» »ராமகிரி காலபைரவர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்!

ராமகிரி காலபைரவர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்!

Posted By: Udhaya

இந்தியாவில் சிவ பக்தர்களுக்கென பற்பல கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களில் தவறாமல் இருப்பது நந்தி ஆகும். பெரும்பாலும் கோயிலின் மூலவர் முன் நின்று நந்தி அவரை வணங்குவது போல சிலை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் நந்திகளின் மர்மங்கள் பல உண்டு. வளரும் நந்தி, நிறமாறும் நந்தி என பல கோயில்களில் உள்ள நந்திகளின் மர்மங்கள் நீங்காத நிலையில், தற்போது இன்னொரு நந்தியை பற்றி பார்க்கவிருக்கிறோம்.

நந்தியின் வாயில் கொட்டும் நீர்

நந்தியின் வாயில் கொட்டும் நீர்


நந்தியின் வாயிலிருந்து நீர் அருவியாய் பாய்கிறது. இந்த நீர் ஒரு குளத்தில் சேமிக்கப்படுகிறது.

 மர்மம் என்ன தெரியுமா

மர்மம் என்ன தெரியுமா


மர்மம் என்னவென்றால் அந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை என்பதுதான்.

 எங்கேயுள்ளது

எங்கேயுள்ளது

சென்னை - திருப்பதி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஊத்துக்கோட்டை எனும் ஊர். இதனருகே ராமகிரி என்ற ஊர் உள்ளது. இது சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊரில்தான் அந்த நீர் சிந்தும் நந்தி சிலை உள்ளது.

 காலபைரவர் கோயில்

காலபைரவர் கோயில்


ராமகிரி கிராமத்தில் காலபைரவர் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலின் வெளியே ஒரு தீர்த்தம் உள்ளது.

 வருடம் முழுவதும்

வருடம் முழுவதும்


இந்த நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீர் வருடம் முழுவதும் 365 நாட்களிலும் அளவு மாறாமல் அதே அளவு நீர் வெளியேறுகிறது. இதுதான் அங்குள்ள மர்ம நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

 சுவையான தண்ணீர்

சுவையான தண்ணீர்


இந்த நீர் மிகவும் சுவை மிகுந்ததாகவும், இனிப்பு தன்மையை ஒத்ததாகவும் இருப்பதாக இங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

திருப்பதி

வெங்கடேஸ்வரர் கோயிலான திருப்பதி அமைந்திருக்கும் மலைஸ்தலமும், அதைச்சுற்றியுள்ள மலைப்பகுதிகளும் திருமலா என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.

Subham37

 ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா

ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா


மரகதப் பச்சையுடன் காட்சியளிக்கும் புல்வெளிகளைக்கொண்ட இந்த பூங்காவில் காட்டுமயில் பிரிவு, சாகபட்சணிப்பிரிவு, சிறிய வகை மாமிசபட்சணிகள் பிரிவு போன்றவை பார்வையாளர்களை கவர்கின்றன.

காலை 9 மணிக்கு திறக்கும் பூங்கா மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

SVZoo

 திருத்தணி

திருத்தணி

திருத்தணியின் மிக முக்கிய அம்சம் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். திருத்தணி முருகன் ஆலயம் என்று அழைக்கப்டும் இந்த ஆலயம் தமிழகத்தின் மிக பிரபலமான ஆலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

Srithern

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்