» »சென்னைக்கு பக்கத்திலேயே ஒரு பறவைகள் சரணாலயம் படையெடுப்போமா?

சென்னைக்கு பக்கத்திலேயே ஒரு பறவைகள் சரணாலயம் படையெடுப்போமா?

Posted By: Udhaya

குறைந்த தூரம் சென்று குதூகலித்துவிட்டு அன்றைய தினமே வீடு திரும்ப நினைப்பவர்கள் சென்னைக்கு அருகிலேயே பல இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம். ஆனால் தமிழகத்தின் பிறபகுதியிலிருப்பவர்களும், உலகின் மற்ற பகுதியினரும் எப்போதாவது அல்லது அடிக்கடி சென்னை வருபவர்களும் பார்த்த இடத்தையே மறுபடி மறுபடி பார்த்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு சென்னையிலிருந்து 80க்கும் குறைவான கிமீ தொலைவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பற்றி பெரிதாக தெரிவதில்லை. அங்கு ஒரு சுற்றுலா சென்றுவந்தால் நன்றாக இருக்குமல்லவா?

 வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்

தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.

Phoenix bangalore

 ஏரிகள் பறவைகள் சரணாலயம்

ஏரிகள் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் (அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை 250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.

KARTY JazZ

ஒன்றரை மணிநேரத்தில்...

ஒன்றரை மணிநேரத்தில்...

சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை இணைப்பை பெற்றிருக்கிறது. சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் வேடந்தாங்கலை அடைய முடியும்.

Sudharsun Jayaraj

 வரலாறு

வரலாறு

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்லுகிறது. இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்படுத்துகிறது.

Vinoth Chandar

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல், "வேட்டையாடும் களம்" என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட கட்டமைப்பாக அமைந்துள்ளது.

KARTY JazZ

பத்தொன்பதாம் நூற்றாண்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டு

வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை சரணாலயமாக மாற்றப்பட்டது. வேடந்தாங்கல் பகுதியை பறவைகள் சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரசாணை வெளியிடப்பட்டது, அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியது.

Sudharsun Jayaraj

புகலிடம்

புகலிடம்

பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு புகலிடமாக உள்ள வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி, மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.Sudharsun Jayaraj

சீசன் பறவைகள்

சீசன் பறவைகள்

சீசனுக்கு வேடந்தாங்கலில் கூடும் பறவைகள் கூட்டம் இதுவாகும்.

bbalaji

நீர்ப்பறவை

நீர்ப்பறவை

நீருக்கு இணையாக பறந்து செல்லும் பறவையின் கண்ணிமைக்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

Amit Kumar

கரிகில்லி

கரிகில்லி

வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கரிகில்லி பறவைகள் சரணாலயம். சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள் சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுகொள்ளலாம்.

Shravantamaskar