» »பயம் வேண்டாம்... வாருங்கள் நீர்வீழ்ச்சிகளின் உலகத்துக்கு..

பயம் வேண்டாம்... வாருங்கள் நீர்வீழ்ச்சிகளின் உலகத்துக்கு..

Written By: Udhaya

சத்தீஸ்கர் மாநிலத்தில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளுக்கு இப்போது நாம் பயணிக்கவிருக்கிறோம்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அகழ்வுச்சான்றுகள் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வராய்ச்சிகளில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன.

இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை வசப்படுத்தும் சுற்றுலா அம்சங்களை இம்மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது

ஆனாலும் இங்குள்ள ஒரு குறிப்பிட்ட சுற்றுலாத் தளத்துக்கு செல்வதென்பது மிகவும் ஆபத்தானது.. வேறுயாரும் அல்ல.. நாகராஜாதான்.. ஆத்தாடி.. இவ்ளோ பாம்ப நீங்க படத்தில்கூட பாத்துருகிக முடியாதுப்பு...

நீர்வீழ்ச்சிகளின் உலகம் இது

நீர்வீழ்ச்சிகளின் உலகம் இது

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு சிறு கிராமம். இந்த கிராமத்தில் மனிதர்களை விட பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாம்.

நீர்வீழ்ச்சிகளின் உலகம் இது

நீர்வீழ்ச்சிகளின் உலகம் இது


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்த கிராமத்திற்குள் நீங்கள் காலடி வைத்துவிட்டால், அடிக்கு இரண்டு பாம்புகள் வீதம், உங்கள் காலை கடைந்து செல்லும்.

 சுற்று சூழ்நிலை

சுற்று சூழ்நிலை

கிரி மலை. கிரி என்றாலே மலை என்றுதான் பொருள். அதிகாலை சூரிய ஒளி மலையிலிருந்து விழுவதுபோல் தோன்றும். அதைவிட படுபயங்கரமான பாம்புகள் உங்களை பயந்து நடுங்கச் செய்யும்.

 இறப்புகள்

இறப்புகள்

பலர் இந்த பாம்பு கடி பட்டு இறந்துள்ளனர். எனினும் இவர்கள் ஊரை காலி செய்யாமல் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.

 மழைக் காலங்களில்

மழைக் காலங்களில்

இந்த நாட்களில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாம்.

 உள்ளூர் மக்கள்

உள்ளூர் மக்கள்


இந்த பாம்புகளால் உள்ளூர் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டாலும், அவர்கள் அதிகம் கண்டுகொள்ளாமல் நடைமுறை வாழ்க்கையையே பின்பற்றுகின்றனர்.

 சத்தீஸ்கர் அரசு

சத்தீஸ்கர் அரசு

இப்படி பாம்புகள் இருந்தும், இந்த கிராமம்தான் சத்தீஸ்கர் மாநிலத்திலேயே தூய்மையான நகரம் என அந்த மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

 விபத்தும் சிகிச்சையும்

விபத்தும் சிகிச்சையும்

வருடத்துக்கு 300, 400 பேர் பாம்பு கடி பட்டு இறக்கின்றனர். மேலும் தினம் தினம் கடிபடும் மக்களுக்கு இங்கு இயற்கை வைத்தியமே மேற்கொள்ளப்படுகிறது. இதில் சோகம் என்னவென்றால் இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறுவர் சிறுமியர்கள்.

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

சரி நீங்க ஒருவேள இந்த பக்கம் போறதா இருந்தா பார்த்து போங்க.. நாம இப்போ சுற்றுலா பத்தி பாக்கலாம்.

இங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி, தம்ரா கூமர் நீர்வீழ்ச்சி, மண்டவா நீர்வீழ்ச்சி, கங்கேர் தாரா, அகுரி நலா, கவர் காட் நீர்வீழ்ச்சி மற்றும் ராம்தாஹா நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம்.

 அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி

அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி

கோரியா மாவட்டத்தில் உள்ள இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி ஹஸ்தோ ஆற்றில் உருவாகிறது.

மனேந்திரகர் - பைகுந்த்பூர் நெடுஞ்சாலையில் ஹரா நாக்பூர் எனும் இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 80-90 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி பனிப்படலம் போன்று நீர்ச்சிதறல் பரவி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

uday

கவர் காட் நீர்வீழ்ச்சி

கவர் காட் நீர்வீழ்ச்சி

கவர் காட் நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படும் இந்த இயற்கை நீர்வீழ்ச்சி ஹஸ்தோ ஆற்றில் உருவாகிறது. இது பைகுந்த்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில், தர்ரா எனும் கிராமத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. 50-60 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பாறைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுகின்றன.

 ராம்தாகா நீர்வீழ்ச்சி

ராம்தாகா நீர்வீழ்ச்சி

ராம்தாகா நீர்வீழ்ச்சி கோரியா மாவட்டத்தில் பனஸ் ஆற்றில் உருவாகிறது. இது பைகுந்த்பூர் நகரத்திலிருந்து 160 கி.மீ தூரத்தில் பவர்கோஹ் எனும் கிராமத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. 100-120 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பெரும் பாறைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுகின்றன.

 அகுரி நளா

அகுரி நளா

அகுரி நளா எனும் இந்த சிறிய நீர்வீழ்ச்சி கோரியா மாவட்டத்தில் பைகுந்த்பூர் நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் பனிஸ்பூர் எனும் கிராமத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பாறைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுகின்றன. கோடைக்காலத்தில்கூட இந்த இடம் குளுமையுடன் காட்சியளிப்பது ஒரு அதிசயமாகும்.

Read more about: travel, temple, tour