Search
  • Follow NativePlanet
Share
» »அப்பப்பா.. இத்தனை ரொமான்டிக்கான பீச் அதும் நம்ம ஊர்லயா? போலாமா?

அப்பப்பா.. இத்தனை ரொமான்டிக்கான பீச் அதும் நம்ம ஊர்லயா? போலாமா?

அப்பப்பா.. இத்தனை ரொமான்டிக்கான பீச் அதும் நம்ம ஊர்லயா? போலாமா?

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். நேரம் காலம் கூட இல்லைதான். மெரினா கடற்கரையில் கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் கூட தங்கள் தெய்வீக காதலை இளம் ஜோடிகள் வளர்ப்பார்கள். அது என்ன இளம் ஜோடிகள், எங்களுக்கெல்லாம் காதலே வராதா என முதியவர்களும் காலார நடைபோட மெரினா பக்கம் ஒதுங்குவதுண்டு. காதலை ரசித்து ருசித்து செய்யவேண்டும். காதலர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். நம் வாழ்வின் இணைபிரியாத தோழியை, தோழனை காதலன் காதலியாக கணவன் மனைவியாக பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகளே. அதைவிட பாக்கிய சாலிகள் பெற்றோர் பார்த்துவைத்த திருமணத்தில் தங்கள் காதலை பேரன் பேத்திக் கண்ட பிறகும் கைவிடாமல் ஒருவரையொருவர் அன்பால் மழைபொழிந்து பாராட்டி சீராட்டி விட்டுக்கொடுத்து தன் இளமைகால நினைவுகளை பகிர்ந்துகொண்டும் இருப்பார்களே அவர்கள்தான்.

காதலிக்கு இது வேண்டும் அது வேண்டும் என்றில்லை. ஆனாலும் கடற்கரை காதலர்களுக்கு கடற்கரையில் தங்கள் துணையுடன் சிறிதுபொழுதேனும் கழிப்பது மிகுந்த ஆர்மிக்கதாக இருக்குமல்லவா.

இந்தியாவில் கடற்கரைகள் மீன் பிடிக்கவும், கொண்டாட்டங்களுக்காக மட்டுமல்ல... இந்தியாவின் கடற்கரைகள் இத்தனை ரொமான்டிக்கான விசயங்களுக்கும் உகந்ததுதான். நீங்கள் காதலிக்க ஏற்ற ரொமாண்டிக்கான கடற்கரைத் தளங்கள் இவை,

 வெல்சாவோ பீச்

வெல்சாவோ பீச்

அவ்வளவு எளிதாக வெல்சாவோ பீச்சின் அழகை வர்ணித்துவிட முடியாது.. எண்ணற்ற அழகைத் தன்னில் கொண்டவள் அவள். கண் இமைக்கும் நேரத்தில் கூட மனம் மயக்கும் தென்றலை தந்து உங்களை தன் மேல் காதல் கொள்ள செய்வாள். எச்சரிக்கை நீங்கள் காதலியுடன் சென்றிருக்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கோவாவில் அமைந்துள்ள இந்த பீச் தான் இந்தியாவிலேயே பல வெளிநாட்டவர்கள் விரும்பும் மிக அழகான பீச் ஆகும்.

உங்கள் காதலி அல்லது காதலனுடன் இந்த பீச்சில் சுற்றி வாருங்கள். ஒரு நாள் கூட போனது தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பீர்கள்

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

ஒரு இடத்தைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்குமல்லவா. அப்படி உங்களுக்கு இந்த இடத்துக்கு போகவேண்டும் என்றால் அதற்கு தமிழ் நேட்டிவ் பிளானட் தளம் உதவுகிறது.

கோவாவின் கன்சோலிம் கிராமம் பற்றி தெரியுமா? அதன் அருகில் அமைந்துள்ளது இந்த பீச். வெல்சாவோ பீச் பனாஜியிலிருந்து 26கிமீ தொலைவிலும், மார்கோவிலிருந்து 14கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிரிடாவோ பீச்

சிரிடாவோ பீச்

கொஞ்சம் பாறைகளும், கொஞ்சம் மணலும் ஆங்காங்கே இணைந்து பிணைந்து உங்கள் இணையைப் போற்றும். உண்மையில் இந்த பீச்சுக்கு சென்றபின் உங்களை நல்ல இணையாக உணரவைக்கும் இந்த கடற்கரை.

உங்கள் துணையுடன் தனிமையில் பொழுதை கழிக்க விரும்பும் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டியது இந்த கடற்கரைதான். அதிகம் சுற்றுலாப்பயணிகள் இல்லாத அமைதியான இடமாக அமைகிறது இது. அருகிலுள்ள கிராமத்தினரே இளநீர், மீன் போன்ற இயற்கை உணவுகளை விற்று வருகின்றனர். இந்தியாவின் பாரம்பரியமான கடற்கரை உணவுகளை ஒரு பிடி பிடியுங்கள்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சிரிடாவோ பீச், வடக்கு கோவாவின் திஸ்வாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராம கடற்கரையாகும்.

இது பனாஜியிலிருந்து 7.5கிமீ தூரத்திலும், டபோலிம் விமான நிலையத்திலிருந்து 20கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்கு சாலை வசதிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை எனினும், தனியார் போக்குவரத்து வசதிகள் உள்ளன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நாசரேத் ஆலயம் இங்குள்ள மலை ஒன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

காதலர்களின் கடற்கரை

காதலர்களின் கடற்கரை

மற்ற எல்லா கடற்கரைகளையும் விட இந்த கடற்கரைக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது தன் பெயரிலேயே காதலை சுமந்துகொண்டுள்ளது. காதலின் ஒவ்வொரு நிலையையும் கடல் தன்னுள்ளே பதிவு செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். காதல் எந்த வயதில் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் ஒவ்வொரு காதலனும் காதலியும் கடற்கரையுடன் கொண்டுள்ள பந்தம் மட்டும் எப்போதும் மாறாது. நண்பர்களுள் யாராவது காதலித்துக்கொண்டிருந்தால், அவர்கள் பெரும்பாலும் கடற்கரை சுற்றுலாத் தளங்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா?

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

வடக்கு கோவாவில் அமைந்துள்ளது இந்த காதல்கடற்கரை. காதலுக்கு கோட்டை கட்டியவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கடற்கரை இது. இந்த கடற்கரைக்கு மாலை வேளைகளில் நீங்கள் சென்றால், உறுதியாக கூறலாம் நீங்கள் பார்க்கும் எல்லா இடங்களிலும் காதலர்கள் இருப்பார்கள். அவர்களின் காதல் மொழிகள் உங்களுக்கு புரியாமல் இருந்தாலும், கணவன் மனைவியாக, தாத்தா பாட்டியாக அண்ணன் அண்ணியாக யாரோ ஒருவன் ஒருத்தியாக அவர்களின் அன்பு இந்த கடற்கரை மணலில் ஹார்டிஸ்க்கைப் போல பதிந்திருக்கும்.

மார்காவ் நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை.

ஹோலன்ட் பீச்

ஹோலன்ட் பீச்

கோவாவின் வேறெந்த கடற்கரைக்கும் இல்லாத சிறப்பு இந்த கடற்கரைக்கு இருக்கிறது என்ன தெரியுமா? ஒருவேளை இந்த கடற்கரைக்கு நீங்கள் சென்றிருந்தால், நிச்சயமாக கண்டுபிடித்திருப்பீர்கள். சூரிய உதயம். கோவாவின் மொத்த பீச்சுகளிலேயே அழகான சூரிய உதயம் காணத்தகுந்த பீச் இதுதான்.

மேற்கு கடற்கரையில் சூரிய மறைவு காண்பது அவ்வளவு சுவாரசியமல்ல.. சூரியஉதயம் காண்பதென்றால் நிச்சயம் ஆர்வமிக்கதுதானே.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


கன்சோலிம் எனும் இடத்திலிருந்து ரயில் மூலம் சில நிமிடங்களில் ஹோலன்ட் பீச்சை அடைந்துவிட முடியும். அல்லது பேருந்தில் செல்வதென்றால் அது சற்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலைதான். இருந்தாலும் சுய வாகனம்தான் இங்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இங்கு பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு நிறைய சலுகைகளை வாரி வழங்குகின்றன.

தற்போது கார், ரயில், விமானம் புக் செய்வது தமிழ் நேட்டிவ் பிளானட்டில் எளிதாக்கப்பட்டுள்ளது. புக் செய்து பயன்பெறுங்கள்.

கோவாவில் மேலும் பல கடற்கரைகள் இருக்கின்றன. உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அந்த கடற்கரைகளையும் இந்த பதிவில் காணலாம்.

வண்ணத்துப்பூச்சி கடற்கரை

வண்ணத்துப்பூச்சி கடற்கரை

பெரும்பாலும் பலருக்கு அறிந்திராத இந்த கடற்கரை கோவாவில் தான் அமைந்துள்ளது. போலம் பீச் அருகே அமைந்துள்ள இந்த கடற்கரை பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கும்.

போட் ரைடிங், கோனான் ரைடிங் போன்ற சாகச விளையாட்டுக்களை இங்கு விளையாட முடியும். வாஸ்கோ நகரத்தின் தென் பகுதியில் இந்த பீச் அமைந்துள்ளது.

சின்குவேரிம் கடற்கரை

சின்குவேரிம் கடற்கரை

சின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. இந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது.

அஸ்வெம் கடற்கரை

அஸ்வெம் கடற்கரை

சுற்றுலா பயணிகளுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத கடற்கரை இதுவாகும். உங்கள் மனம் விரும்பும் நபருடன் நீண்ட நேரம் கடற்கரையில் அமர்ந்து உரையாட விரும்புகிறீர்களா அப்படியானால் இதுதான் மிகச்சிறந்த இடம்.

இந்த பீச் நீச்சலுக்கு மிகவும் பிரசித்திபெற்றது. ஆங்கிலப் படங்களில் காணப்படும் யாருமில்லா கடற்கரையைப் போலவே இந்த கடற்கரை அழகாக காட்சியளிக்கும்.

வாகத்தோர் கடற்கரை

வாகத்தோர் கடற்கரை


வாகத்தோர் பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால் இந்த இடத்தை எப்போதும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இங்கு வரும் பயணிகள் இந்தக் கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பின் அழகில் தங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம். வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

மாண்ட்ரேம் கடற்கரை

மாண்ட்ரேம் கடற்கரை


வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரில் அமைந்திருக்கும் மாண்ட்ரேம் பீச், தேன்நிலவு கொண்டாடும் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற அற்புதமான இடமாகும். இது கோவாவின் மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் பயணிகள் பார்வையிலிருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமையை அனுபவிக்க விரும்புவர்கள் இங்கு தாராளமாக வரலாம். மேலும் இங்கு குடில்கள் மற்றும் உணவகங்களையும் அதிகமாக பார்க்க முடியாது. மாண்ட்ரேம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் கேஷுவரீனா மரங்களும், கடல் மீன்களை உண்ணும் வெள்ளை அலகு கழுகளும் இங்கு வரும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் கடற்கரை உணவுகளுக்காக புகழ்பெற்ற எண்ட் ஆஃப் தி வேர்ல்ட் உணவகத்துக்கும், அருகில் இருக்கும் போர்த்துகீசிய கோட்டைக்கும் நேரம் இருந்தால் நீங்கள் சென்று வரலாம்.

அகோண்டா கடற்கரை

அகோண்டா கடற்கரை

நீரில் புத்துணர்ச்சி பெற வேண்டுமா இப்போதே செல்லுங்கள் என்று விளம்பரம் செய்யலாம். அந்த அளவுக்கு இந்த பீச் மிகவும் புத்துணர்ச்சி மிக்கது. அதிக வேலையில் களைப்பாகி ஓய்வெடுக்கவேண்டிய சூழல் இருந்தால் கவலை வேண்டாம் இந்த இடத்துக்கு வாருங்கள்.

பாலோலெம் கடற்கரை

பாலோலெம் கடற்கரை

தெற்கு கோவாவின் மிக அழகான பீச்களில் இதுவும் ஒன்றாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் சுற்றுலாத் தளம் இதுவாகும்.

அலைச் சறுக்கு, பனானா ரைடு, டால்பின் காட்சி, நீர் ஸ்கூட்டர், பாராகிளைடிங், காயாக்கிங், பாடிங்க் என நிறைய விளையாட்டுக்கள் இங்கு விளையாட்ப்படுகின்றன.

அஞ்சுனா கடற்கரை

அஞ்சுனா கடற்கரை


அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் சாலை மார்க்கமாக எளிதாக அடைந்து விடலாம். இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப புதிய புதிய உணவு வகைகளை தினந்தோறும் பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். மேலும் இந்தக் கடற்கரையின் அமைதியை தேடி வரும் பயணிகளின் கூட்டமும் அதிகம். அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது.அதோடு இங்கு புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

அரம்போல் கடற்கரை

அரம்போல் கடற்கரை

அரம்போள் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் இருந்தாலும், அந்த கடற்கரைகளை போல் வணிகமயமாக்கலின் சாயம் படிந்ததல்ல. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும் எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல இங்கு நீங்கள் ஹோட்டல்களையோ, உணவகங்களையோ பார்க்க முடியாது. எனினும் ஆங்காங்கு காணப்படும் குடில்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து விடும். அஞ்சுனா மற்றும் மாபுஸா கடற்கரைகள் அரம்போள் பீச்சுக்கு மிக அருகிலேயே இருக்கின்றன. மேலும், அரம்போள் பீச்சின் அருகாமை பகுதிகளில் உள்ள மணி ஸ்டோன் என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

 கேவ்லாசிம் கடற்கரை

கேவ்லாசிம் கடற்கரை


புகைப்பட ஆர்வமிக்கவர்கள் இந்த இடத்தை கட்டாயம் மிஸ் செய்யவே மாட்டார்கள். ஏனெனில் இந்த இடம் அப்படி ஒரு அழகான காட்சிகள் நிறைந்த இடமாகும்.

பனாஜியிலிருந்து 36கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

Read more about: travel india beach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X