» »அரேபியருக்கும் தமிழருக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு! இந்த இடம்தான் சாட்சி

அரேபியருக்கும் தமிழருக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு! இந்த இடம்தான் சாட்சி

Written By: Udhaya

ஆப்பிரிக்கர்களும், தமிழர்களும் ஆதிகால மனிதர்கள் என்பது நம்மில் பலர் கிட்டத்தட்ட அனைவருமே ஒப்புக்கொள்ளும் விசயம்தான். ஆனால் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்தனரா என்றால் அதில் சிலர் கருத்து வேறுபடலாம். ஆனால் தற்போதைய அரேபியர்களின் மூதாதையர்களும், நம் முன்னோர்களும் தொப்புள்கொடி உறவுகளால் பிணைக்கப்பட்டிருந்தனர் என்றால் நம்பமுடிகிறதா? அதற்கு ஆதாரம் நம் ஊர் அருகேயுள்ள இந்த இடத்திலேயே இருக்கிறது. வாங்களேன் அதையும் பாத்துட்டு வந்துடலாம்.

இந்த மூனு ராசிக்காரர்களுக்கும் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுமாம்!

சாம்ராஜ்யம்

சாம்ராஜ்யம்


படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த பகுதிகள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தின் பகுதிகளாகும். குடகு சாம்ராஜ்யம் எனும் ஓரளவுக்கு பெரிய ஆட்சி நடைபெற்று வந்த இடம். இங்குள்ள மக்கள் குடவாக்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். அவர்களின் கலை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஓரளவுக்கு தமிழர்களுடன் ஒத்துக்காணப்படுவதை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பழமையான மொழி

பழமையான மொழி


குடகு மலைவாழ் மக்களின் மொழியானது மிகவும் பழமையானது. தமிழையும் மலையாளத்தையும் கலந்து பேசியது போல இருக்கும். தமிழின் நவீன மாறுதலுக்கு முன்பு இருந்ததைப் போல ஒரு ஒலி. இவைகள் நமக்கு 60 சதவிகிதம் வரை தெளிவாக புரிந்துகொள்ளுமாறு அமைந்துள்ளது. மேலும் இவர்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் அல்லர். இவர்களின் மதப் பழக்கங்கள், தமிழர்களின் இயற்கை தெய்வ வழிபாடு போன்றதாகும்.

Bhaskaranaidu

இயற்கை தெய்வங்கள்

இயற்கை தெய்வங்கள்


இயற்கை தெய்வங்கள் தான் இவர்களின் கடவுள். காவிரித் தாயை வணங்கிதான் எந்தவொரு நிகழ்வையும் தொடங்குகின்றனர். இவர்களின் ஆதி தலம், காவிரி ஊற்றெடுக்கும் இடம்தான். அரேபியருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான அறுந்து போன அற்புத தொடர்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் குடகு மலை நோக்கி பயணிக்க வேண்டும்.

Manamohana Holla K

சென்னை - கூர்க்

சென்னை - கூர்க்


சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக குடகு மலைக்கு எப்படி செல்வது என்பது குறித்த தகவல்களுக்கு இதை சொடுக்குங்கள்.

ஆசை எப்படி வெட்கம் அறியாதோ அப்படிதான் நம் கனவுகளை நோக்கிய பயணமும் எல்லை அறியாதவை. 3 நாட்கள் விடுமுறையில் அற்புதமான பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம் என ஆசைப்படுகிறீர்களா? வாருங்கள்

நிசர்கதாமா

நிசர்கதாமா

கூர்க் மாவட்டத்தில் உள்ள குஷால் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் காணப்படும் இந்த ஸ்தலம் காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு ஆகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிக பிரசித்தி பெற்ற இந்த தீவு ஸ்தலம் 35 ஏக்கர் பரப்பளவில் ஒரு சூழல் பாதுகாப்பு பூங்காவாக விளங்குகிறது. காவேரி ஆற்றை கடந்து இந்த தீவுக்குள் செல்வதற்காக 90 மீட்டர் நீளத்துக்கு ஒரு மரத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டம் கண்டுவிட்ட பழமையான பாலத்துக்கருகில் தற்சமயம் புதிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

Vinodtiwari2608

அற்புதத் தீவு

அற்புதத் தீவு


மூங்கில் தோப்புகள், சந்தன மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் ஆற்றின் இருபுறமும் தெரியும் அருவிகள் என்று இயற்கை அழகோடு இந்த சிறு தீவுப்பகுதி காட்சியளிக்கிறது. இங்குள்ள வன விலங்கு சரணாலயம் பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக விளங்குகிறது. இதில் மான்கள், யானைகள், முயல்கள் மற்றும் மயில்கள் போன்றவற்றை காணலாம். யானைச்சவாரி மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் இங்கு கிடைக்கின்றன. மூங்கில்களான மரவீடுகள்(மரத்தின் உச்சியின் கட்டப்பட்ட சிறு குடில்) மற்றும் வனத்துறையினரால் நடத்தப்படும் விருந்தினர் இல்லம் போன்றவை இந்த தீவில் உள்ளன. இந்த தீவின் இயற்கை எழிலும் அமைதியான சூழலும் வித்தியாசமான பாலமும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியா அனுபவத்தை கொடுக்கும் என்பது நிச்சயம்.

Tinucherian

ஹொன்னம்மன கேரே

ஹொன்னம்மன கேரே


ஹொன்னம்மன கேரே கூர்க் பிரதேசத்தின் மிகப்பெரிய ஏரியாகும். வரலாற்று பின்னணியும் ஆன்மீக முக்கியத்துவமும் இதற்கு உண்டு. இது சோம்வார்பேட்டிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியைப்பற்றி கூறப்படும் புராணக்கதைப்படி ஹொன்னம்மன என்ற உள்ளூர் குலதெய்வம் இங்குள்ள மக்கள் நலனுக்காக தன் உயிரையே தியாக செய்ததாக சொல்லப்படுகிறது. ஏரியை ஒட்டி ஹொன்னம்மாவுக்காக ஒரு கோயிலும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் கௌரி திருவிழாவின் போது ‘பாகினா' எனப்படும் விசேஷ பூஜை ஹொன்னம்மாவுக்காக படைக்கப்பட்டு அந்த படையல் பொருட்கள் ஏரியில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

wiki

 மலைகள்

மலைகள்


ஹொன்னம்மன ஏரிக்கு இரு புறமும் கவிபெட்டா மற்றும் மோரிபெட்டா என்ற அழகான மலைகளாலும், அதிலுள்ள சிகரங்கள் மற்றும் காபி தோட்டங்களாலும் சூழப்பட்டுள்ளன. ஏரியைச்சுற்றிலும் இயற்கை எழில் நிரம்பி வழிவதால் இந்த ஏரிக்கு வரும் பயணிகளுக்கு அந்த இடத்தை விட்டு நகரவே மனம் வராது என்பதே உண்மை. பாண்டவர்களால் உருவாக்கப்பட்டதாக ஐதீகமாக நம்பப்படும் குகைகள் இந்த மலைகளில் அமைந்துள்ளன. மேலும் ஹொன்னம்மன ஏரியில் படகு சவாரி, மீன் பிடித்தல் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. கௌரி பூஜையின் போது இந்த ஏரிக்கு பூஜை செய்ய புதுமண தம்பதிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

wiki

இத மறந்துடாதீங்க

இத மறந்துடாதீங்க


கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் படியுங்கள். மலையேற்றம், சாகச படகு சவாரி, வைன் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள், அதிசுவையான குடகு உணவுகள் என கூர்க் சுற்றுலாவின் போது நாம் நிச்சயம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

வீரபூமி

வீரபூமி

கூர்க் வரும் பயணிகள் நேரம் இருந்தால் வீரபூமி என்ற சுற்றுலா கிராமத்துக்கும் செல்லலாம். கர்நாடகாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் செயல்பட்டுகொண்டிருக்கும் ஓரே பாரம்பரிய உல்லாச நகரம் இதுதான். இதன் விடுதிகள் போர்க்களம் போன்று வடிவமைக்கப்பட்டும், உணவு பரிமாறுபவர்கள் படைவீரர்களை போன்று உடை உடுத்தியும் இருப்பது பயணிகளுக்கு கற்காலத்தில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வை தரும். அதோடு இங்கு நடக்கும் பொழுபோக்கு நிகழ்ச்சிகளும், மாலை வேளைகளில் ஒலிபரப்பப்படும் சுகமான பாடல்களும் பயணிகளுக்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இங்கு பச்சை பசேல் என்று காணப்படும் செடிகொடிகளுக்கும், குன்றுகளுக்கும் இடையில் நீந்தி, பயணிகள் பொழுதை இன்பமயமாக களிக்கலாம்.

CKD

பொல்லிபெட்டா

பொல்லிபெட்டா


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள விவசாய பள்ளதாக்கு பகுதி இந்த பொல்லிபெட்டா ஆகும். இது இங்குள்ள காபி தோட்டங்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த காபி தோட்டங்கள் பொல்லிபெட்டாவிலிருந்து அம்மத்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளன. டாட்டா காபி தோட்டங்களின் தலைமை அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. டாடா நிறுவனம் தனக்கு சொந்தமாக 10000 ஏக்கர் நிலத்தில் காபித் தோட்டங்களை கொண்டுள்ளது. காபித்தோட்டங்கள் என்ற போதிலும் இவற்றில் ஊடுபயிராக மிளகு, ஏலக்காய் மற்றும் வெனிலா போன்ற பணப்பயிர்கள் விளவிக்கப்படுகின்றன.

Prof tpms

சுண்டி கொப்பா

சுண்டி கொப்பா

மடிக்கேரிக்கும் குஷால்நகருக்கும் இடையில் மங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இந்த சுண்டி கொப்பா எனப்படும் சிறு நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள காப்பி மற்றும் மிளகு எஸ்டேட்களுக்கு சுண்டிகொப்பா பிரசித்தி பெற்றுள்ளது. மதுரம்மா எஸ்டேட் இங்குள்ள பெரிய காபி எஸ்டேட் ஆகும். இங்குள்ள உள்ளூர் மக்கள் கால் பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்களாக உள்ளனர். உள்ளூர் கால்பந்து சங்கம் வருடந்தோறும் போட்டிகளை நடத்துகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் வாரச்சந்தைகளில் பொருட்களை வாங்குபதற்காக அருகிலுள்ள எஸ்டேட்களிலிருந்து இங்கு கூடுகின்றனர். கொடஹரஹள்ளி, கம்பிபானே, ஹொசகோடே, நாக்கூர், கரகண்டூர், கெடக்கல், கட்லேமனே போன்றவை இதன் அருகில் உள்ள கிராமங்களில் சில. பெருநகர சந்தடியிலிருந்து விலகி நாட்டுப்புற அமைதியை காண விரும்புகின்றவர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம்.

வாலனூர் மீன்பிடி தலம்

வாலனூர் மீன்பிடி தலம்

துபரேவிற்கு மிக அருகில் இந்த வாலனூர் மீன்பிடி தலம் அமைந்துள்ளது. காவேரியின் உப்பங்கழிப் பகுதியில் அமைந்துள்ள இது தூண்டிலில் மீன் பிடிக்கும் அனுபவத்தை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இடமாகும். ஒட்டு மொத்த கர்நாடக மாநிலத்திலும் தூண்டில் மீன் பிடிப்பதற்கு இப்படி ஒரு பொருத்தமான இடத்தை பார்க்க முடியாது எனும் அளவுக்கு இது இயற்கை அழகோடு காணப்படுகிறது. சலனமற்று இருக்கும் நீரில் திடீரென்று மீன் துள்ளி எழும்பி குதிப்பதைப் பார்த்து மகிழும் அனுபவம் இங்கு பயணிகளுக்கு கிடைக்கிறது. இங்கு மஷீர், மரால் மற்றும் மாப்ஸ் வகை மீன்கள் கிடைக்கின்றன. மஷீர் மற்றும் மரால் வகை மீன்களை பிடிப்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

புஷ்பகிரி

புஷ்பகிரி


சோம்வார்பேட்டிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள புஷ்பகிரி கொடகுப்பகுதியில் இரண்டாவது உயரமான சிகரமாகும். இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பாபதி எனும் பகுதியிலிருந்து ஏறி இதன் உச்சியை அடையலாம். மேலே உச்சியை அடைவதற்கு 10 கி.மீ தூரத்துக்கு ஏற வேண்டும் என்பது குறிப்பிட த்தக்கது. மற்றொரு சிகரமான கொட்டேபெட்டா கொடகு பகுதியின் மூன்றாவது உயரமான சிகரமாகும். இது மடிக்கேரிக்கும் சோம்வார்பேட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. கொட்டேபெட்டாவின் உச்சியை அடைய சுமார் 10 கி.மீ தூரம் மலையேற வேண்டும். இந்த மலையின் உச்சியில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்த மலைகளில் ஏறுவதற்கு அனுமதி ஏதும் தேவையில்லை என்றாலும் உள்ளூர் வழிகாட்டியை துணைக்கு அழைத்துக்கொள்வது நல்லது. மலையேற்ற சாகசத்துக்கு தயாரான உடல்நிலையையும் மனோநிலையையும் பெற்ற பயணிகள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

wiki

 பாகமண்டலா

பாகமண்டலா

இந்துக்களுக்கான ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாக இந்த பாகமண்டலா விளங்குகிறது. காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இந்த இடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது.மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர். திரிவேணி சங்கமத்திற்கு அருகில் பிரசித்தி பெற்ற பாகெந்தேஸ்வர கோயில் அமைந்துள்ளது. இங்கு பாஹேந்தேஸ்வரர், சுப்ரமண்ய சுவாமி, மஹாவிஷ்ணு மற்றும் கணபதி போன்ற தெய்வங்களுக்கான சிலைகள் காணப்படுகின்றன. இந்த கோயில் இருக்குமிடம் பாஹெந்தேஸ்வர ஷேத்திரம் என்று அழைக்கப்படுவதால் இந்த ஒட்டுமொத்த ஸ்தலமும் பாகமண்டலா என்றே அழைக்கப்படுகிறது.

PP Yoonus

 மல்லலி நீர்வீழ்ச்சி

மல்லலி நீர்வீழ்ச்சி


கூர்க் பகுதியில் உள்ள மற்றும் ஒரு அழகான நீர்வீழ்ச்சி இந்த மல்லலி நீர்வீழ்ச்சி ஆகும். இது குமாரதாரா ஆற்றில் அமைந்துள்ளது. புஷ்பகிரி மலையின் அடிவாரத்தினல் 62 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது. இந்த இடம் கூர்க் பகுதியில் சோம்வார்பேட் நகரத்துக்கருகில் உள்ளது. சோம்வார்பேட்டிலிருந்து மல்லலி நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ஹஞ்சிநல்லி எனும் கிராமத்துக்கு பேருந்துகள் உள்ளன. அங்கிருந்து நடைப்பயணமாக மட்டுமே இந்த நீர்வீழ்ச்சிக்கு வர முடியும்.ஏனெனில் நீர்வீழ்ச்சிக்கு வரும் வழி குறுகலாகவும் கரடு முரடாகவும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கோடைக்காலத்தில் இந்த ஆறு வறண்டு விடுவதால் மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க செல்வது சிறந்தது. மழைக்காலத்தின்போது தன் முழு வேகத்துடன் உயரத்திலிருந்து நீர் விழும் இந்த நீர்வீழ்ச்சியில் அச்சமயம் நீராவி போன்ற நீர்ச்சிதறல் அருவியைச் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் பரவச மனோ நிலைக்கு சுற்றுலா பயணியை இழுத்துச்செல்லக்கூடியது.

Ashwin Geet Dsa

பைலாகுப்பே

பைலாகுப்பே

பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது குஷால் நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் குடியேறி வாழும் லுக்சும் சாம்துப்லிங் மற்றும் டிக்யி லார்சோயி என்ற இரண்டு பெரிய குடியிருப்புகள் இங்கு காணப்படுகின்றன. சீன நாடு திபெத்தை ஆக்கிரமிப்பு செய்த காலத்தில் திபெத்திலிருந்து வெளியேறிய இந்த அகதிகள் தற்சமயம் இந்த குடியிருப்புகளில் வாழ்கின்றனர். இந்த ஸ்தலத்தில் விவசாய இடங்கள், திபெத்திய மடலாயங்கள், சுற்றுலா பயணிகளுக்கான திபெத்திய உணவகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கடைகள் என்று அனைத்தும் காணப்படுகின்றன. இருப்பினும் பைலாகுப்பே'யில் முக்கியமான சிறப்பம்சம் இங்குள்ள தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்' என்று அழைக்கப்படும் திபெத்திய மடாலயமாகும்.

Tar-ba-gan

ராஜா சீட்

ராஜா சீட்

கொடகு மஹாராஜாக்கள் அடிக்கடி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பதால் இந்த பூங்காவிற்கு இந்த பெயர் வந்துள்ளது. இந்த பூங்காவில் ஒரு மேடையின் மேல் நான்கு தூண்கள் மற்றும் அலங்கார வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு விதானம் உள்ளது. இந்த விதான மேடை கொடகு மஹாராஜாக்களுக்கும் இந்த பூங்காவுக்கும் இருந்த உறவை விளக்கும் நினைவுச்சின்னமாக விளங்குகிறது. இந்த மேடையில் கொடகு மஹாராஜாக்கள் தங்கள் ராணிகளுடன் அமர்ந்து அதன் இயற்கையழகை ரசித்து மகிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அடுக்கடுக்காக அமைந்து பூங்கா தோட்டங்களுடனும், சரிந்து கிடக்கும் பள்ளத் தாக்குகளும், பனிபடர்ந்த மலைக்காட்சிகளும் நிரம்பி வழியும் இந்த இடத்தை இயற்கை அழகை ரசிப்பதற்கென்று அந்த மஹாராஜாக்கள் தேர்ந்தெடுத்ததில் எந்த வியப்பும் இல்லை.

Likhith N.P.

இருப்பு நீர் வீழ்ச்சி

இருப்பு நீர் வீழ்ச்சி


பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் கூர்க் பிரதேசத்தின் தென் பகுதியில் இந்த இருப்பு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. காவிரியின் துணை ஆறான லட்சுமண தீர்த்த ஆறு இதிலிருந்து உருவாவதால் இதற்கு லட்சுமண தீர்த்த நீர் வீழ்ச்சி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இருப்பு என்று அழைக்கப்படும் இந்த நீர் வீழ்ச்சி அறுபது அடி உயரத்தில் பசுமையான மலைப்பகுதியின் மத்தியில் விழுகிறது. இருப்பு நீர்வீழ்ச்சி நாகர்கோல் நெடுஞ்சாலையில் விராஜ் பேட்டையிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் மடிக்கேரியிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு வெகு அருகில் உள்ளது என்பதும் குறிப்பிட த்தக்கது.

Philanthropist 1

 ஹரங்கி அணை

ஹரங்கி அணை

காவிரி ஆற்றின் துணை ஆறான ஹரங்கி ஆற்றின் மீது இந்த ஹரங்கி அணை கட்டப்பட்டுள்ளது. குஷால்நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள ஹுட்லூர் எனும் கிராமத்துக்கருகில் இந்த அணை அமைந்துள்ளது. கூர்க் பகுதியில் சிற்றுலா செல்வதற்கு மிகப்பொருத்தமான இடம் இந்த ஹரங்கி அணை ஆகும். இரவில் இங்கு தங்குவதற்கு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை உள்ளது. முன் அனுமதி பெற்று இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தென்மேற்கு பருவ மழை பொழியும் மழைக்காலத்தில் இந்த அணை நிறைந்து காணப்படும்.
Bishancm

குடவர்களின் பண்பாடு

குடவர்களின் பண்பாடு

குடவர் இன மக்கள் பெரும்பாலும் தங்கள் திருமண சடங்குகளில் சீதனம் கொடுப்பதில்லை. மந்திரம் ஓதி தாலி கட்டுவதில்லை. மூத்தோர் முன்னிலையில் உறுதி மொழி ஏற்று இணைகின்றனர்.

இவர்கள் மற்ற மக்களைப் போலவே நவ நாகரிக உடை அணிந்துகொள்பவர்கள்தான். ஆனால் முக்கியமான விழாக்களில் அவர்கள் தங்கள் மரபை போற்றி பாதுகாக்கின்றனர். இவர்களின் பண்பாடாக அறியப்படுவது, கிட்டத்தட்ட நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தவைதான்.

இதிலிருந்து குடவா இனத்தவர்களின் முன்னோர்கள் தமிழர்களாகத் தான் இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.

JayakanthanG

 திருப்பாச்சி அரிவாள்

திருப்பாச்சி அரிவாள்

நாம் தற்போது பயன்படுத்தி வரும் திருப்பாச்சி அரிவாள், வீச்சு அரிவாள் போன்றவை அரேபியாவில் இருந்து வந்த கத்திகளாக இருக்கக்கூடும் என்கின்றனர் சிலர். மேலும் இந்த குடகு பகுதியில் வாழும் பலரது பழக்கவழக்கங்களும் சற்று மருவி அரேபிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆதி தமிழர்களும், குடவா இன மக்களும், அரேபியர்களும் ஏதோ ஒரு வகையில் சொந்தபந்தங்களாகவே இருந்திருக்கவேண்டும் என்கின்றனர் அவர்கள். ஆப்பிரிக்காவில் தான் மனித இனம் தோன்றியிருக்கவேண்டும் என்ற கூற்றுக்கு மாறாக, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தோன்றியிருக்கலாம் என்ற கூற்றும் தற்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.

Iromi Perera

Read more about: travel, forest, hills