூட்டும் வண்டலூர் ஜூ..! புலிகளின் உறுமல் சத்தத்தில் இரவில் தங்கலாம் வாங்க..!

புது அனுபவமூட்டும் வண்டலூர் ஜூ..! புலிகளின் உறுமல் சத்தத்தில் இரவில் தங்கலாம் வாங்க..!

யானைகளின் பிளிறும் சத்தத்துடனும், உடலை சிலிர்ப்படையச் செய்யும் புலிகளின் உறுமலுடனும் சவாலான இரவைக் கழிக்க விரும்புவோருக்கு இப்போது வண்டலூரில் பெரிய விருந்தே காத்திருக்கிறது.

சென்னையைக் காதலித்த பலருக்கும் மறுபடியும் எப்போது பழைய பொலிவோடு சென்னையை பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் என்றுமே மனதில் தோன்றுக் கொண்டிருக்கும் உன்று. அந்த ஏக்கத்தைப் போக்கும் விதமாகவும், கோடை காலத்தை சிறப்புற செலவிடும் விதமாகவும் சென்னையின் ஓர் அடையாளமான வண்டலூர் உயிரியல் பூங்கா புதுப் பொலிவுடன் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. யானைகளின் பிளிறும் சத்தத்துடனும், உடலை சிலிர்ப்படையச் செய்யும் புலிகளின் உறுமலுடனும் சவாலான இரவைக் கழிக்க விரும்புவோருக்கு இப்போது வண்டலூரில் பெரிய விருந்தே காத்திருக்கிறது.

வண்டலூர் ஜூ

வண்டலூர் ஜூ


இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக அறியப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னைக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகள் வசித்து வருகின்றன. 1855-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா 1500 ஏக்கர் அளவுக்குப் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பிரபலமாக அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நாட்டிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

Rasnaboy

இந்த இடத்தில் இத்தனை விலங்குகளா !?

இந்த இடத்தில் இத்தனை விலங்குகளா !?


பெருநகரமான சென்னையில் தனித்துவிடப்பட்ட தீவு போல காட்சியளிக்கும் வண்டலூர் சரணாலயத்தில் வெள்ளைப்புலிகள் முக்கிய ஈர்ப்பாக அறியப்படுகின்றன. இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளைப்புலிகளை காணும் ஆர்வத்திலேயே வந்து செல்கின்றனர். அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான வெள்ளைப் புலிகளை பாதுகாத்து வரும் இந்தியாவின் ஒரு சில விலங்கியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முக்கியமானது. இதனைத் தவிர்த்து யானைகள், சிறுத்தை, கருஞ்சிறுத்தை, வெள்ளைக் கடற்கழுகு, நீர் யானை, சாம்பார் மான், பஃபூன் குரங்கு, செங்கழுத்து ஆமை, குறைக்கும் மான்கள், கருப்பு லங்கூர், வரிக்குதிரை, முதலைகள், அரிய விலங்கான வெளிமான், கரடிக்கூட்டம், சீல், பைசன், பெருநாரை, காட்டுக்கழுதை, நெருப்புக்கோழி, பல வகை பாம்புகள், நட்சத்திர ஆமை, இராட்சத பல்லி, வெள்ளை கூழைக்கடா, புள்ளி மான் என பலவகை விலங்குகள் காணப்படுகின்றன.

Padmanabhan07

சுற்றிக் காட்டும் எலெக்ட்ரிக் கார்

சுற்றிக் காட்டும் எலெக்ட்ரிக் கார்


சுமார் 1500 ஏக்கர் அளவுக்கு பரந்துவிரிந்து காணப்படும் வண்டலூரில் முதியவர்கள் எளிதாக அத்தனை அழகுகளையும் கண்டு ரசிக்கும் வகையில் எலெக்ட்ரிக் கார் வசதியும் உள்ளது. அயல் நாட்டு பயணிகளையும் கூட இந்தக் கார்கள் அதிகளவில் ஈர்த்து வருகிறது.

த*உழவன்

மீன்பன்னை

மீன்பன்னை


வண்டலூர் பூங்காவினுள் அமைக்கப்பட்டிருக்கும் அக்வாரியம் குழந்தைகளை வெகுவாகக் கவர்கிறது. அணிவகுத்துச் செல்லும் வன்ன மீன்களின் ரம்மியக் காட்சி மனதை மயக்கும் தன்மை கொண்டுள்ளது. குறிப்பாக, அக்வாரியத்தின் தோற்றம் சுறா மீன் வடிவில் அமைக்கப்பட்டிருப்பதாலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இங்க அதிகம் சென்று வர விரும்புகின்றனர்.

த*உழவன்

மாற்றம் கண்ட வண்டலூர்

மாற்றம் கண்ட வண்டலூர்


நம்மில் பெரும்பாலானோர் விரும்புவது வார இறுதி நாட்களில் குறைந்த நேரத்தில் பயணம் செய்து அதிக காட்சிகளைக் கண்டு ரசிக்கவே. அந்த வகையில், அனைவரையும் ஈர்க்கும் வகையில் தற்போது வண்டலூர் ஜூவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Rasnaboy

இப்ப எப்படி இருக்கு ?

இப்ப எப்படி இருக்கு ?


பசுமைச் சூழல், வாகன ஓசையற்ற அமைதி, எங்கு காணிணும் அடர்ந்த மரங்கள் என காணப்பட்ட இப்பூங்காவில் தற்போது பழைய சாயல்கள் ஒன்றும் இல்லை. முழுவதுமாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

Rasnaboy

புலிகளுடன் ஓர் இரவு..!

புலிகளுடன் ஓர் இரவு..!


வெளிநாடுகளில் காட்டிற்குள் சென்று முகாம் அமைத்து இரவு நடமாடும் விலங்குகளைக் காண்பது வழக்கம். அதுபோலவே நம்ம உள்ளூரிலும் இருந்தால் எப்படி இருக்கும் ?. அந்த அனுபவத்தைத் தருவதற்காகவே இப்ப வண்டலூரில் இரவில் தங்கும் வசதிகளும் செய்திருக்காக. ஆமாங்க, வண்டலூர் ஜூவுல இப்ப அறிமுகப்படுத்திருக்குற முகாம்ல இரவு தங்கி யானைகளின் பிளிறும் சத்தத்தையும், புலிகளின் உறுமலையும் கேட்டும், கண்டும் ரசிக்கலாம்.

Ashwin

தங்கும் வசதிகள்

தங்கும் வசதிகள்


வண்டலூர் சரணாலயத்துல மாலை 6 மணிக்கு மேல தங்கி கண்டு ரசிக்க இருவருக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது. 2 ஆயிரமா..!!! என சங்கடப்பட வேண்டாம். ஒரு ஏசி ஹோட்டல்ல தங்குனா எவ்வளவு ஆகுமோ அதே விலைதான் இங்கேயும். அட ஆமாங்க... இங்க ஏசி அரைகள் தராங்க. 12 வயசுக்குள்ள உள்ள குழந்தைகளுக்கு 500 ரூபாய் தான் கட்டணம். ரூமுக்கு பக்கத்திலேயே உணவு விடுதியும். சமாளிக்க முடியாத கோடை வெயிலில், விலங்குகள் நிறைந்த காட்டுக்குள்ள தங்க ஏசி ரூம்ல... இதுக்குமேல என்னங்க வேண்டும்.

vaikundaraja.s - Own work

எப்படி புக் செய்வது ?

எப்படி புக் செய்வது ?


" https://www.aazp.in/room-search/ " இந்த இணைய பக்கத்திற்கு சென்று உங்களுக்கான ரூம்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். 24 மணி நேரத்திற்கு முன்பாகவே இதற்கான பதிவை செய்ய வேண்டும். மாலை 6 மணியில் இருந்து மறுநாள் மதியம் 1 மணி வரை ரூமில் அனுமதிக்கப்படுவீர். மது உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்குக் கட்டாயம் அனுமதி இல்லை.

என்ன ரெடியா ?

என்ன ரெடியா ?


கோடை வெயிலில் இருந்து தப்பித்து ஊட்டி, கொடைக்கானல்னு மட்டும்தான் செல்ல வேண்டும் என அவசியம் இல்லைங்க. நமக்கு தகுந்த பட்ஜெட் டூருக்கு போகலாம். அந்த வகையில் இப்ப வண்டலூர் ஜூ சிறந்த தேர்வா இருக்கும். விலங்குகளுடன் ஓர் இரவு தங்கி தான் பார்க்கலாமே.!!

Padmanabhan07

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X