» »சென்னை முதலைப்பூங்கா பற்றி உங்களுக்கு தெரியுமா?

சென்னை முதலைப்பூங்கா பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By: Udhaya

சென்னையில் முதலைப் பூங்கா ஒன்று இருக்கிறது என்பதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. இவ்ளோ அருமையான ஒரு சுற்றுலா வாய்ப்பை நம் பயன்படுத்திக்கவில்லை. 

ஆனால் மகாபலிபுரம் செல்பவர்களில் சிலருக்கு இந்த முதலைப் பூங்கா எந்த அளவுக்கு நன்றாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும். வாங்க நாமளும் அத சுத்தி பாத்துட்டு வரலாம்!.

 முதலைப் பூங்கா

முதலைப் பூங்கா

சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த முதலைப் பூங்கா. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த ஓவியா பின்னர் தனக்கென ஜாலியாக சுற்றி வந்தார்,. இதுவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

madrascrocodilebank.org

அரிய வகை உயிரி

அரிய வகை உயிரி

முதலைப் பூங்காவில் பொதுவாக பல வகையான முதலைகள் இருக்கும். இந்த பூங்காவில் அதனுடன் ஆமை, பாம்பு என சில அரிய வகை உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

madrascrocodilebank.org

 மகாபலிபுரம்

மகாபலிபுரம்

இப்படி ஒவ்வொரு இடமாக மகிழ்ந்திருக்க சுற்றிவந்த ஓவியா மகாபலிபுரம் சென்றதாகவும், அங்கு தன் நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

madrascrocodilebank.org

 மகாபலிபுர முதலைப் பூங்கா

மகாபலிபுர முதலைப் பூங்கா

ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஓவியா தற்போதுள்ள புகைப்படத்தில் மகாபலிபுரம் அருகேயுள்ள முதலைப் பூங்காவில் இருந்திருந்துக்கக்கூடும்.


madrascrocodilebank.org

 பரப்பளவு

பரப்பளவு

இந்த முதலைப் பூங்கா 3.2 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இது 1976ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பாகும். சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

madrascrocodilebank.org

 சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ஒரு மணி நேரப் பயணத்தில் இந்த பூங்காவை அடையலாம்.

மாமல்லபுரம் செல்லும் வழியில் கோவளத்தை தாண்டியதும் இந்த பூங்கா அமைந்துள்ளது.

madrascrocodilebank.org

 பூங்கா செயல்படும் நாள்கள்

பூங்கா செயல்படும் நாள்கள்

திங்கள் கிழமை, அவசர பராமரிப்பு நாட்கள் தவிர்த்த மற்ற அனைத்து நாள்களிலும் இந்த பூங்கா செயல்படுகிறது.

madrascrocodilebank.org

 முக்கிய உயிரிகள்

முக்கிய உயிரிகள்

இங்கு முதலைகள், அலிகேட்டர் உள்ளிட்ட 14 வகை முதலைகளும் காணப்படுகின்றன. 12 வகை ஆமைகளும், 5 வகையான பாம்புகளும் இங்கு பராமரிக்கப்படுகின்றன.


madrascrocodilebank.org

 திறக்கும் நேரம்

திறக்கும் நேரம்

காலை 9 மணிக்கு திறக்கும் இந்த பூங்கா மாலை 5.30 மணிக்கெல்லாம் அடைக்கப்பட்டுவிடும். இங்கு நுழைவதற்கான சீட்டுகள் மாலை 5 மணி வரை மட்டுமே கொடுக்கப்படும்.

madrascrocodilebank.org

 சவாரிகள்

சவாரிகள்

இரவுநேர சவாரிகள் முன்பதிவு அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இரவு 7 மணி முதல் 8.30 மணி வரைக்கும் இந்த சவாரிகள் செல்வதற்கான காலநேரமாகும்

madrascrocodilebank.org

 நுழைவுக் கட்டணம்

நுழைவுக் கட்டணம்

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 30 ரூபாயும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சபாரிக்கான கட்டணம் பெரியவர்களுக்கு 200 ரூபாயும். சிறியவர்களுக்கு 100ரூபாயும் ஆகும்.

madrascrocodilebank.org

 கொள்கைகள்

கொள்கைகள்


இந்த நிறுவனம் இந்த உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும், உயிரிகள் பற்றி அறிந்துகொள்வதை ஊக்கிவிக்கும் வகையில் இந்த பூங்கா செயல்பட்டுவருகிறது.

நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய இந்த முதலைப் பூங்காவுக்கு போய் வரக்கூடாது...

madrascrocodilebank.org

Read more about: travel chennai

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்