Search
  • Follow NativePlanet
Share
» »பாக்சுவில் இயற்கையோடு கொஞ்சி விளையாடுங்கள்!

பாக்சுவில் இயற்கையோடு கொஞ்சி விளையாடுங்கள்!

பாக்சுவில் இயற்கையோடு கொஞ்சி விளையாடுங்கள்!

ஹிமாச்சல பிரதேசத்தில் மெக்லியோட்கஞ்ச் நகருக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் பாக்சு நகரம் அதன் தொன்மை வாய்ந்த கோயில்களுக்காகவும், அழகிய அருவிகளுக்காகவும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நகரம் தர்மஷாலாவுக்கு அருகாமையில் இருப்பதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளோடு, ஏராளமான பக்தர்களும் இங்கு ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

பாக்சு நகரின் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாக மெக்லியோட்கஞ்ச்சிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பாக்சுனாக் கோயில் அறியப்படுகிறது. இந்தக் கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதுடன், இங்கு நிறைய குளங்களையும், 'புலித்தலை' நீரூற்றுகளையும் காண முடியும். இதில் புலியின் தலையை போன்று காட்சியளிக்கும் 'புலித்தலை' நீரூற்றுகள் ஹிந்து மதத்தினரால் புனிதமானதாக கருதப்படுகிறது.

சரி பாஸ், வாங்க பாக்சு பத்தியும் அதன் அழகுகள் பத்தியும் விரிவா பாக்கலாம்.

 பாக்சு

பாக்சு


பாக்சு நகருக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக இந்திராஹர் பாஸ் பகுதிக்கு சென்று வர வேண்டும். இந்த புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 4342 கிலோமீட்டர் தொலைவில், தௌலாதர் மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது.

Travelling Slacker

 மலையேற்றம்

மலையேற்றம்

அதோடு இந்திராஹர் பாஸ் பகுதியின் புவியியல் அமைப்பு சம்பா மற்றும் காங்க்ரா பகுதிகளின் எல்லையாக இயற்கையாக அமையப்பெற்றிருக்கிறது. மேலும் தர்மஷாலா அல்லது மெக்லியோட்கஞ்ச் பகுதிகளிலிருந்து டிரெக்கிங் மூலமாக இந்திராஹர் பாஸ் பகுதியை நீங்கள் சுலபமாக அடைந்து விட முடியும்.

Aleksandr Zykov

 இங்கேயும் செல்லலாம்

இங்கேயும் செல்லலாம்


அதுமட்டுமல்லாமல் சம்பா மற்றும் தர்மஷாலா பகுதிகளுக்கு இடையே உள்ள டிரெக்கிங் பாதையில் அமைந்திருக்கும் மின்கியானி பாஸ் பகுதிக்கும் நேரமிருந்தால் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.

 பாக்சுநாதர் கோயில்

பாக்சுநாதர் கோயில்


பாக்சு நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வரும் பாக்சுநாதர் கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1770 அடி உயரத்தில், இடைக்கால கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மிகச் சிறந்த சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த தொன்மை வாய்ந்த கோயில் ஹிந்து மற்றும் 'கூர்க்கா' இனத்தவர்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

Kiran Jonnalagadda

 குளங்கள்

குளங்கள்

இங்கு நிறைய குளங்களையும், 'புலித்தலை' நீரூற்றுகளையும் காண முடியும். அதோடு இந்தக் குளங்களின் நீர் பாவங்களை போக்கும் சக்தி உடையது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் பாக்சுனாக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்கள் வேண்டும் வரங்களை கொடுக்க வல்லதாகவும் உள்ளூர் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

Kiran Jonnalagadda

 இந்திராஹர் பாஸ்

இந்திராஹர் பாஸ்

பாக்சு நகருக்கு சுற்றுலா வரும் சாகசப் பிரியர்களுக்கு இந்திராஹர் பாஸ் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 4342 கிலோமீட்டர் தொலைவில், தௌலாதர் மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது.

Aleksandr Zykov

 சுலபமாக அடைய

சுலபமாக அடைய

அதோடு இந்திராஹர் பாஸ் பகுதியின் புவியியல் அமைப்பு சம்பா மற்றும் காங்க்ரா பகுதிகளின் எல்லையாக இயற்கையாக அமையப்பெற்றிருக்கிறது. மேலும் தர்மஷாலா அல்லது மெக்லியோட்கஞ்ச் பகுதிகளிலிருந்து டிரெக்கிங் மூலமாக இந்திராஹர் பாஸ் பகுதியை நீங்கள் சுலபமாக அடைந்து விட முடியும்.

Geoff Stearns

 மின்கியானி பாஸ்

மின்கியானி பாஸ்

சம்பா மற்றும் தர்மஷாலா பகுதிகளுக்கு இடையே உள்ள டிரெக்கிங் பாதையில், இந்திராஹர் பாஸ் பகுதிக்கு மேற்கே அமைந்திருக்கும் மின்கியானி பாஸ் பகுதிக்கு நேரமிருந்தால் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம். இந்த மின்கியானி பாஸ் பகுதியிலிருந்து பயணிகள் வடக்குப் பகுதிகளின் அழகான சிகரங்களை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம். மேலும் கரேரி ஏரிப் பகுதியிலிருந்தும் மின்கியானி பாஸ் பகுதியை நீங்கள் டிரெக்கிங் மூலம் அடைய முடியும்.

Aleksandr Zykov

 பாக்சு அருவி

பாக்சு அருவி


பாக்சு நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்ந்து வரும் பாக்சு அருவி மெக்லியோட்கஞ்ச் பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த அழகிய அருவி பாக்சுனாக் கோயிலுக்கு வெகு அருகில் அமைந்திருப்பதோடு, வாடகை கார்கள் மூலமாகவும், டிரெக்கிங் மூலமாகவும் பாக்சு அருவியை சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் மழைக் காலங்களில் இந்த அருவியின் தோற்றம் எவரையும் சொக்கவைத்து விடும்.

Aleksandr Zykov

 விமானம் மூலம்

விமானம் மூலம்

பாக்சு நகரின் அருகாமை விமான நிலையமாக தர்மஷாலா உள்நாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி, குலு போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அடிக்கடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பாக்சு நகருக்கு அருகில் உள்ள டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Travelling Slacker

 ரயில் மூலம்

ரயில் மூலம்


பாக்சு நகரின் அருகாமை ரயில் நிலையமாக பட்டான்கோட் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையத்துக்கு டெல்லியிலிருந்து அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக பாக்சு நகரை அடைந்து விடலாம்.

Travelling Slacker

 சாலை மூலம்

சாலை மூலம்

மெக்லியோட்கஞ்ச் மற்றும் தர்மஷாலா போன்ற ஹிமாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் பாக்சு நகருக்கு இயக்கப்படுகின்றன.

Aleksandr Zykov

 கோடை காலம் (மே முதல் ஜூன் வரை) :

கோடை காலம் (மே முதல் ஜூன் வரை) :

பாக்சு நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 20 டிகிரியும், குறைந்தபட்சமாக 13 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

Travelling Slacker

 மழைக் காலம் (ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) :

மழைக் காலம் (ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) :

பாக்சு நகரின் மழைக் காலங்களில், அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மழைப் பொழிவு மிகவும் குறைவாக காணப்படுவதால் பெரும்பாலான பயணிகள் பாக்சு நகருக்கு மழைக் காலங்களில் பயணம் மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர்.

Desmond Kavanagh

 பனிக் காலம் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) :

பனிக் காலம் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) :

பாக்சு நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 8 டிகிரியும், குறைந்தபட்சமாக 3 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

Travelling Slacker

 வர்லாம் வர்லாம் வா

வர்லாம் வர்லாம் வா

பாக்சு நகரம் மிதமான கோடை காலத்தையும், குளிர்ச்சியான பனிக் காலத்தையும் கொண்டது. இதன் குளிர் காலங்களில் வெப்பநிலை குறைவாக காணப்படுவதுடன், பனிமழையும் பெய்யுமாதலால் சுற்றுலாப் பயணிகள் பனிக் காலங்களில் பாக்சு நகருக்கு வருவதையே பெரிதும் விரும்புகின்றனர். எனினும் உறையவைக்கும் பனிக் காலங்களை விரும்பாத பயணிகள் கோடை காலங்களில் பாக்சு நகருக்கு சுற்றுலா வரலாம்.

Desmond Kavanagh

Read more about: travel hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X