» »இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய யாத்திரை தலங்களில் ஒன்றா அம்பாஜிக்கு செல்வோம்!

இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய யாத்திரை தலங்களில் ஒன்றா அம்பாஜிக்கு செல்வோம்!

Written By: Udhaya

அம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும். அம்பாஜி மாதாவின் பீடம் காபார் மலை உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த காபார் மலைத் தொடர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கன்தா மாவட்டத்தில் அமைந்துள்ள தான்டா தாலுகாவில் உள்ளது. இங்கு பத்ராவி பூர்ணிமா மற்றும் தீபாவளி தருணங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த இடத்தை ஆரவல்லி மலையின் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளன. இவ்விடத்தின் இயற்கை அழகு மற்றும் அமைதி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நிறைவான ஆன்மீக அனுபவத்தை தருகிறது.

 எங்குள்ளது?

எங்குள்ளது?

அம்பாஜி குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள பலன்பூரிலிருந்து சுமார் 50 கீ.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து மவுண்ட் அபு சுமார் 65 கீ.மீ தொலைவிலும், பாலன்பூர் சுமார் 45 கீ.மீ தொலைவிலும் அமைந்திருக்கின்றன.

Kaushik Patel

 முக்கியமான சுற்றுலா இடங்கள்

முக்கியமான சுற்றுலா இடங்கள்

கப்பார் மலையில், கைலாஷ் மலையில் உள்ளது போன்று சன்செட் பாயிண்ட்கள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து கண்ணுக்கினிய சூரிய அஸ்த்தமனத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல் இழுவை வண்டி சவாரி போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

கப்பார் மலையில் பல்வேறு ஆன்மீக இடங்கள் உள்ளன. முக்கிய கோவில் பின்புறம் மானசரோவர் என்கிற குளம் காணப்படுகிறது. அந்த குளத்தின் இரு புறங்களிலும் இரண்டு கோயில்கள் உள்ளன். ஒன்று மகாதேவர் கோயில், மற்றொன்று அம்பாஜி தேவியின் சகோதரியான அஜய் தேவி கோவிலாகும்.

புகழ்பெற்ற ஸ்ரீ கோட்டேஷ்வர் மகாதேவர் கோவில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் 8 கீ.மீ தொலைவில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்கு மிக அருகில் உள்ளது. இது சரஸ்வதி நதி மற்றும் காமுக்கில் உள்ள ஒரு புனித குந்த்திற்கு தொடர்பில் இருக்கிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றான அம்பாஜிக்கு ஆண்டு தோறும் கணக்கில் அடங்கா எண்ணிக்கையிலான பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

Emmanuel DYAN

காமாக்ஷி மந்திர்

காமாக்ஷி மந்திர்


காமாக்ஷி மந்திர், கேத்பிரம்மா நெடுஞ்சாலையில், அம்பாஜியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள காமாக்ஷி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியாவில் உள்ள அனைத்து 51 சக்தி பீடங்கள் மற்றும் அண்ட வெளியின் ஆதி சக்தியான அன்னையின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோவில் அன்னையின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிய முழுமையான தகவல்களை பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்குகிறது.

Emmanuel DYAN

மாங்கல்யா வான் மற்றும் கைலாஷ் தேக்ரி

மாங்கல்யா வான் மற்றும் கைலாஷ் தேக்ரி

மாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.

மாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஜோதிட தோட்டம் ஆகும். இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன. ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள் கொடுப்பதாக கூறுகின்றனர். ஜோதிட தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்தத் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் அவர்களுக்கு தேவைப்படும் ஜோதிட தாவரங்களின் கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருவருடைய ராசிக்கான மரத்தை ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

Emmanuel DYAN

மானசரோவர்

மானசரோவர்


மானசரோவர் என்பது அம்பாஜி கோவிலுக்கு பின்னால் அமைந்துள்ள ஒரு பெரிய செவ்வக வடிவ குளம் ஆகும். இது 1584 மற்றும் 1594 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அன்னையின் பரம பக்தரான ஸ்ரீ டபிஷன்கர் என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் உள்ளன. மேலும் இந்தக் குளத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கோயில்கள் காணப்படுகின்றன.

இந்த இடத்திற்கு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் புனித நீராட வருகை புரிகின்றனர்.

 கோட்டேஷ்வர் மகாதேவர் கோயில்

கோட்டேஷ்வர் மகாதேவர் கோயில்

கோட்டேஷ்வர் மகாதேவர் கோவில் அம்பாஜியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெய்வீக நதியான சரஸ்வதியின் அருகில் அமையப்பெற்றிருக்கிறது.இந்த இடத்தில் உள்ள மிக முக்கியமன சுற்றுலா தலங்களாக வால்மீகி ஆசிரமம் மற்றும் சக்தி ஆசிரமம் ஆகியவை விளங்குகின்றன.

Kaushik Patel

கப்பார் மலை

கப்பார் மலை

கப்பார் மலை குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ல அம்பாஜி கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தெய்வீகமான இடம் புனித அன்னை அம்பாஜியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்து மத புராணமான தந்த்ரா சூடாமணியில் தேவி சதியின் இறந்த உடலில் இருந்து ஒரு துண்டு இதயம் இந்த மலையில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மலை ஏறி கோவிலை அடைய உதவும் 999 படிகள் இங்கு இருக்கின்றன. மலை உச்சியில் இருந்து சூரியன் மறைவதைப் பார்த்து ரசிக்கும் அனுபவம் ஓவியம் போல நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

Kaushik Patel

 பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம்

பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம்

பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் பெயர் இதன் எதிர் முனைகளில் அமைந்துள்ள இரண்டு கோயில்களான பல்ராம் மற்றும் அம்பாஜியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இச்சரணாலயம் குஜராத் அரசால் ஆகஸ்ட் 7, 1989 இல் சுற்று சூழலை பாதுகாக்க மற்றும் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த சரணாலயத்தில் சோம்பல் கரடி, முள்ளம்பன்றி, கோடிட்ட கழுதை புலி, புல்புல், நரி, இந்திய புனுகு பூனை போன்ற விலங்குகள் உள்ளன. அவற்றைத் தவிர பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளான கடாயா, குகால் மற்றும் முஸாலி போன்றவைகளும் செழித்தோங்கி வளர்ந்திருக்கின்றன.

વિહંગ

வானிலை

வானிலை


அம்பாஜியில் ஆண்டு முழுவதும் இதமான வானிலையே நிழவுகிறது.

 அம்பாஜியை எவ்வாறு சென்றடைவது?

அம்பாஜியை எவ்வாறு சென்றடைவது?

சாலை மூலம்


அம்பாஜி, அகமதாபாத் (180km), அபு சாலை நிலையம் (20km), மவுண்ட் அபு (45km), தில்லி (700km), பாலன்பூர் (65km) மற்றும் ஹிம்மட் நகர் (110km) போன்ற நகரங்களுடன் நன்கு சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்தமான பஸ்கள் இந்த நகரங்களில் இருந்து அம்பாஜிக்கு இயக்கப்படுகின்றன.

tamil.nativeplanet.com

ரயில் மூலம்
அம்பாஜிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் அபு சாலை நிலையம் ஆகும். இது அம்பாஜியில் இருந்து சுமார் 20 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தில்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து அம்பாஜி செல்ல டாக்ஸி சேவைகள் உள்ளன. அவற்றிற்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

tamil.nativeplanet.com

விமானம் மூலம்

அம்பாஜிக்கு அருகிலுள்ள விமான நிலையம், அம்பாஜியில் இருந்து சுமார் 180 கி.மீ தொலைவில், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் இருந்து அம்பாஜி செல்ல டாக்ஸி கட்டணம் ரூ 2500 ஐ சுற்றி இருக்கும். இந்த விமான நிலையம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் சில சர்வதேச நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

tamil.nativeplanet.com