Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ராசிக்காரர்கள் தோஷங்கள் நீங்கி வியாபாரம் செழித்தோங்க, இந்த கோவிலுக்கு போங்க #தேடிப்போலாமா 5

இந்த ராசிக்காரர்கள் தோஷங்கள் நீங்கி வியாபாரம் செழித்தோங்க, இந்த கோவிலுக்கு போங்க #தேடிப்போலாமா 5

இந்த ராசிக்காரர்கள் தோஷங்கள் நீங்கி வியாபாரம் செழித்தோங்க, இந்த கோவிலுக்கு போங்க #தேடிப்போலாமா 5

By Sabarish

இந்தியா பலதரப்பட்ட மதங்களையும், மாறுபட்ட கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய நாடு என்பது நமக்கு தெரிஞ்ச ஒன்னுதான். இங்குள்ள மக்கள் தங்களின் மதங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட வழிபாட்டுத் தளங்களை அமைத்து அங்கு பல பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதில் குறிப்பாக இந்து மதத்தினர் அவர்களுக்கான ராசி நட்சத்திரத்தின் அடிப்படையிலும் அதற்கான சிறப்பு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். இதுபோன்ற கோவில்கள் நட்சத்திரத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்களை நீக்கி வாழ்வைச் செழிக்கச் செய்யும் என்பது தொன்னம்பிக்கை. மற்ற நட்சத்திரக்காரர்களுடன் ஒப்பிடும்போது, பரணி ராசிக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களை நீக்கி, வியாபாரம் பெருக வழிவகை செய்யும் கோவிலுக்கு போலாம் வாங்க. இந்த கோயிலுக்கு போனவர்கள் விரைவில் தொழில் விருத்தியடைந்து, நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்களாம். வாங்க அந்த கோயிலுக்குப் போகலாம்.

அக்னீஸ்வரர் திருக்கோவில்

அக்னீஸ்வரர் திருக்கோவில்


சுயசிந்தனையுடன் சாமர்த்தியமான முடிவெடுக்கும் ஆற்றல்கொண்ட பரணி நட்சத்திரக்காரர்களே அவ்வப்போது எடுக்கும் சில முடிவுகள் தோல்வியில் முடிகின்றனவா, எடுத்த காரியம் எதுவும் வெற்றியடையாமல் தடங்கள் ஏற்படுகின்றனவா ?. கவலைய விடுங்க... அக்னீஸ்வரர் கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வாங்க, இனி உங்களுக்கு வெற்றி மேல வெற்றி மட்டும்தான்.

 எங்க இருக்கு

எங்க இருக்கு

நாகப்பட்டிணம் மாவட்டம் நன்னிலம் சாலையில் திருப்புகலூர் அருகே அமைந்துள்ளது அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில். முக்கிய சாலையின் அருகிலேயே இக்கோவிலின் பிராதான நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் கோவிலை அடையலாம். இது தரங்கம்பாடியிலிருந்து வெறும் 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இதற்கு அரை மணி நேரம் மட்டுமே ஆகிறது.

எப்படி செல்வது

எப்படி செல்வது


சென்னையில் இருந்து குடும்பத்துடன் வாகனத்தில் செல்கிறீர்கள் என்றால், அடையார் வழியாக பாலவாக்கம், பையனூர், திருவிடந்தை, மாமல்லபுரம் சென்று பின் கல்பாக்கம், பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினத்தை அடையலாம். மேலும் செங்கல்பட்டு மேல்மருவத்தூர், பண்ருட்டி, சிதம்பரம் வழியாகவும் வரலாம்.

பாலவாக்கம் தேவாலயம்

பாலவாக்கம் தேவாலயம்

நாகப்பட்டினத்தை நோக்கிய இந்த போக்குவரத்தானது வெறும் ஆன்மீக பயணமாக மட்டும் அல்லாமல் பல சுற்றுலாத் தளங்களையும் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அடையாரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் பாலவாக்கம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் திருத்தலம். கட்டிடக்கலை நிறைந்த இந்த ஆலையத்தின் அழகு நிச்சயம் உங்களின் கண்களைக் கவரும் என்பதில் ஆச்சரியமில்லை.

seashorestanthony.org

பையனூர் குட்டித் தீவு

பையனூர் குட்டித் தீவு

பல வெளிநாடுகளில் உள்ளதைப் போலவே ஒரு குட்டித் தீவு நம்ம சென்னைக்கு மிக அருகில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?. ஒரு முறை அங்கேயும் போய் பாத்துட்டு வாங்க. ஆமாங்க, சென்னை அடையாருல இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மகாபலிபுரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும்தா இந்த குட்டித் தீவு இருக்கு.

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

சென்னையில் இருந்து சுமார் 40 கிnலா மீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலை ஒட்டி அமைந்துள்ளது திருவிடந்தை. இங்கு அமையப்பெற்றுள்ள 108 வைணவ திவ்ய தளங்களில் ஒன்றான நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் திருஷ்ட்டி, தடங்களை நீக்கி கல்யாண வரம் தரும் என்பது தொன்நம்பிக்கை. இதனாலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்யாண வரம் வேண்டி பக்தர்கள் அங்க வராங்கன்னா பாருங்களேன். இந்த பயணம் ஒரு பயனுள்ளதாக இருக்க தவறாம நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலுக்கு போய்ட்டு வந்துடுங்க.

Ssriram mt

மாமல்லபுரம் கடற்கரை கோவில்

மாமல்லபுரம் கடற்கரை கோவில்

சென்னையில் இருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாமல்லபுரம் திருக்கோவில். கலையம்சங்கள் நிறைந்த கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானக்கோவில் ஆகும். மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச்சின்னங்களில் ஒன்றான இந்த கோவில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியத் தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் சிற்பக்கலை காலூன்றி நிக்கும் இந்த கோவில் உங்களது பயணத்தில் மறவாத சிறந்த நினைவாக அமையும்.

Pratyeka

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி


இந்தியாவின் தெற்கு வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் பாண்டிச்சேரி. ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்த நகரில் தற்போதும் பிரெஞ்சு நாகரீகம் ஆங்காங்கே காணப்படுகிறது. நாகப்பபட்டிணத்தை நோக்கிய இந்த பயணத்தில் பாண்டிச்சேரிய கண்டிப்பா மிஸ் பண்ணிடாதிங்க. இதுக்குன்னே ஒரு நாளை ஒதுக்கி ஆரோவில் கடற்கரை, பொட்டானிக்கல் கார்டன், அரிக்கமேடு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கெல்லாம் சுற்றுலா போலாம்.

காரைக்கால்- நாகப்பட்டினம்

காரைக்கால்- நாகப்பட்டினம்

பாண்டிச்சேரியில் இருந்து கடலூர், சிதம்பரம் வழியா காரைக்கால் வந்து அடுத்த 20 கிலோ மீட்டர்ல நாகப்பட்டினத்தை வந்தடைந்து விடலாம். இந்த கடலூர்- நாகப்பட்டினத்திற்கு இடையிலான 230 கிலோ மீட்டர் பயணமும் உங்களுக்கு காத்திருக்கு பல சுற்றுலாத் தளங்கள். ஆமாங்க, கடலூர்ல உள்ள பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை சைவ, வைனவ பண்பாட்டை தற்போதும் நினைவுகூறுகின்றன. அதுமட்டுமல்லாம, சதுப்பு நில காடுகலும், நீர் விளையாட்டுகளும் கடலூரில் உள்ள பிச்சாவரத்தில் தான் இருக்கு. நீங்க இயற்கையை ரசிக்கும் தன்மையுடையவர் என்றால் உங்களுக்கு இந்த இடம் சிறந்த தேர்வுதான்.

சிதம்பரம்

சிதம்பரம்

தமிழகத்தில் பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில். நடனக்கோலத்தில் சிவன் அமைந்துள்ள இந்த சிதம்பரம் நகரம் தமிழ்நாட்டில் உள்ளோர் ஒரு முறையாவது காணவேண்டிய தளமாகும். இங்கு ஆன்மீக அம்சங்களைக் கடந்து திராவிட வரலாறுகளும், தென்னிந்தியாவின் கலைப்பாரம்பரியமும் மனதில் இருந்து நீங்காத ரிசனையைத் தரும். சிதம்பரம் கோவில் மட்டுமின்றி இதன் அருகிலுள்ள அனைத்து கோவில் தலங்களுக்கும் செல்வது மன அமைதியைத் தருவதோடு, நம் வரலாற்றையும் அரிய ஓர் வாய்ப்பாக அமையும்.

Richard Mortel

 தோஷங்களை நீக்கும் திருக்கோவில்

தோஷங்களை நீக்கும் திருக்கோவில்


நாகப்பட்டின நகருக்கு 37 கிலோ மீட்டர் முன்னதாக திருக்கடையூருக்கு அருகில் அமைந்துள்ளது பரணி நட்சத்திரக்காரர்களுக்கான அக்னீஸ்வரர் திருக்கோவில். நவகிரகத் தலங்களில் சுக்கிரனுக்குரிய தலமாக இந்தக் கோவில் உள்ளது. சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது. சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச்சியப்பு ஆகும். ஐந்து நிலைகளுடைய ராஜகோபுரம் கொண்ட அக்னீஸ்வரர் கோவிலின் தெற்கு வாசல் வழியாக உள்ளே வந்தால் உள்மண்டபத்தை அடையலாம்.

இந்தக் கோவிலில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக் கோலத்தை காட்சிப்படுத்தியதாலேயே இங்கு வந்து வழிபடுவோருக்கு தோஷங்கள் நீக்கி கல்யாண வரம் கிடைக்கிறது என ஒரு தொன்நம்பிக்கை உள்ளது.

Richard Mortel

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

நாகப்பட்டிணம் வரைக்கும் வந்தாச்சு, வழிபாட்டையும் முடிச்சாச்சு, பின்ன என்னங்க... அப்படியே பக்கத்துல என்ன இருக்குதுன்னும் போய் பாத்துட்டு வந்தரலாம் வாங்க.

ஆமாங்க, நாகப்பட்டினத்தை சுற்றிலும் பல சுற்றுலாத்தலங்களும், வழிபாட்டுத் தலங்கம் இருக்கு. அதுலயும் குறிப்பா நாகூர், வேளாங்கண்ணி கடற்கரை தேவாலயம், தரங்கம்பாடி, ராமர் பாதம் உள்ள கோடியக்கரை போன்றவை இந்த பயணத்தை மேலும் மெருகூட்டும்.

நாகூர் தர்கா

நாகூர் தர்கா

நாகப்பட்டின நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குவது நாகூர். இங்கு அமைந்துள்ள இஸ்லாமிய சமயத்தை போற்றும் தர்கா மத ஒற்றுமையை போற்றும் வகையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்களும் வழிபாடு செய்யும் தலமாகவும் உள்ளது. இந்தியாவில் ஒரு சில தர்காவுல மட்டும்தாங்க வேற்று மதத்தினரை உள்ளே அனுமதிப்பாங்க. இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறையை காண விரும்புவோருக்கு இந்த இடம் ஒரு அரிய வாய்ப்புதான்.

sundaramrajaraman

 வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி

கிறிஸ்துவர்களின் புண்ணிய திருதலங்களில் ஒன்றான வேளாங்கண்ணி நாகப்பட்டினத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேளாங்கண்ணியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், காணிக்கை அருங்காட்சியகம், பேராலய கடை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை போன்றவை கண்களைக் கவரும் இடங்களாக உள்ளது.

rajaraman sundaram

 தரங்கம்பாடி டேனியக் கோட்டை

தரங்கம்பாடி டேனியக் கோட்டை


டேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை தரங்கப்பாடியில், வங்கக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி 1620 இல் கட்டப்பட்ட இந்தக் கோட்டை டேனிஷ்காரர்களின் கோட்டைளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும்.

தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டேனியக் கோட்டையில் ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் கால காசுகள், டேனிஷ் தமிழ் ஆவணங்கள் போன்றவை வரலாற்று ஆர்வலர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும். 2011ஆம் ஆண்டு தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் புதுப்பிக்கப்பட்ட இக்கோட்டை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

Eagersnap

கோடியக்கரை இராமர் பாதம்

கோடியக்கரை இராமர் பாதம்

நாகப்பட்டினம் நகாிலிருந்து 55 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும், இராமாயணத்தில் அறியப்படும் ராமன் இங்கு வந்து சென்றதற்கான அடையாளமான ராமர் பாதம் இங்கு அமைந்து உள்ளது.

unknown

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X