Search
  • Follow NativePlanet
Share
» »உங்களை வாயைப் பிளக்கச் செய்யும் இந்தியாவில் ஒரு டிஸ்னி லேண்ட் ! போவோமா?

உங்களை வாயைப் பிளக்கச் செய்யும் இந்தியாவில் ஒரு டிஸ்னி லேண்ட் ! போவோமா?

உங்களை வாயைப் பிளக்கச் செய்யும் இந்தியாவில் ஒரு டிஸ்னி லேண்ட் ! போவோமா?

இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கைப் பூங்காவை காண விருப்பமா? அப்படியானால் காண்பதற்கு தயாராகுங்கள்! ஆம் இந்தப் பூங்கா அடிப்படையில் டிஸ்னி லேண்டை பார்த்து, அதன் மாதிரி வடிவமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எங்குள்ளது தெரியுமா?

முழுமையாக படியுங்கள்.

 பொழுதைக் கழிக்கும்

பொழுதைக் கழிக்கும்

இது வெறும் சாகசப் பிரியர்களுக்கானது மட்டுமல்ல, வயது வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கும் நோக்கத்துடனே உருவாக்கப்பட்டுள்ளது.

Bharat Bang

உலகத் தரமிக்க விளையாட்டுகள்

உலகத் தரமிக்க விளையாட்டுகள்

அதுமட்டுமில்லாமல் இதன் உலகத் தரமிக்க விளையாட்டு அம்சங்களை அனுபவிக்க எண்ணற்ற வெளிநாட்டு பயணிகளும் இங்கு வருகின்றனர்.

A.Christensen

 கேளிக்கைப் பூங்கா வாட்டர் கிங்டம்

கேளிக்கைப் பூங்கா வாட்டர் கிங்டம்

எஸல் வேர்ல்ட்டுக்கு வெகு அருகாமையில் உள்ள மற்றுமொரு கேளிக்கைப் பூங்கா வாட்டர் கிங்டம். இங்கு வரும் பயணிகள் எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம் இரண்டுக்குமான அனுமதி சீட்டையும் ஒன்றாக பெற்றுக் கொள்ளலாம்.

 சிறப்பு

சிறப்பு


இருந்தபோதிலும் இந்த இரண்டு இடங்களுக்கும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக சென்று கேளிக்கையில் ஈடுபடுவதே சிறப்பானதாக இருக்கும்.

 நீர்ப்பிரியர்களின் நீண்ட நாளைய ஆசை

நீர்ப்பிரியர்களின் நீண்ட நாளைய ஆசை


வாட்டர் கிங்டமில் உள்ள நீர் சறுக்கு விளையாட்டு மற்றும் அலைக் குளம் போன்ற அம்சங்கள் நீர்ப்பிரியர்களின் நீண்ட நாளைய ஆசையை கண்டிப்பாக பூர்த்தி செய்யும்.

 ஃபெர்ரி சேவை

ஃபெர்ரி சேவை

எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம் இரண்டையும் கோரை கடற்கரையிலிருந்து ஃபெர்ரி சேவை மூலம் சுலபமாக அடையலாம்.

 வேறு சுற்றுலாத் தளங்கள்

வேறு சுற்றுலாத் தளங்கள்


மும்பை வரைக்கும் போகிறோம். வெறுமனே இரண்டு இடங்களை மட்டும் பார்த்துவிட்டு வருவதற்காகவா? உங்களின் பொழுதை இன்னும் சுவாரசியமாக்க பல்வேறு இடங்கள் இங்கு உள்ளன.

 எலிபன்டா தீவு

எலிபன்டா தீவு

எலிபன்டா தீவு என்பது மிகவும் அற்புதமான இடங்களையும், கண்ணுக்கு இனிமையளிக்கும் நிகழ்வுகளைக் கொண்ட இடங்களையும் கொண்ட தீவு ஆகும். இங்குள்ள குகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

 எலிபன்டா குகைகள்

எலிபன்டா குகைகள்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள எலிஃபண்டா குகைகள், எலிஃபண்டா தீவில் அமைந்துள்ளது. இந்தத் தீவுக்கு 17-ஆம் நூற்றாண்டுகளில் வந்த போர்த்துகீசிய ஆராய்ச்சியாளர்கள் இங்கு நிறைய யானை சிற்பங்கள் இருப்பதைக் கண்டு இதற்கு எலிஃபண்டா தீவு என்று பெயரிட்டனர்.

wiki

 உண்மையான பெயர்

உண்மையான பெயர்

அதற்கு முன்பு கராப்புரி என்ற பெயரிலேயே இந்தத் தீவு அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு குகைகளின் நகரம் என்று பொருள்.

AKS.9955

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா முனையத்திலிருந்து படகு அல்லது ஃபெர்ரி சேவை மூலமாக எளிதாக இந்த தீவை அடையலாம். இதற்காக அவர்கள் வசூலிக்கும் கட்டணமும் குறைவுதான். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு முறை எலிஃபண்டா தீவுக்கு ஃபெர்ரி சேவை இயக்கப்படுகிறது.

A.Savin

 கர்னாலா

கர்னாலா

மஹாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் இந்த கர்னாலா எனும் கோட்டை நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 439 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான மலைகள் இருபுறமும் சூழ அமைந்துள்ளது..

Elroy Serrao

 பறவைகள் இயற்கை சரணாலயம்

பறவைகள் இயற்கை சரணாலயம்


கர்னாலா பகுதியிலுள்ள பறவைகள் சரணாலயம் இயற்கை ரசிகர்களாலும் பறவை ஆராய்ச்சியாளர்களாலும் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த சரணாலயத்தில் 150 இருப்பிடப்பறவைகளும் 37 வகையான புகலிடப் பறவைகளும் வசிக்கின்றன.

Damitr

 மலையேற்றம்

மலையேற்றம்

மலையேற்றத்துக்கு ஏற்ற ஏராளமான ஸ்தலங்களும் இந்தப்பகுதியில் அமைந்துள்ளன. விருப்பமுள்ளவர்களும் சாகச விரும்பிகளும் மலையேற்றத்துக்கு தயாராகுங்கள்.

Damitr

 அது ஒரு அழகிய மழைக்காலம்

அது ஒரு அழகிய மழைக்காலம்

மழைக்காலத்தில் இப்பகுதியின் இயற்கை அழகு இன்னும் பசுமையுடன் பளிச்சென்று எழிலுடன் திகழ்கிறது. குளிர்காலத்தில் இங்கு சில விசேஷமான புகலிட பறவைகளை காணலாம்.

Dupinder singh

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கமாக எளிதில் செல்லும் வகையில் இது போக்குவரது வசதிகளை கொண்டுள்ளது.மும்பையிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் பான்வெல் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் கர்னாலா நகரம் உள்ளது.

Damitr

Read more about: travel tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X