» »ஹரப்பன் நகரம்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு!

ஹரப்பன் நகரம்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு!

Written By: Udhaya

ஹரப்பன் நாகரீகத்தில் எஞ்சியவைகளை கொடுள்ளதால் தோலாவிரா மிகவும் புகழ் பெற்று விளங்குவதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கருதப்படுகிறது .

இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்தின் முக்கியமான தொல்பொருள் இடமாக விளங்கும் தோலாவிரா, ரான் ஆப் கட்சில் உள்ள கதீர் பெட்டில் உள்ளது. இந்த இடத்தை டிம்பா ப்ரச்சின் மகாநகர் கோட்டடா என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். இங்கு தோண்டி கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பன் நகரம் தான் தோலாவிராவின் முக்கிய ஈர்ப்பாகும்.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பட்ட பொருள்களில் இந்து சமயத்துக்குள்ளான சிலை வழிபாடுகளுக்குரிய ஆதாரம் எதும் கிடைத்ததா? உண்மையில் இந்து சமயம் சிந்து சமவெளியிலிருந்து பிறந்ததா என்பன பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

 சிந்து சமவெளி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இதன் எச்சங்களை இந்தியாவின் வடமேற்கு மாநிலங்கள் சிலவற்றில் காணமுடிகிறது. அகழ்வாய்வுகளுக்காக இருக்கும் அந்த இடங்களைப் பற்றி காணும்போது நமக்கு சில உண்மைகள் புரியும் என நம்பலாம்,.

Himalyan

 தோலவிரா

தோலவிரா


குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த தோலவிரா. இங்குதான் ஹரப்பன் எனப்படும் சிந்து சமவெளி நாகரிக தொடர்புகள் காணப்படுகின்றன.

Rama's Arrow

 நாகரிகத்தின் சான்றுகள்

நாகரிகத்தின் சான்றுகள்


ஹரப்பன் நாகரீகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரீகம், மொழி, கலை, கட்டடக் கலையின் திட்டங்கள் போன்றவைகளை பற்றிய பல விஷயங்கள் இங்கே கண்கூடாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவதால், தோலாவிரா மனிதனின் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட இந்நகரம், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது - அவை கோட்டை, மத்திய நகரம் மற்றும் கீழ் நகரம்.

Rahul Zota

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

நகரத்தின் மையப்பகுதி கோட்டையால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் மற்றவைகளை போல செங்கல்களால் கட்டப்படாமல் முழுவதுமாக கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மற்றொரு முக்கிய அம்சமாக விளங்குவது பல நீர்த் தேக்கத்தின் உதவியுடன் செயல்பட்டு வந்த நீர் பாதுகாப்பு அமைப்பு. அணிகலன்கள், பாத்திரங்கள், தங்கங்கள், வெள்ளிகள், கடின மட்பாண்ட (டெர்ரகோட்டா) பாத்திரங்கள் மற்றும் மெசோபோட்டமியனை சேர்ந்த சில பொருட்கள் போன்ற கலை பொருட்கள் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

wiki

 ஹரப்பன் நகரம்

ஹரப்பன் நகரம்

ஹரப்பன் நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவாரசியத்தையும் திகிலையும் கலந்து அளிக்கும் விதமாக அமையும். மிகவும் சிறிய இடமான தோலாவிரா, புஜ்ஜிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனை உள்ளூர்வாசிகள் கோட்டடா டிம்பா என்றும் அழைக்கின்றனர்.

Lalit Gajjer

 மிச்சமுள்ள நாகரிகம்

மிச்சமுள்ள நாகரிகம்

எஞ்சியிருக்கும் ஹரப்பன் நாகரீகத்தை கொண்டுள்ளது இந்த இடம். சிந்து பள்ளத்தாக்கு நாகரீகத்துக்கு சொந்தமான இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் முக்கியமான இடமாகும் இது. குட்ச் பாலைவன விலங்குகளின் சரணாலயத்தில் உள்ள கதீர் பெட் த்ஹீவில் அமைந்துள்ள இந்த இடம் 1967-68 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டவை.Nagarjun Kandukuru

 மிகப்பெரியது

மிகப்பெரியது

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஹரப்பன் நகரங்களில் இது ஐந்தாவது பெரிய நகரமாகும். 1990-ஆம் வருடம் ஆரம்பித்து இன்று வரை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் இந்த இடத்தை தோண்டி கொண்டிருக்கிறார்கள்.

Nagarjun Kandukuru

எவ்வளவு பெருசு தெரியுமா?

எவ்வளவு பெருசு தெரியுமா?

100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தோலாவிரா, செவ்வக வடிவில் உள்ளது. மேலும் இது முன் கூட்டியே தீர்மானித்த கேத்திரகணித முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு கோட்டை, மத்திய நகரம் மற்றும் கீழ் நகரத்தை காணலாம். இவை அனைத்துமே அழகாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மற்றொரு அறிய வகை அமைப்பானது மேம்பட்ட நீர் பாதுகாப்பு அமைப்பாகும். இது தான் உலகத்திலேயே உள்ள பழைய பாதுகாப்பு திட்டமாக கருதப்படுகிறது.

Nagarjun Kandukuru

 பருவக்காலம்:

பருவக்காலம்:

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு பருவக்காலம் நிலவும். இக்காலத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்வதால் இந்த இடமே வெள்ளத்தில் மூழ்கும் அளவு போய் விடும்.

தோலாவிராவை அடைவது எப்படி?

தோலாவிராவை அடைவது எப்படி?


தரைவழி மார்க்கம்:
தோலாவிரா புஜ்ஜிலிருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனை பசௌ மற்றும் ரபர் வழியாக வந்தடையலாம்.


விமான மார்க்கம்:
தோலாவிராவிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் புஜ்ஜில் உள்ள புஜ் விமான நிலையமாகும்.

பின்னணி சதி

பின்னணி சதி

கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு சதியால் எதுவுமில்லாமல் அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. அதுவும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. பொதுவாகவே தமிழர்களின் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்தோட ஒத்து போகும். ஏனெனில் கட்டமைப்பு, திட்டமிடல் போன்றவற்றில் தமிழர்களே சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்னோடி என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.Nagarjun Kandukuru

கீழடி ஆய்வு போல்

கீழடி ஆய்வு போல்

தமிழர்களின் பழம்பெருமைகளை ஆய்வு செய்யும் பணியை மத்திய அரசின் அகழாய்வுத்துறை மதுரை அருகில் கீழடியில் தொடங்கி நல்ல பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அதன் தலைமை அதிகாரி மாற்றப்பட்டு, கீழடி பணிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின்னர் அதிகாரமிக்கவர்களின் சதி இருப்பதாகவும் தெரிகிறது. பல தமிழ் ஆர்வலர்கள் மத்திய மாநில அரசுகளை கைக்காட்டுகின்றனர். ஒருவேளை கீழடி பணிகள் நடைபெற்றால் தமிழரின் தொன்மை வெளியில் தெரிந்துவிடும் என அச்சப்படுபவர்களும் இருக்கிறார்கள்.

Nagarjun Kandukuru

ஆரியர்கள்

ஆரியர்கள்

மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த சிலர் சிந்துசமவெளி பகுதியில் தங்கி, அங்கிருந்தவர்களுடன் பழகி அவர்களுடனேயே கலந்துவிட்டனர் என்று சிலர் கருத்துரைக்கின்றனர். சிந்துசமவெளியில் இருந்தவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள். அவர் பேசிய மொழி தமிழாகவோ அல்லது தமிழின் முன்னோடி மொழியாகவோ இருந்திருக்கலாம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

wiki

இந்து சமய பொருள்கள்

இந்து சமய பொருள்கள்

சிந்து சமவெளி நாகரிகத்தின்போது இந்து என்ற மதமே இல்லை எனவும், இந்தியாவில் பல்வேறு வழிபாட்டு முறைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதே இந்து மதம் எனவும் பேச்சு உண்டு. சிந்து சமவெளி நாகரிகத்தின் போது பயன்படுத்தப்பட்ட சிலைகள், வழிபாட்டு பொருள்கள் காலம் கடக்க கடக்க இந்து மதத்துக்குரியதாக திரிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். இதை மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிந்து சமவெளி பகுதியைத்தான் மத்திய பகுதியிலிருந்து வந்தவர்கள் சிந்து என்பதற்கு பதிலாக ஹிந்து என்று கூறியதாகவும், அதுவே ஹிந்தியா என்றாகியதாகவும் கமல்ஹாசன் கூட சமீபத்தில் கூறியிரிந்தது நினைவிருக்கலாம்.

wiki