» »சத்தீஸ்கரில் அதிகம் அறியப்படாத இயற்கை சொர்க்கம் காணலாம் வறீங்களா?

சத்தீஸ்கரில் அதிகம் அறியப்படாத இயற்கை சொர்க்கம் காணலாம் வறீங்களா?

Written By: Udhaya

அமைதி தவழும் அழகுடன் கூடிய ஏரி நீர்ப்பரப்புகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை நிறைந்துள்ள ஒரு இயற்கை எழிற்பிரதேசமாக இந்த கோரியா மாவட்டம் ஒளிர்கிறது. இயற்கை ரசிகர்களை வெகுவாக கவரும் அம்சங்கள் இந்த பூமியில் அதிகம் வெளி உலகில் அறியப்படாமல் ஒளிந்து கிடக்கின்றன.

அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி, ராம்தாகா நீர்வீழ்ச்சி மற்றும் கவர் காட் நீர்வீழ்ச்சி போன்றவை இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாகும்..

இந்த இடம் குறித்து முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

 ஏற்ற பருவம்

ஏற்ற பருவம்

குளிர்காலத்தில் கோரியா மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. இக்காலத்தில் குளுமையான இனிமையான சூழல் நிலவுவதால் வெளிப்புற இயற்கைக்காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.

Viren vr

எப்படி செல்வது

எப்படி செல்வது


கோரியா மாவட்டம் முக்கிய நகரங்களோடு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. தலைநகரான பைகுந்த்பூர் நகரத்துக்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

uday

 அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி

அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி

கோரியா மாவட்டத்தில் உள்ள இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி ஹஸ்தோ ஆற்றில் உருவாகிறது. மனேந்திரகர் - பைகுந்த்பூர் நெடுஞ்சாலையில் ஹரா நாக்பூர் எனும் இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 80-90 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி பனிப்படலம் போன்று நீர்ச்சிதறல் பரவி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Kailash Mohankar

 அகுரி நளா

அகுரி நளா


அகுரி நளா எனும் இந்த சிறிய நீர்வீழ்ச்சி கோரியா மாவட்டத்தில் பைகுந்த்பூர் நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் பனிஸ்பூர் எனும் கிராமத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பாறைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுகின்றன. கோடைக்காலத்தில்கூட இந்த இடம் குளுமையுடன் காட்சியளிப்பது ஒரு அதிசயமாகும்.

 கவர் காட் நீர்வீழ்ச்சி

கவர் காட் நீர்வீழ்ச்சி

கவர் காட் நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படும் இந்த இயற்கை நீர்வீழ்ச்சி ஹஸ்தோ ஆற்றில் உருவாகிறது. இது பைகுந்த்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில், தர்ரா எனும் கிராமத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. 50-60 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பாறைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுகின்றன.

 ராம்தாகா நீர்வீழ்ச்சி

ராம்தாகா நீர்வீழ்ச்சி

ராம்தாகா நீர்வீழ்ச்சி கோரியா மாவட்டத்தில் பனஸ் ஆற்றில் உருவாகிறது. இது பைகுந்த்பூர் நகரத்திலிருந்து 160 கி.மீ தூரத்தில் பவர்கோஹ் எனும் கிராமத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. 100-120 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பெரும் பாறைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுகின்றன.

Read more about: travel, waterfalls