» »லக்னோவிலுள்ள பாரா இமாம்பாராவிற்கு ஒரு பயணம் செல்லலாமா?

லக்னோவிலுள்ள பாரா இமாம்பாராவிற்கு ஒரு பயணம் செல்லலாமா?

Written By: Udhaya

எந்த ஒரு வினைக்கும் அதற்கு நிகரான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இதைத்தான் நாம் அனைவரும் பள்ளிகளிலிருந்தே கற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் ஒரு மாளிகை இருப்பது உங்களுக்கு தெரியுமா?

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உலக விஞ்ஞானிகளையே பிரம்மிப்பில் ஆழ்த்திய ஒரு நகரம் உள்ளது.

கடல்கடந்து விண்வெளிகள் கடந்து பால்வழிகளை ஆராயும் விஞ்ஞானிகளையே ஒரு நிமிடம் இந்த இடம் புரட்டிப்போட காரணம் இங்கு அமைந்துள்ள ஒரு மாளிகை.

நியூட்டனின் புவியீர்ப்பு விதிகளையே மறுத்து கட்டப்பட்டிருக்கும் இந்த மாளிகையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது


உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ளது பாரா இமாம்பாரா எனும் இடம். இங்குள்ள கோட்டை அல்லது மாளிகைதான் மேற்குறிப்பிட்டுள்ள வாயைப் பிளக்கும் நிகழ்வுக்கு காரணம்.

 புவியீர்ப்பு விசை பற்றிய நிகழ்வு

புவியீர்ப்பு விசை பற்றிய நிகழ்வு

புவியீர்ப்பு விசை பற்றி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு முழு கட்டிடமே புவியீர்ப்பைப் பற்றி கட்டியிருப்பதாக எங்கேயாவது கேட்டிருக்கிறோமா?

புரியவில்லையா தொடர்ந்து படியுங்கள்

 பாரா இமாம்பாரா

பாரா இமாம்பாரா

பாரா இமாம்பாரா எனும் பெயருக்கு மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் என்பது பொருளாகும். இது அஸ்ஃபி உத் தௌலா எனும் நவாப் மன்னரின் நினைவாக அஸ்ஃபி இமாம்பாரா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

Amritamitraghosh

 கட்டியவர் யார் தெரியுமா?

கட்டியவர் யார் தெரியுமா?

அஸ்ஃபி உத் தௌலா எனும் நவாப் மன்னர்தான் இந்த வழிப்பாட்த்தலத்தை 1783ம் ஆண்டில் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நகரத்தில் உள்ள பிரதானமான வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக இந்த இமாம்பாரா வீற்றிருக்கிறது.

Pawan Mirchandani

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கிராவிட்டி பேலஸ்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கிராவிட்டி பேலஸ்

புவியீர்ப்பு மாளிகையானது சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து தன்வசம் ஈர்க்கிறது. இங்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏன் தெரியுமா?

Prateek1961

மர்மமான மாளிகை கதவுகள்

மர்மமான மாளிகை கதவுகள்

இங்கு மொத்தம் 489 கதவுவழிகள் உள்ளன. இங்கிருந்து ஒரு மைல் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதை கோமதி ஆறு வரை செல்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த சுரங்கப்பாதை தற்போது கண்ணில் தென்படவில்லை.

Amritamitraghosh

 மிதக்கும் தோற்றம்

மிதக்கும் தோற்றம்

இந்த மாளிகைக்குள் செல்பவர்கள் தங்களை மிதப்பவர்களாகவே உணருகின்றனராம். உண்மையில் மிதக்கிறார்களா அல்லது பெயரைக் கேட்டதும் கற்பனை செய்துகொள்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Aj.for.arjun

புவியீர்ப்பு விசை மாளிகையின் சிறப்புகள்

புவியீர்ப்பு விசை மாளிகையின் சிறப்புகள்

இந்த மாளிகை அரேபிய மற்றும் ஐரோப்பிய கட்டுமானக் கலைகளின்படி கட்டப்பட்டுள்ளது.

50மீ நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மாளிகையானது 8 மிகப்பெரிய தளங்களைக் கொண்டுள்ளது.

Chakki131

எத்தனை பேர் சேர்ந்து கட்டியது தெரியுமா

எத்தனை பேர் சேர்ந்து கட்டியது தெரியுமா

இந்த மாளிகையை கட்டியவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 20000 ஆயிரம் பேர். பகலில் சாதாரண கட்டுமானத் தொழிலாளர்களும், இரவில் கட்டிடக்கலை வல்லுநர்களும் இந்த கட்டுமானத்தில் பணியாற்றியுள்ளனர். அதனால்தான் இந்த கட்டிடம் சிறப்பாக வந்துள்ளதாக கூறுகின்றனர்.

Aounaqvi

அபாயகரமான உண்மை

அபாயகரமான உண்மை

இந்த மிக பிரம்மாண்ட கட்டிடத்தைக் கட்டியவர்களுக்கு இறுதியில் என்ன ஆயிற்று தெரியுமா? அந்த நிகழ்வு இந்த கட்டிடம் கட்டி முடிந்த அடுத்த நொடியே நிகழ்ந்துள்ளது என்பது மிகவும் துயரம்.

Aditya22041992

குடும்பத்துடன் எரிக்கப்பட்ட கட்டுமான வல்லுநர்கள்

குடும்பத்துடன் எரிக்கப்பட்ட கட்டுமான வல்லுநர்கள்

இதற்கு மேல் இப்படிஒரு கட்டிடம் கட்டவேக் கூடாதென்று இந்த வல்லுநர்கள் அனைவரும் குடும்பத்துடன் கொளுத்தப்பட்டதாக செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன.

Aggarwalmanish191

தூண்களும் இல்லை தாங்கிகளும் இல்லை

தூண்களும் இல்லை தாங்கிகளும் இல்லை

இப்படிப்பட்ட மிகப்பெரிய பிரம்மாண்டமான கட்டிடத்துக்கு வெளிப்புறத்திலிருந்து தூண்களும், தாங்கிகளும் பயன்படுத்தப்படவில்லையாம். படத்தில் காணும் தூண்கள் போன்ற அமைப்பும் கூட கட்டிடத்துடனே அழகுக்காக நிறுவப்பட்டதாக கூறுகின்றனர்.

Ashusopku

 இன்டர் லூப்பர்

இன்டர் லூப்பர்

ஆங்கிலத்தில் இன்டர் லூப்பர் எனக் குறிப்பிடப்படும் பல இடங்கள் இங்கு உள்ளன. அதாவது நீங்கள் இதனுள் சென்றால் எப்படி வெளிவருவது என்பதே தெரியாது. ஒரே ஒரு ஆள் செல்லும் அளவுக்கு மிகமிக நெருக்கமாக கட்டப்பட்டுள்ளது இந்த பாதைகள்.

SIDDHARTHGOEL

 1000க்கும் அதிகமான குறு குறு பாதைகள்

1000க்கும் அதிகமான குறு குறு பாதைகள்

மிகவும் குறுகலான ஒருங்களித்துச் செல்லும்வகையிலான பாதைகள் 1000க்கும் மேற்பட்டது இருக்கிறது.

Ashokkalbhor

புரியாத புதிர்கள்

புரியாத புதிர்கள்


புரியாத புதிர்கள் பல இந்த மாளிகையில் உள்ளது. அதை தெளிவுபடுத்த விஞ்ஞானிகள் பலர் முயன்றனர்.எனினும் இதன் முழுமையான இயற்பியல் பின்னணி பற்றி இதுவரை யாரும் விளக்கவில்லை.

Sudhir Herle

 மர்மமான முறையில் அடைக்கப்பட்ட சுரங்கங்கள்

மர்மமான முறையில் அடைக்கப்பட்ட சுரங்கங்கள்

இந்த மாளிகையில் பல சுரங்கள் அடைக்கப்பட்டன. காரணம் குறித்து தேடியபோது, பல்வேறு காரணங்கள் கிடைத்தன. பேய், மர்மங்கள் என பல இருந்தாலும், நாம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பதில் ஒன்று கிடைத்தது. அதாவது, இந்த சுரங்கங்களில் பயணிப்பவர்கள் மறு எல்லையை தொட்டதே இல்லையாம். இதன் காரணமாக மூடிவிட்டதாக கூறுகின்றனர்.

Sudhir Herle

எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

வருடம் முழுவதும் இந்த மாளிகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எனினும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலச் சூழ்நிலை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

Asitjain

 திறந்திருக்கும் நேரம்

திறந்திருக்கும் நேரம்


பாரா இமாம்பாராவிற்கு காலை முதல் மாலைவரை எந்த நேரமும் செல்லமுடியும். திங்கள்கிழமை தவிர்த்து காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை 25ரூ கட்டணத்தில் எந்நேரமும் செல்லலாம்.

Aditya Akolkar

எப்படி செல்வது

எப்படி செல்வது

விமான நிலையம் லக்னோ 14 கிமீ

ரயில் நிலையம் லக்னோ நகரம் 5 கிமீ

பேருந்து வழியாக செல்வதென்றால் டெல்லியிலிருந்து 550கிமீ, ஆக்ராவிலிருந்து 366கிமீ, கான்பூரிலிருந்து 90 கிமீ, வாரனாசியிலிருந்து 320 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Varun Shiv Kapur

Read more about: travel