Search
  • Follow NativePlanet
Share
» »கோடிலிங்கேஸ்வரா கோயில் : ஆந்திரத்தில் ஒன்னு! கர்நாடகத்தில் ஒன்னு!

கோடிலிங்கேஸ்வரா கோயில் : ஆந்திரத்தில் ஒன்னு! கர்நாடகத்தில் ஒன்னு!

கோயில்கள் பலவிதம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் சிறப்பான கோயில் என்ற ஒன்று இருக்கும். அதன்படி அந்த கோயில்களில் சில சிறப்புகளும் இருக்கும். அப்படி கர்நாடகத்தில் இருக்கும் பல கோயில்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

By Udhaya

கோயில்கள் பலவிதம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் சிறப்பான கோயில் என்ற ஒன்று இருக்கும். அதன்படி அந்த கோயில்களில் சில சிறப்புகளும் இருக்கும். அப்படி கர்நாடகத்தில் இருக்கும் பல கோயில்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அதில் ஒன்றுதான் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கும் இந்த கோடிலிங்கேஸ்வரா ஆலயமும். நில்லுங்க... அதே நேரத்துல ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பக்கத்துலயும் ஒரு கோடிலிங்கேஸ்வரா கோயில் இருக்கு.. அதையும் தெரிந்துகொள்வோமே!

 கோடி லிங்கேஸ்வரா Vs கோடி லிங்கேஸ்வரா

கோடி லிங்கேஸ்வரா Vs கோடி லிங்கேஸ்வரா

இரண்டும் ஒரே தெய்வத்துக்காக ஒரே பெயரில் அமைக்கப்பட்டுள்ள கோயில்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருக்கும் கோடி லிங்கேஸ்வரா கோயில் 10 - 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அதே நேரத்தில் கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள கோடி லிங்கேஸ்வரா கோயில் 20 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் இந்த கோயில் காகிநாடா நகரத்திலிருந்து 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கோலாரிலிருந்து கோடி லிங்கேஸ்வரா கோயில் 32கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

sujith

கோலார் கோடி லிங்கேஸ்வரா கோயில் பற்றிய குறிப்புகள்

கோலார் கோடி லிங்கேஸ்வரா கோயில் பற்றிய குறிப்புகள்

உலகின் மிகப்பெரிய சிவ லிங்கம் இங்குதான் அமைந்துள்ளதாக தெரிகிறது.

108 அடி உயரமான இந்த சிவலிங்கம் உலகின் மிகப்பெரியதாக இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சுவாமி சாம்ப சிவ மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்டு முதல் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது.
sujith

ராஜமுந்திரி கோடி லிங்கேஸ்வரா பற்றிய சில குறிப்புகள்

ராஜமுந்திரி கோடி லிங்கேஸ்வரா பற்றிய சில குறிப்புகள்


காகிநாடா நகரத்திலிருந்து 33 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது.

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

பக்தர்களின் பாவங்களை கழுவும் சக்தி இந்த திருத்தலத்துக்கு உள்ளதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.

Nicolas Mirguet

 ஆந்திர கோடி லிங்கேஸ்வரா கோயிலுக்கு எப்படி செல்லலாம்

ஆந்திர கோடி லிங்கேஸ்வரா கோயிலுக்கு எப்படி செல்லலாம்

காக்கி நாடா நகரிலிருந்து இந்த கோயிலுக்கு எளிதில் செல்லமுடியும். காக்கிநாடா கரப்பா சாலை வழியாகவும், சோலங்கி வழியாகவும் என இரண்டு வழித்தடங்களில் செல்லமுடியும். இரண்டு வழியிலும் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பயண தூரமாகும்.

இதன் அருகிலேயே ஏனாம் நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து பீமாவரம் மிக அருகில் அமைந்துள்ளது.

 கோலார் கோடி லிங்கேஸ்வரா கோயிலுக்கு எப்படி செல்வது

கோலார் கோடி லிங்கேஸ்வரா கோயிலுக்கு எப்படி செல்வது

கோலாரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 96ல் பெத்தமங்கலா நோக்கி பயணித்தால் அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் கோடி லிங்கேஸ்வரா கோயிலை அடையலாம். இங்கிருந்து கோலார் தங்க வயல் மிக அருகில் அமைந்துள்ளது.

ஒரு கோடி சிவ லிங்கங்கள்

ஒரு கோடி சிவ லிங்கங்கள்


உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்பதோடு மட்டுமில்லாமல் இக்கோயிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோயிலுக்குகோடி லிங்கேஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்துள்ளது

வரலாறு

கோடிலிங்கேஸ்வரர் கோயிலானது 1980ஆம் ஆண்டு சுவாமி சாம்ப சிவ மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்டு முதல் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிவலிங்கங்களை பிரதிர்ஷ்டை செய்ததன் விளைவே கோடிலிங்கங்கள் சேரக்காரணம் ஆகும்.

கோயில் அமைப்பு:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் 108அடி உயரமுடைய சிவலிங்கமும் அதற்கு நேர் எதிராக 35அடி உயரம் கொண்ட நந்தியும் இருக்கிறது. மேலும் இக்கோயில் வளாகத்தினுள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர், கன்னிகாபரமேஸ்வரி, கருமாரியம்மன் ஆகிய கடவுளர் சந்நிதிகள் உள்ளன.

திருமண வரம் தரும் கோயில்:

திருமண வரம் தரும் கோயில்:

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இரண்டு நாகலிங்க மலர் மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டியும் சிவபெருமானை மனதுருகி வேண்டி நாகலிங்க மரத்தில் மஞ்சள் கயிறை கட்டிச்செல்கின்றனர்.

கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை மற்றும் மாலை ஆறு மணிக்கு 10 பூசாரிகளால் மேளவாத்தியங்கள் முழங்க பூசைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் ஒரு கோடி லிங்கங்களுக்கும் நாள் தவறாமல் பூசைகள் செய்யப்படுகிறது சிறப்பு.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ஏதுவாக இலவச ஓய்வறைகள் கோடிலிங்கேஸ்வரர் கோயிலை ஒட்டியே இருக்கிறது. ஏழைகள் பயனுறும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள் 15-20 ஜோடிகளுக்கு இக்கோயிலின் நிறுவனரான சுவாமி சாம்ப சிவ மூர்த்தியால் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

கன்னிகாபரமேஸ்வரி கோயில்:

கோடிலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் இருக்கும் கன்னிகாபரமேஸ்வரி சந்நிதியினுள் 'சிவ பஞ்சயாதி' என்னும் சிவலிங்கம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை சுற்றிலும் விநாயகர், முருகர், பார்வதி மற்றும் நந்தி ஆகியவர்கள் நின்று வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.
sujith

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X