» »திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இந்த மாதம் ஒரு சுற்றுலா செல்வோமா?

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இந்த மாதம் ஒரு சுற்றுலா செல்வோமா?

Posted By: Udhaya

தமிழ் கடவுள் என நம்பப்படும் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர். ஆறு படைகளிலும் மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படும் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த இடத்துக்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். வெளிநாட்டு காரர்கள், வடநாட்டுகாரர்கள் தமிழகம் வரும்போது தவறாமல் கண்டுவிடக்கூடிய இடம் இதுவாகும்.

அப்படி பல சிறப்புக்களை கொண்ட திருச்செந்தூரில் டச்சுக் காரர்கள் செய்த அலப்பறைகளும், 350 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மர்மங்களைப் பற்றியும், திருச்செந்தூர் சுற்றுலா பற்றியும் காணலாம்.

 திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன்


திருச்செந்தூரில் இருக்கும் முருகன் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இங்கு அவருக்கு அழகிய சிலை வடிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்,

Ssriram mt

டச்சுக் காரர்கள்

டச்சுக் காரர்கள்


சில பல ஆண்டுகளுக்கு முன் டச்சுக் காரர்கள் உட்பட ஐரோப்பியர்கள் இந்தியாவை சுரண்டிக்கொண்டிருந்தனர் என்ற வரலாறு நம் அனைவருக்கும் தெரிந்ததே.

அப்போது டச்சுக்காரர்களை அலறவிட்ட மர்மங்களும் திருச்செந்தூரில் உள்ளது.

Amsterdam

சிலை கடத்தல்

சிலை கடத்தல்


டச்சுக் காரர்கள் பல அரிய பொக்கிஷங்கள் நிறைந்த திருச்செந்தூருக்கு வந்த அங்குள்ள சுப்பிரமணியசுவாமியின் சிலையை திருடிச்சென்றுள்ளனர். கடல்கடந்து சென்ற சிலை காலப்போக்கில் மீண்டும் திருச்செந்தூருக்கு வந்துள்ளது.

 மர்மங்கள் கலந்த வரலாறு

மர்மங்கள் கலந்த வரலாறு

இந்த அதிசய நிகழ்வு எப்படி நிகழ்ந்தது என யோசிக்கிறீர்களா? இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 திருச்செந்தூரை கைப்பற்றினர்

திருச்செந்தூரை கைப்பற்றினர்

1648ம் ஆண்டு கடல் மார்க்கமாக தமிழகத்துக்கு வந்த டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலை கைப்பற்றினர். அந்த சமயத்தில் அந்த பகுதியை ஆண்டு வந்தவர் மிகச் சிறந்த முருக பக்தரான திருமலை நாயக்கர்.

 போர்

போர்

திருமலை நாயக்கர் பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு டச்சுக்காரர்களுடன் போர் நிகழ்த்தினார். ஆனால் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை.

 தங்க விக்ரகங்கள்

தங்க விக்ரகங்கள்

போரில் வெற்றிபெற்றதாகக் கருதிக்கொண்ட டச்சுப் படையினர் அங்குள்ள சுப்பிரமணியரின் சிலைகளை தங்க விக்ரகங்கள் எனக் கருதிக்கொண்டு கடத்திச் சென்றனர்.

 சிலைகளை உருக்க

சிலைகளை உருக்க


செல்லும் வழியிலேயே சிலைகளை உருக்க முயற்சித்தனர். கடல்வழியாக பயணித்து அவர்கள் ஊருக்கு செல்வதற்குமுன்னரே இந்த சிலைகளை உருக்கிவிடுவது என்பதுதான் அவர்கள் திட்டம்.

 கொந்தளித்த கடல்

கொந்தளித்த கடல்

அப்போது திடீரென மாறுதல்களுக்குட்பட்ட கடல், அலைக்கழிந்து சூறாவளியுடன் கப்பலை தடுமாறச் செய்தது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அனைவரும் தங்களது உயிர்களை காப்பற்ற நினைத்து,ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.

 தவறி விழுந்த சிலை

தவறி விழுந்த சிலை

இப்படியே சண்டையிட்டுக் கொண்டிருக்க தடுமாறி கீழே விழுந்தது முருகன் சிலை. ஆழ்கடல் என்பதால் அவர்களால் கீழே விழுந்த சிலையை எடுக்கவும் மனம் வரவில்லை. அதே நேரத்தில், கடவுள் குறித்தான அச்சமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.

 திருச்செந்தூர் திரும்பி வந்த சிலை

திருச்செந்தூர் திரும்பி வந்த சிலை

அவ்வளவு எடை கொண்ட சிலை, அதுவும் ஆழ்கடலில் விழுந்த சிலை எப்படி திருச்செந்தூர் திரும்பி வந்தது என்ற ஆச்சர்யம் அப்பகுதி மக்களிடையே இன்னும் இருக்கிறது.

உண்மையில் யாரும் இந்த சிலையை கண்டெடுத்ததாகவோ, திருச்செந்தூருக்கு வழங்கியதாகவோ எந்த குறிப்பும் இல்லை.

 டச்சுக் காரர்களின் ராணுவகுறிப்பு

டச்சுக் காரர்களின் ராணுவகுறிப்பு


இதனிடையே பல ஆண்டுகளுக்குப் பின் டச்சுக்காரர்களின் ராணுவக் குறிப்பில் திருச்செந்தூர் முருகன் சிலை குறித்து ஏதோ எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. அதில், எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்... இந்தியாவில் கடவுளர்களிடம் மட்டும் விளையாடாதீர்கள் என்று எழுதப்பட்டிருந்ததாம்.

 திருச்செந்தூர் மர்மங்கள்

திருச்செந்தூர் மர்மங்கள்

இன்றும் திருச்செந்தூரின் கோபுரம், கடற்கரை வாசல், நாழிக் கிணறு உள்ளிட்ட மர்மங்கள் விளங்காமல் இருக்கின்றன. இது எல்லாம் கடவுளின் லீலை என நம்பினாலும், நம் தமிழ் மன்னர்களின் கட்டடக்கலையின் தந்திரங்களைத்தான் நாம் போற்றியாக வேண்டும்.

 சிலை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா

சிலை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா

இது ஆன்மீக ரீதியில் பலரால் உண்மையென நம்பப்படுகிறது. ஆறுமுகம் எனும் பக்தரின் கனவில் வந்த முருகன் சிலை இருக்கும் இடத்தை காட்டியதாகவும், அவர்தான் படகில் சென்று சிலையை மீட்டதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சலிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள 'பாஞ்சாலங்குறிச்சி கோட்டை' என்று அழைக்கப்பட்டு வந்த கட்டபொம்மன் நினைவுக் கோட்டை ஒரு புகழ் பெற்ற வரலாற்று ஸ்தலமாகுமேலும்படிக்க

 குதிரைமொழித்தேறி

குதிரைமொழித்தேறி

இது திருச்செந்தூரில் இருந்து 12கிமி தொலைவில் உள்ள அழகிய பொழுதுபோக்கு இடமாகும். இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இவ்விடத்தில் உள்ள குடிநீர் ஊற்று பிரபலம் வாய்ந்மேலும் படிக்க

 வள்ளி குகை

வள்ளி குகை

தத்தாத்ரேயரின் குகை என்று அழைக்கப்படும் வள்ளி குகை, திருச்செந்தூர் முருகன் கோவிலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடலை நோக்கியபடி, மணப்பாறையின் கீழ் அமைந்துள்ள காண்பதற்கு அழகிய இடமேலும் படிக்க

 வனதிருப்பதி

வனதிருப்பதி

வனதிருப்பதி கோவில், சாவனா ஹோட்டல்களின் உரிமைதாரர்களால், அவர்களது சொந்த ஊரான புன்னை நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகிய கோவில். இது திருச்செந்தூரில் இருந்து 20கிமி தொலைவில், கட்சனவிலை நிலையத்திற்கு அருகிமேலும் படிக்க

KAMALAKANNAN.K

Read more about: travel, temple, thiruchendur