» »இந்த ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள் இந்தியாவுல இருக்கு தெரியுமா?

இந்த ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள் இந்தியாவுல இருக்கு தெரியுமா?

Posted By: Udhaya

நம்மில் பலருக்கு ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதென்றால், மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட பல இடங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும். அப்படிபட்ட இடங்கள் எங்கே இருக்கின்றன என்று நாம் கூகுளில் தேடுவோம். உலக நாடுகளில் பெரும்பாலான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் இந்த படங்களின் வழியாக நமக்கு அறிமுகமாகின்றன. ஆனால் நமக்கு நம்ம ஊரில் இருக்கும் அதைவிட சிறந்த இடங்கள் பற்றி தெரியாமலே இருக்கிறது. ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் நாம் மூக்கின்மேல் விரல் வைத்து புகழும் இந்த இடங்கள் நம்ம ஊரிலேயே இருக்கிறது என்றால் நம்பமாட்டீர்கள் தானே. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்தின் வரும் பிரம்மாண்ட மலை உருவம், ஹாரிப்பாட்டர் படத்தில் வரும் குன்று போன்றவை இந்தியாவிலேயே இருக்கின்றன. அவற்றின் நகலைப் போல் இருக்கும் பிரம்மாண்ட இடங்களுக்கு ஒரு பயணம் செல்வோம் வாருங்கள்.

மிட் நைட் இன் பாரிஸ்

மிட் நைட் இன் பாரிஸ்

ஊடி ஆலன் கதை, இயக்கத்தில் 2011ம் ஆண்டு வந்த படம் மிட் நைட் இன் பாரிஸ். இந்த படத்தில்
ஓவன் வில்சன், ரேய்ச்சல் மெக்ஆடம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வரும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

வடக்கு கொல்கத்தாவின் இரவு தெருக்கள்

வடக்கு கொல்கத்தாவின் இரவு தெருக்கள்

ஹீரோ ஹீரோயினுடன் மின்விளக்கு ஒளியில் நடந்து செல்லும் காட்சியின் அனுபவம், நமக்கு கொல்கத்தாவின் தெருக்களில் நடக்கும்போதும் கிடைக்கிறது. ஒருவேளை கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றால், மறக்காமல் இரவு உலா ஒன்று செல்லுங்கள்.

Kolkatan

 விக்கி கிறிஸ்டினா பார்சிலோனியா

விக்கி கிறிஸ்டினா பார்சிலோனியா

ஊடி ஆலன் கதை, இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான படம் விக்கி கிறிஸ்டினா பார்சிலோனியா. இந்த படத்தில் வரும் ஒரு கடற்கரை காட்சி அப்படியே இந்தியாவில் எடுக்கப்பட்டது போலிருக்கும்.

 மும்பை கடற்கரை சாலை

மும்பை கடற்கரை சாலை

மும்பை மாநகரத்தின் கடற்கரைச் சாலைதான் அது. இந்த படத்தைப் பார்க்கும்போது நமக்கு மும்பையின் கடற்கரைச் சாலை நினைவுக்கு வரும்.

Pdpics

 லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்

லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்

பீட்டர் ஜாக்சன் இயக்கிய படமான லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மூன்று பிரிவுகளாக 2001,2,3 ஆண்டுகளில் வெளியானது. இந்த படத்தில் வரும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது தெரியுமா? முடிஞ்சா கண்டுபிடிங்க பாக்லாம்.

மூணாறு

மூணாறு

இடுக்கி மாவட்டத்தின் தமிழக எல்லையில் அமைந்துள்ளது மூணாறு. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் வரும் புல்வெளிகள், பசுமைக் காடுகள் அனைத்தும் நமக்கு இந்த இடத்தை நினைவூட்டுகிறது. மூணாறு டிரிப் போகும்போது இதை நினைவு வச்சிக்கோங்க...

Jaseem Hamza

அர்காணத் சிலைகள்

அர்காணத் சிலைகள்

இதே படத்தில் வரும் அர்காணத் சிலைகளைப் போல பிரம்மாண்ட உயர பாறைகள் நம்ம ஊரிலும் காணப்படுகிறது. இது நம்மில் பலருக்கும் தெரிந்த இடம்தான் என்றாலும் அந்த நினைவு சட்டென்று வராது.

கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள தூண் பாறைகள் நமக்கு மிகவும் அறிமுகம். இந்த இரு மலைகளும் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது, கொடைக்கானல் போகிறவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களும் தூண் பாறைகளும் ஒன்று.

Dhanil K

ஹாக்வாட்டர் எக்ஸ்பிரஸ்

ஹாக்வாட்டர் எக்ஸ்பிரஸ்

ஹாரிப்பாட்டர் படத்தில் வரும் ஹாக்வாட்டர் எக்ஸ்பிரஸ் எனும் ரயிலைப் போல இந்தியாவிலும் ரயில் பயணம் இருக்கிறது தெரியுமல்லவா?

கல்கா ஷிம்லா

கல்கா ஷிம்லா


ஆம். நீங்கள் எதிர்பார்த்ததுதான் கல்கா ஷிம்லா ரயில். ஒருவேளை ஊட்டி மலை ரயிலை நீங்கள் நினைத்திருந்தாலும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக இந்த படத்தைப் பார்ப்போருக்கு இந்த இடங்கள் நினைவுக்கு வரும்.

official site

மோட்டார் சைக்கிள் டைரீஸ்

மோட்டார் சைக்கிள் டைரீஸ்

சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் டைரீஸ் அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் 2004ம் ஆண்டு இயக்கப்பட்ட படம் இது. இதன் இயக்குனர் வால்டர் சாலிஸ். இந்த படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட பகுதி இந்தியாவில் இருப்பது போன்றதொரு உணர்வு வருகிறது.

 லடாக் பைக் ரைடு

லடாக் பைக் ரைடு

அந்த குறிப்பிட்ட இடத்தைப் பார்க்கும் போது லடாக்கில் பைக் பயணம் செய்யும்போது கிடைக்கும் உணர்வு நம்மை அறியாமல் தொற்றிக்கொள்கிறது. ஒருவேளை நீங்கள் லடாக் சென்றதில்லை என்றால் உடனடியாக திட்டமிடுங்கள். நல்ல பயணத்தை ஏன் தள்ளிப்போட வேண்டும்.

Deeptrivia

நார்நியா

நார்நியா

நார்நியா படம் பார்த்திருக்கிறீர்களா. அதில் வரும் பனி உலகம் நினைவு இருக்கிறதா. இந்தியாவில் இதேபோன்றதொரு இடம் இருக்கிறது தெரியுமா?

நைனிட்டால்

நைனிட்டால்

குளிர்காலத்தில் நைனிட்டாலுக்கு பயணம் சென்று பாருங்கள். நீங்கள் நார்னியா படத்திற்குள் சென்றதொரு உணர்வு வரும். காடுகளும், அதன்மேல் படிந்துள்ள பனிகளும், உங்களை வேற்று உலகத்துக்குள் அழைத்துச் சென்றுவிடும்.


Capankajsmilyo

 மாம்மா மியா

மாம்மா மியா

2008 ஆண்டு வெளியான இந்த படத்தின் கடற்கரை ரொமான்ஸ் காட்சிகள் பாத்திருக்கிறீர்களா? இல்லையா? பாருங்கள் அதைப் போல் இந்தியாவில் ரொமாண்ஸ் செய்ய ஒரு இடம் இருக்கிறது.

வர்க்கலா பீச்

வர்க்கலா பீச்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த பீச் அதிக ஆள் நடமாட்டம் இன்றியும், அநேக சுற்றுலா அம்சங்களுடனும் இருக்கும்போது உங்களுக்கு ரொமான்ஸ் செய்ய சொல்லியாத் தரவேண்டும். இன்றே உங்கள் காதலியை அழைத்துச் செல்லுங்கள்.

Kerala Tourism

இன் டூ த வைல்ட்

இன் டூ த வைல்ட்

இன் டூ த வைல்ட் படத்தில் வரும்படியான அனுபவத்தை பெற வேண்டுமா? அப்படியானால் இங்கு தான் செல்லவேண்டும்.

 கோவா

கோவா

கோவாவின் மார்ஜிம் பீச்சில் நீங்கள் அந்த அனுபவத்தைப் பெறலாம். இதுபோன்ற எண்ணற்ற அனுபவங்கள் இருக்க ஏன் வெளிநாட்டை பார்த்து கனவு காணவேண்டும். புதிய புதிய இடங்கள் அறிவோம். சேர்ந்து கொண்டாடுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழுடன்.

youtube

Read more about: travel, tourism in india