» »பரிநிர்வாண கோலத்தில் புத்தர் இருந்த தமிழகத்தின் ஒரே கோயில் எது தெரியுமா?

பரிநிர்வாண கோலத்தில் புத்தர் இருந்த தமிழகத்தின் ஒரே கோயில் எது தெரியுமா?

Written By: Udhaya

தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான "காஞ்சியம்பதி" என்றும் "கொஞ்சிவரம்" என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை "ஆயிரம் கோயில்களின் நகரம்" என்றே அறிந்து வைத்துள்ளனர்.

இந்த ஊரில்தான் அமைந்துள்ளது அந்த கோயில். வாருங்கள் நாமும் அந்த கோயிலுக்கு சென்று பார்க்கலாம்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு செல்வது எளிது. இந்து மதத்தினர், தம் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று வர வேண்டிய ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றான இந்நகரம், இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது.

mckaysavage

மோட்சம்

மோட்சம்

இந்து மதப் புராணங்களின் படி, அவ்வேழு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவோர் கண்டிப்பாக மோட்சத்தை அடைவர் என்று நம்பப்படுகிறது. இந்நகரம், சிவ பக்தர்கள் மற்றும் விஷ்ணு பக்தர்கள் ஆகிய இருபிரிவினருக்கும் புனித ஸ்தலமாகும். காஞ்சிபுரம் நகரில், சிவ பெருமான் மற்றும் மஹா விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்ட பல கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுள் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயிலும், சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள ஏகாம்பரநாதர் கோயிலும் மிகப் பிரபலமானவை.

Hiroki Ogawa

 புத்தர் நிர்வாண கோலம்

புத்தர் நிர்வாண கோலம்


தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புத்த விகாரங்கள் இருந்தாலும், பரிநிர்வாண கோலத்தில் எந்த சிலையையும் காணமுடிவதில்லை. ஆனால் ஏகாம்பரநாதர் கோயிலின் சுவரில், பரிநிர்வாண புத்தரின் சிலை இருந்ததாக மயிலை சீனி.வேங்கடசாமி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது இந்த கோயிலில் அந்த சிலை இல்லை.

UnKnown

 சிவ தலம்

சிவ தலம்

இந்துக் கடவுளான சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயில், வருடந்தோறும் சிவபெருமானின் அருளை வேண்டி, இங்கு வருகை தரும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. தமிழகத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளில் 25சதவிகிதம் பேர் கட்டாயம் காஞ்சிபுரத்துக்கு வருகின்றனராம்.

Krishna Chaitanya Chandolu

பழமை

பழமை

1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இதைவிட மிகப்பழமையான கோயில்கள் இருப்பினும், இது அதிகம் சுற்றுலா அம்சம் பொருந்தியதாக இருக்கிறது.

Amiya418

 பஞ்சபூதங்கள்

பஞ்சபூதங்கள்

இக்கோயில், சிவபெருமானுக்கான முக்கியமான ஐந்து பஞ்சபூத கோயில்களுள், பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். நிலம் என்பது உடல் என்று அறியப்படுகிறது. உடல் ரீதியான பிரச்னைகள் அனைத்திற்கும் இங்கு வந்து வணங்கினால் நலம் பெறுகிறது.

Ssriram mt

வட்டக்கோபுரம்

வட்டக்கோபுரம்

இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்து, இந்தியாவின் இத்தகைய உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அதிலும் மிகவும் சிறப்பானதாகவும், சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் தளமாகவும் பார்க்கப்படுகிறது.

Ssriram mt

 மாமரத்தின் கீழ் பார்வதி தேவி

மாமரத்தின் கீழ் பார்வதி தேவி

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாகக் கருதப்படும் பார்வதி தேவி, இங்கு இன்றும் காணப்படும் ஒரு மிகப் பழமையான மாமரத்தின் கீழ் அமர்ந்து, தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Ssriram mt

பல்லவர்களா சோழர்களா

பல்லவர்களா சோழர்களா


இக்கோயில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சிறந்த கைவினைக் கலைக்கு மிக உன்னதமான ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. பிற்காலத்தில், இக்கோயிலின் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் இதர நகாசு வேலைகள், அடுத்தடுத்து காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னர்களால் செய்யப்பட்டுள்ளது.

Ssriram mt

நூற்றங்கால் ஆயிரங்கால் மண்டபம்

நூற்றங்கால் ஆயிரங்கால் மண்டபம்

நூறு கால் மண்டபம் என்று இருந்ததை சோழர்கள் ஆயிரம் கால் மண்டபமாக கட்டி மறுசீரமைத்தனர். இது இக்கோயிலின் அழகை இன்னும் கூட்டுகிறது.

Ssriram mt

கோயில் வரலாறு

கோயில் வரலாறு

பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்தது இந்த கோயில். பெரும்பான்மையானவர்களால், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்கு பிற்பட்டது என்று கருதப்படுகிறது.

Hiroki Ogawa

செங்கற்களால் கட்டப்பட்டது

செங்கற்களால் கட்டப்பட்டது


இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயில் 1300 வருடங்களுக்கு முந்தையது எனும் சந்தேகத்தை தருகிறது.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

தலைநகர் சென்னையிலிருந்து இரண்டு மணிநேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

திருப்பெரும்புதூர் வழியாக செல்லும் பாதைதான் குறைந்த நேரம், குறைந்த தூரம் ஆகும்.

Read more about: travel temple kanchipuram

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்