» »காவிரித்தாய் பிறக்கும் இடமே சொர்க்கலோகம் - வந்து பாருங்கள் ஒருமுறை!

காவிரித்தாய் பிறக்கும் இடமே சொர்க்கலோகம் - வந்து பாருங்கள் ஒருமுறை!

Posted By: Udhaya

கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் இந்த மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று. கர்நாடகத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலைநாடு பிரதேசத்தில் இது உள்ளது. கொடகு மலை கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது.

இந்த மலைப்பிரதேசத்தில் எனேறென்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள் நிறைந்து காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும் கேரளாவை சேர்ந்த வயநாடு மற்றும் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்களும் வார இறுதியில் சிற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கும் ஸ்தலமாக இது திகழ்கிறது.

என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து இங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை இவர்களை ஒப்பிடும்போது குறைவுதான். காவிரியை பிடிக்க சோழர்கள் செய்த செயல்கள் பற்றியும், இந்த குடகு மலை பற்றியும் இந்த பகுதியில் அறியலாம் வாருங்கள்.

இயற்கை சூழல்

இயற்கை சூழல்


கூர்க் நகரம் மிக அருமையான மூன்றே தாலுக்காக்களை கொண்டு சுற்றுலா சிறப்புடன் கூடிய அழகிய இடமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எந்த விதமான பதற்றமும், ஓட்டமும் இன்றி மிதமான வேகத்தில் நகரும் ஒரு வாழ்க்கை சூழலை - மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு மற்றும் கிழக்கு பக்க சரிவுகளின் வியக்கத் தக்க இயற்கை காட்சிகளுடன் இங்கு பார்த்து ரசித்து அனுபவிக்கலாம்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


கொடகு எனும் பெயர் வந்ததற்கு காரணமாக பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. ஒரு சிலர் இது கொடவா ஆதிவாசிகளின் இருப்பிடமாக இருந்ததால் அவர்கள் மொழியில் குரோத தேசா எனும் சொல்லில் இருந்து பிறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Kalidas Pavithran

 காவிரித்தாய்

காவிரித்தாய்

மற்றொரு பிரிவினர் கொடவா என்ற சொல்லே இரண்டு சொற்களிலிருந்து பிறந்திருக்கலாம் என்ற கருத்தை கொண்டிருக்கின்றனர். அதாவது கொட் (கொடு) என்ற சொல்லும் அவ்வா (அம்மா) என்ற இரண்டாவது சொல்லும் சேர்ந்து கொடவா என்று காவிரி அன்னையை குறிப்பிடுவதற்காக இந்த பெயர் உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர். கொடகு என்பது கூர்க் என்று ஆங்கிலேயர் காலத்தில் அவர்களால் அழைக்கப்பட்டது.

Ananth BS

ஆட்சி

ஆட்சி

கொடகுப்பகுதியை பற்றிய வரலாற்று குறிப்புகள் கொடகுப்பிரதேசம் கங்கா வம்சத்தினரின் ஆட்சியில் இருந்த 8ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அவர்களுக்கு பின் பாண்டியர்கள், சோழர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள் மற்றும் சங்களவர்கள் என்று பல ராஜ வம்சங்களால் இது ஆளப்பட்டுள்ளது. 1174 ம் ஆண்டு ஹொய்சள வம்சத்தினர் இந்த பகுதியை கைப்பற்றினாலும் பின்னர் 14 ம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகர ராயர்களிடம் கொடகை இழந்தனர்.

Rajeev Rajagopalan

விஜயநகர அரசர்களுக்குப் பிறகு

விஜயநகர அரசர்களுக்குப் பிறகு

விஜயநகர அரசர்களுக்குப்பின் கொடகு உள்ளூர் ஜமீன்களான நாயக்கர்கள் வசம் வந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு துவக்கம் வரை இது ஹலேரி வம்சத்தை சேர்ந்த லிங்காயத் ராஜாக்களால் ஆளப்பட்டது.

Rajeev Rajagopalan

தனி மாநில பெருமை

தனி மாநில பெருமை

அவர்களுக்குப் பின் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் கூர்க் பிரதேசம் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சியில் இருந்து வந்தது. சுதந்திரத்துக்கு பின் தனி மாநிலமாகவும் மாறிய கொடகு பிரதேசம் 1950 ம் ஆண்டு நிகழ்ந்த மறு சீரமைப்பில் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
இன்று கூர்க் பகுதி கர்நாடக மாநிலத்தின் மிக சிறிய மாவட்டமாக மடிகேரி, சோமவாரபேட்டே மற்றும் வீர ராஜ பேட்டே என்ற மூன்று தாலுக்காக்களை கொண்டு விளங்குகிறது.

PROAshwin Kumar

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்

கூர்க் பகுதியில் பலவிதமான வரலாற்று சின்னங்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், புராதன கோயில்களும், பூங்காக்களும், நீர்வீழ்ச்சிகளும் சரணாலயங்களும் போன்ற எண்ணற்ற எழில் வாய்ந்த இடங்களும் ஸ்தலங்களும் காணப்படுவதால் இது சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பயணிகளால் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது.

Rajeev Rajagopalan

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

குறிப்பிடும் படியாக இங்கு அப்பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர்வீழ்ச்சி, மல்லள்ளி நீர் வீழ்ச்சி, மடிகேரி கோட்டை, ராஜா சீட், நலநாடு அரண்மனை மற்றும் கடிகே (ராஜா சமாதி) போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளன.
மற்றும் இந்த பிரதேசத்தில் ஆன்மீக சார்ந்த முக்கிய ஸ்தலங்களாக பாகமண்டலா, திபெத்திய தங்க கோயில், ஓம்காரேஸ்வரா கோயில் மற்றும் தலைக்காவிரி போன்ற இடங்கள் காணப்படுகின்றன.

kiran kumar

 காட்டுயிர் சுற்றுலா

காட்டுயிர் சுற்றுலா


இயற்கை எழிலை ரசிப்பதற்கு ஏற்ற இடங்களாக செலவரா நீர்வீழ்ச்சி, ஹரங்கி அணை, காவேரி நிசர்கதாமா, துபரே யானை காப்பகம், ஹொன்னம்மன ஏரி மற்றும் மண்டல பட்டி போன்ற இடங்களும் காட்டுயிர் ஆர்வலர்கள் விரும்பும் இடங்களாக நாகர்கோல் தேசிய பூங்கா மற்றும் அருகிலுள்ள பண்டிபூர் தேசிய பூங்கா ஆகியவையும் இயற்கை எழில் சார்ந்த அம்சங்களுடன் காணப்படுகின்றன.

Rajeev Rajagopalan

 சாகச பிரியர்களுக்கு

சாகச பிரியர்களுக்கு

சாகச பொழுது போக்குகள் மற்றும் விளையாட்டு பொழுது போக்குகளுக்கும் கொடகு பிரதேசம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மலை ஏற்றம், கோல்ப், தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற பல வெளிப்புற பொழுது போக்கு அம்சங்களுக்கு இங்கு வசதிகள் உள்ளன.

Aditya Patawari

 மலையேற்றம் செய்யலாம் வாங்க

மலையேற்றம் செய்யலாம் வாங்க

மேற்கு தொடர்ச்சி மலையின் பிரம்மகிரி மலைப்பகுதியில் மலை ஏற விரும்புகிறவர்களுக்கான ஒற்றையடிப்பாதைகள் உள்ளன. இது தவிர புஷ்பகிரி மலைகள், கொட்டேபெட்டா, இக்குதப்பா, நிஷானி மோட்டே மற்றும் தடியான்டமோல் என்ற இடங்களிலும் மலை ஏற்றப் பாதைகள் உள்ளன.

Rajeev Rajagopalan

 நீர் விளையாட்டுக்கள்

நீர் விளையாட்டுக்கள்

கொடகு பகுதியின் தெற்கு பகுதியில் பிரம்மகிரி மலையிலுள்ள ‘மேல் பரபோலே' ஆற்று பகுதி பலவிதமான நீர் விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றது. காவிரியின் உப்பங்கழி பிரதேசமான வளனூர் எனும் இடம் தூண்டிலில் மீன் பிடித்து மகிழ விரும்புவர்களுக்கு பொருத்தமான இடமாகும்.

Rajeev Rajagopalan

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

குடகு பகுதிக்கு சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும். மங்களூர், ஹாசன், மைசூர், பெங்களூர், கண்ணூர் மற்றும் வயநாடு பகுதியிலிருந்து சாலை வழியாக இங்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன.
கொடகு பகுதிக்கு அருகில் ரயில் நிலையம் மைசூர் ஆகும். இது கொடகிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள மங்களூரில் சர்வதேச விமான நிலையமும் உள்ளது. இங்கிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கும் வெளி நாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.

Sajith T S

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

துபாரே

காவேரியின் கரையோரங்களில் அமைந்திருக்கும் துபாரேவின் அடர்ந்த காடுகள் யானைகள் முகாமுக்காக மிகவும் பிரபலம். இங்கு நீங்கள் ராட்சஸ உருவமும், சாந்த ஸ்வரூபமுமாய் காட்சியளிக்கும் எண்ணற்ற யானைகளை நேருக்கு நேராக சந்திக்கமேலும் தெரிந்துகொள்ள

பைலாகுப்பே

பைலாகுப்பே

பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது குஷால் நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் குடியேறி வாழும் லுக்சும் சாம்துப்லிங் மற்றும் டிக்யி லார்சோயி என்ற இரண்டு பெரிய குடியிருப்புகள் இங்கு காணப்படுகின்மேலும் தெரிந்துகொள்ள

 கட்டிகே

கட்டிகே

ராஜாரா கட்டிகே என்று அழைக்கப்படும் இந்த நினைவுச்சின்னம் கூர்க்கில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கொடகு மஹாராஜாக்களின் சமாதி மண்டபமாகும். தொத்தவீர ராஜேந்திரா, லிங்கராஜேந்திரா மற்றும் ராஜகுரு ருதரப்பா போன்றோரின் சமாதிகள் இதில் இடம் பெற்றுள்ளமேலும் தெரிந்துகொள்ள

 மடிகேரி கோட்டை

மடிகேரி கோட்டை

17ம் நூற்றாண்டின் கடைசியில் முத்துராஜா என்பவரால் முதலில் மண்ணால் இந்த கோட்டை கட்டப் பட்டிருந்தது. பின்னர் திப்பு சுல்தானால் இது ரகசிய சுரங்க பாதைகளுடன் கல்லால் புத்துருவாக்க செய்யப்பட்டது. மேலும் தெரிந்துகொள்ள


www.itslife.in

 தலைக்காவேரி

தலைக்காவேரி

தலைக்காவேரி இங்கு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது.மேலும் தெரிந்துகொள்ள

 பாகமண்டலா

பாகமண்டலா


காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இந்த இடத்தில் சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது.மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுமேலும் தெரிந்துகொள்ள

 ராஜா சீட்

ராஜா சீட்


கொடகு மாவட்டத்தின் மடிகேரி பகுதியில் உள்ள ராஜா சீட் மிக பிரசித்து பெற்ற ஒரு சுற்றுலாஸ்தலம் ஆகும். பலவித வண்ணமயமான பூக்களும் நீரூற்றுகளும் நிறைந்த ஒரு பூங்காவாகும். இந்த நீரூற்றுகள் இசைக்கேற்றவாறு அசைந்தாடும்படி வண்ண விளக்கு அலங்காரங்களுடன் காணப்படுகின்றன மேலும் தெரிந்துகொள்ள

Read more about: travel, coorg