Search
  • Follow NativePlanet
Share
» »இப்படி இருந்த சென்னையில எத்தனை ஊர்கள் இருந்தது தெரியுமா?

இப்படி இருந்த சென்னையில எத்தனை ஊர்கள் இருந்தது தெரியுமா?

By Udhaya

சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமையாக இருந்தபோது நிர்வாக வசதிகளுக்காக அவர்களால் பிரித்து வைக்கப்பட்டிருந்த மாகாணங்களில் ஒன்று. கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் எல்லா இடங்களையுமே சென்னை மாகாணம் அதாவது மதராஸ் மாகாணத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என தற்போதைய பல இடங்கள் சென்னை மாகாணத்தின் கீழ் இயங்கி வந்தன. இதன் தலைநகரம் தற்போதைய சென்னைதான். கோடைக்காலத்தில் மட்டும் உதகமண்டலம் எனப்படும் ஊட்டி தலை நகரமாக மாற்றப் பட்டு வந்துள்ளது. அப்படின்னா 1913ம் ஆண்டுகளில் சென்னை மாகாணம் எப்படி இருந்தது தெரியுமா?

 சென்னை மாகாணம்

சென்னை மாகாணம்

ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிகளுக்காக எப்படி சென்னை மாகாணத்தை பிரித்து வைத்திருந்தனரோ அதே மாதிரியான காரணத்துக்காக நாமும் நமது கட்டுரையில் சென்னை மாகாணத்தை நான்காக பிரிக்கலாம். தற்போதைய தமிழகம், தற்போதைய கர்நாடகம், தற்போதைய கேரளம், தற்போதைய ஆந்திரம் சென்னை மாகாணத்தில் எப்படி இருந்தது என்பதைக் காண்போம். மேலும் அங்குள்ள சுற்றுலா பகுதிகளையும் அறிந்துகொள்வோம்.

TVSujal

கர்நாடகம்

கர்நாடகம்

தற்போதைய கர்நாடகத்தில் பெல்லாரி, தட்சின கன்னடா, உடுப்பி ஆகிய பகுதிகள் சென்னை மாகாணத்தில் அங்கமாக இருந்தன. பெல்லாரியில் தி ராக்ஸ் எனப்படும் கிராணைட் மலை சூப்பரான சுற்றுலாத்தளமாகும். மேலும் பெல்லாரியில் பெல்லாரி கோட்டை, மிருககாட்சி சாலை, கும்பரா குட்டா, அப்பர் கோட்டை, குண்டேகட்டா பூங்கா, மைலர்லிங்கா கோயில் ஆகிய நீங்கள் காணவேண்டிய தளங்களாகும்.

தட்சின கன்னடா

தட்சின கன்னடா

தட்சின கன்னடா என்று அழைக்கப்படும் கர்நாடகப் பகுதியில் தற்போது சோமேஸ்வரா கோயில், மிர்ஜான் கோட்டை, ஸ்ரீ சதாசிவ ருத்ரா கோயில், சுல்தான் பத்தேரி, குட்லே பீச், பாரடைஸ் பீச், அரைநிலா பீச், சசிகித்லு பீச், தண்ணீர்பவி பீச், சூரத்கல் பீச், பணம்பூர் பீச், ஓம் பீச் என நிறைய இடங்களும், கோயில்களும் அமைந்துள்ளன.

மேலும் இங்கு ஷாப்பிங் செய்வதற்கு சிட்டி சென்டர்மால், போரம் மால், பாரத் மால், சென்ட்ரல் மார்க்கெட் ஆகியவை உள்ளன.

அன்னபூர்னேஸ்வரி கோயில், குட்ரோலி கோயில், துர்க்காபரமேஸ்வரி கோயில், குக்கே சுப்ரமண்யா கோயில், கட்ரி மஞ்சுநாத் கோயில், சோமேஸ்வரா கோயில், சாம்மில்லன் பட்டாம்பூச்சி பூங்கா, மங்கலாதேவி கோயில், மகாபாலேஸ்வரா கோயில், அனந்தபுரா ஏரி கோயில் என நிறைய இடங்கள் இருக்கின்றன.

Aviator423

உடுப்பி

உடுப்பி

உடுப்பியில் பல இடங்கள் காண்பதற்கு ஏற்றவாறு இருக்கின்றன. கப்பு பீச், குட்லு நீர்வீழ்ச்சி, கோடி பீச், புனித மேரி தீவுகள், அனேகுட்டே விநாயகர் கோயில், கிருஷ்ணா கோயில், சந்திரமௌலீஸ்வரர் கோயில், அனந்தேஸ்வரர் கோயில், பஜக ஷேத்ரம், லட்சுமி வெங்கடேச கோயில், அனந்த பத்மநாப கோயில், விருபாக்ஷா கோயில், மால்பே பீச், அருங்காட்சியகம், நாணய அருங்காட்சியகம், மட்டு பீச் என நிறைய இடங்கள் நீங்கள் காண்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.

Ravikiran

கேரளம்

கேரளம்

கேரளம் அந்த காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் இருந்தது. இது சென்னை மாகாணத்தோடு சேர்ந்து இருக்கவில்லை. சென்னை மாகாணத்தோட சில கேரள பகுதிகள் இருந்தன. அவை மலபார் என்று அழைக்கப்படுகின்றன. திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், பய்யனூர், கஞ்சங்காடு, காசர்கோடு ஆகிய இடங்கள் சென்னை மாகாணத்தோடு இணைந்திருந்தன.

காசர்கோடு

காசர்கோடு

கேரளாவின் வட எல்லையில் அமைந்திருக்கும் காசர்கோட் மாவட்டம் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்ட பகுதி. இந்த மாவட்டத்தின் வழியாகத்தான் அரேபியர்கள் 9 மற்றும் 14-ஆம் நூற்றாண்டுகளில் கேரளாவுக்குள் காலடி எடுத்து வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. காசர்கோட் என்ற வார்த்தை 'கசாரா' மற்றும் 'க்ரோடா' ஆகிய இரு சமஸ்கிருத சொற்களில் இருந்து பிறந்தது. இதில் கசாரா என்பதற்கு 'ஏரி' என்றும், க்ரோடா என்பதற்கு 'பொக்கிஷம் இருக்கும் பாதுகாப்பான இடம்' என்றும் சம்ஸ்கிருத மொழியில் அர்த்தம் சொல்லப்படுகிறது.

காசர்கோட்டைச் சுற்றியுள்ள முக்கியமான தலங்களாவன அனந்தபுரா ஏரி கோயில், மாத்தூர் கோயில், மல்லா கோயில், பேக்கல் கோட்டை, ராணிபுரம், கொட்டஞ்சேரி, சந்திரிகிரி கோட்டை ஆகியன இங்கு காணப்படுகின்றன.

Prof tpms

கண்ணூர்

கண்ணூர்

கண்ணனூர் கேரளாவின் வடக்குப் பகுதியிலுள்ள மாவட்டமாகும். இது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வேர்களை தன் அடையாளமாக கொண்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் பொதிந்துள்ள இப்பிரதேசமானது நிரம்பி வழியும் இயற்கை எழிலையும், தனித்தன்மையான - பாரம்பரிய கலாச்சார இயல்பையும் கொண்டு விளங்குகிறது. பண்டைய காலத்தில் மலபார் பிரதேசத்தின் வணிகக்கேந்திரமாக இந்த கண்ணூர் மாவட்டம் திகழ்ந்துள்ளது.

கொட்டியூர் மகாதேவ கோயில், சுந்தரேஸ்வரா கோயில், திருச்சம்பரம் கிருஷ்ணன் கோயில், ஊர்ப்பசி காவு கோயில், தலச்சேரி கடற்பாலம், எழிமலை காட்சிமுனை, ஏஞ்சலோ கோட்டை, தர்மடம் பீச், முழப்பில்லாங்காடு பீச், பய்யம்பலம் பீச், மீன்குன்னு பீச், மடையிப்பாறை, கவ்வாய் தீவுகள், பரசினிக்கடவு பாம்பு பூங்கா, மாப்பிள்ள பே, தொட்டடா பீச், ராஜராஜேஸ்வரா கோயில், பலக்காயம்தட்டு, பைத்தல்மலை என எண்ணற்ற இடங்கள் காணப்படுகின்றன.

Bijesh

 கோழிக்கோட்டில் நீங்கள் காணவேண்டியவை

கோழிக்கோட்டில் நீங்கள் காணவேண்டியவை

தலி கோயில், துசாரகிரி நீர்வீழ்ச்சி, காக்கயம் அமை, பேய்பூர் பீச், பய்யோலி பீச், வயலாடா, மிஸ்கல் மசூதி, திருவச்சிரா கிருஷ்ணா கோயில், பொன்முடி மலைக் கோயில், காப்பாடு பீச், எஸ் எம் தெரு, மணாஞ்சிரா சதுக்கம், கோழிக்கோடு பீச், கோழிப்பாரா நீர்வீழ்ச்சி, கரியத்தும்பாரா, அரிப்பாரா நீர்வீழ்ச்சி, வலயநாடு தேவி கோயில், கடலுன்டி பறவைகள் சரணாலயம், ஜானகி காடுகள் என நிறைய இடங்கள் அமைந்துள்ளன.

Naseeshafi

 ஆந்திர மாநிலத்தில் இருக்கும் இடங்கள்

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் இடங்கள்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் முன்பு ஆந்திர மாநிலத்தில் இருந்த இடங்களில் முக்கியமானவை ராஜமுந்த்ரி, விஜயவாடா,நெல்லூர், திருப்பதி ஆகியனவாகும். சீமாந்திரா மாநிலத்தில் உள்ள இந்த ராஜமுந்திரி நகரம் கலாச்சார தலைநகரமாகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஆதிகாலத்தில் ராஜமஹேந்திரி என்றழைக்கப்பட்ட இந்நகரத்தின் பெயர் நாளடைவில் திரிபடைந்து இப்படி ராஜமுந்திரி என்றாகியுள்ளது. வரலாற்று சான்றுகளின்படி இந்த நகரத்தில்தான் நன்னய்யா எனும் மிகச்சிறந்த தெலுங்கு புலவர் தெலுங்கு எழுத்துருக்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆதிகவி என்ற புகழுடன் அழைக்கப்படும் இந்த நன்னய்யா தெலுகு இலக்கியப் பாரம்பரியத்தின் பிதாமகராக அறியப்படுகிறார்.

ராஜமுந்திரியில் நீங்கள் காணவேண்டியவை கோதாவரி பாலம், இஸ்கான் ராஜமுந்திரி, புஸ்கர் காட், மார்கன்டேய கோயில், மண்டபள்ளி முக்தேஸ்வரம், வீரபத்ர சுவாமி கோயில், கோதாவரி படகு சவாரி, கங்கா சுற்றுலா, லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ஆகியனவாகும்.

நெல்லூர்

நெல்லூர்

மாந்திரா மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றுதான் இந்த நெல்லூர். மாநிலத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட ஆறாவது நகரமாக அறியப்படுவதுடன், இது ஸ்ரீ பொட்டிராமுலு நெல்லூர் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. ஆரம்பகாலத்தில் இம்மாவட்டம் நெல்லூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு பல பிரசித்திபெற்ற கோயில்கள் அமைந்துள்ளதுடன் முக்கியமான விவசாய கேந்திரமாகவும் இம்மாவட்டம் திகழ்கிறது.

ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில், நெல்லப்பட்டு பறவைகள் சரணாலயம், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயில், பெஞ்சலகோனா கோயில், மல்லிகர்ஜூனா காமாட்சி கோயில், இஸ்கான் நெல்லூர், சித்தேஸ்வரம், மைப்பாடு பீச், செங்கலம்மா கோயில், வெங்கடகிரி கோட்டை, கண்டலேறு அணை, அருள்மிகு கோதண்டராமர் கோயில் என நிறைய இடங்கள் காண்பதற்கு இருக்கின்றன.

Ramakrishna

விசாகப்பட்டணம்

விசாகப்பட்டணம்

வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டணம் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். அடிப்படையில் ஒரு தொழில் நகரமான இந்த விசாகப்பட்டணம் தனது ரம்மியமான கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான இயற்கைக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாகவும் மாறியிருக்கிறது.

விசாகப்பட்டினத்தின் கைலாசகிரி பூங்கா, உடா சிட்டி சென்ட்ரல் பார்க், தென்னட்டி பார்க், வுடா பார்க், விசாகப்பட்டினம் விலங்கியல் பூங்கா, கட்டிக்கி நீர்வீழ்ச்சி, அரக்கு பள்ளத்தாக்கு, யாரடா பீச், சிம்ஹாச்சலம் கோயில் என நிறைய இடங்கள் பார்ப்பதற்கு இருக்கின்றன.

Bornav

தமிழகத்தில் ஒரு இடம் மட்டும் இல்லை

தமிழகத்தில் ஒரு இடம் மட்டும் இல்லை

ஆம் தமிழகத்தில் புதுக்கோட்டை மன்னர்கள் அந்நகரத்தை ஆட்சி செய்து வந்தனர். இதனால் சென்னை மாகாணத்தோடு புதுக்கோட்டை மட்டும் இணையவில்லை. பின்னாளில் இணைந்தது. அதுதவிர்த்து சென்னை மாகாணத்தின் எல்லையாக வடக்கில் ஆந்திர மாநிலத்தின் எல்லையும், தெற்கின் திருநெல்வேலி மாவட்டமும், கிழக்கில் வங்கக்கடலும் மேற்கில் மலபார் பகுதிகளும் எல்லையாக இருந்தன.

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னர் இந்த பகுதிகளை சேரர், சோழர் பாண்டியர், பல்லவர், களப்பிரர் என பல தலைமுறை மன்னர்கள் ஆண்டு வந்தார்கள்.

Read more about: travel chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more