» »சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்பட்டுவிட்டீர்களா? முழுமையாக படியுங்கள்

சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்பட்டுவிட்டீர்களா? முழுமையாக படியுங்கள்

Posted By: Udhaya

இதோ சுதந்திரதினம் வந்தாச்சு. கொடியேத்தி மிட்டாய் வாங்கி சாப்பிட்டு அப்படியே டிவியில படம் பாத்துட்டு பொழுத கழிக்கலாம்னு பாக்குறீங்களா?

அட அததான் வருடாவருடம் பண்றீங்களே. இந்த முறை கிடைத்த விடுமுறைய ஒழுங்கா பயன்படுத்தி சுற்றுலாவுக்கு போய்ட்டு வாங்களேன்.

இப்போ இருக்குற இளைஞர்கள் அதிக வாய்ப்புகளை பயன்படுத்தி சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போ டிரெண்ட்டே அதுதான். சுற்றுலாவுக்கு நீங்க தயாராகிட்டீங்களா?

 ஹம்பி

ஹம்பி

பெங்களூரு அருகிலுள்ள மிக அழகான இடம் இந்த ஹம்பி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் யுனெஸ்கோவால் சிறந்த கலாச்சார இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான்.

கர்நாடகாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான துங்கபத்திரா இந்த நகரின் வழியே ஓடுகிறது. இடிபாடுகளும் அதன் பின்னணியில் துங்கபத்திரை ஆற்றின் அழகும் சேர்ந்து இந்த பிரதேசத்தின் இயற்கை எழில் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ShivaRajvanshi

 ஹம்பியின் சில புகைப்படங்கள்

ஹம்பியின் சில புகைப்படங்கள்

ஹம்பியின் சில புகைப்படங்கள்

Dharani.prakash

 ஹம்பியின் சில புகைப்படங்கள்

ஹம்பியின் சில புகைப்படங்கள்

ஹம்பியின் சில புகைப்படங்கள்

Dey.sandip

 ஹம்பியின் சில புகைப்படங்கள்

ஹம்பியின் சில புகைப்படங்கள்

ஹம்பியின் சில புகைப்படங்கள்

Hawinprinto

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பழமையும், புதுமையும் அருகருகே அமர்ந்து அமைதியைத் தேடும் அற்புத இடமாக கிருஷ்ணகிரி உள்ளது. நவீன கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இந்த சிறிய மாவட்டத்தில் இயற்கையுடன் சேர்ந்து அமைந்திருப்பது பார்ப்பவருக்கு ஏதாவதொரு விஷயத்தை அளிக்கும் வகையில் இருக்கும்.

ஒரு பக்கத்தில் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வேளைகளில், மறுபுறமிருக்கும் மாம்பழம் பதனம் செய்யும் தொழிற்சாலைகள் இங்கிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் இடங்களாக உள்ளன.

இங்குள்ள ராயக்கோட்டை கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்பானதாக உள்ளது. தமிழ்நாட்டின் நாட்டுப்புற அமைப்பையும் இங்கு காணமுடியும்.

Ssanthosh555

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

Abhishek.Digha

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

Tapanmajumdar

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியின் அரிய புகைப்படங்கள்

A.danielwesley

 குமரகம்

குமரகம்

இந்தியப்பயணிகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விரும்பி தேடிவரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ‘குமரகம்' - இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு தீவுக்கூட்டமாகும்.

கோட்டயம் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த குமரகம் சுற்றுலாத்தலமானது உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

Geyo John

 குமரகம்அட்டகாசமான புகைப்படங்கள்

குமரகம்அட்டகாசமான புகைப்படங்கள்

குமரகம் பகுதியின் அட்டகாசமான புகைப்படங்கள்


P.K.Niyogi

 குமரகம்அட்டகாசமான புகைப்படங்கள்

குமரகம்அட்டகாசமான புகைப்படங்கள்

குமரகம் பகுதியின் அட்டகாசமான புகைப்படங்கள்


Ashwin Kumar

 குமரகம்அட்டகாசமான புகைப்படங்கள்

குமரகம்அட்டகாசமான புகைப்படங்கள்

குமரகம் பகுதியின் அட்டகாசமான புகைப்படங்கள்

Parth.2211

ஃபாகு

ஃபாகு

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஃபாகு எனப்படும் இந்த பிரசித்தமான மலை சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து 2509 மீ உயரத்தில் குஃப்ரி எனும் இடத்திற்கு அருகில் உள்ளது. ஷிம்லாவிலிருந்து 23 கி.மீ தூரத்திலும் குஃப்ரியிலிருந்து 6 கி.மீ தூரத்திலும் இந்த ‘ஃபாகு' சுற்றுலாத்தலம் அமைந்திருக்கிறது.

மலையேற்றப்பிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கூடாரவாசிகள் போன்றோர் மத்தியில் இந்த த்தலம் மிகப்பிரசித்தமாக உள்ளது. இரவு நேரத்தில் இங்குள்ள குடியிருப்புகளிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் இமயமலைகளில் பட்டு ஜொலிக்கும் காட்சியை தரிசிக்கும் அனுபவத்திற்காக இங்கு பயணிகள் ஒரு இரவு தங்கலாம்.

 கில்பரி

கில்பரி

கில்பரி எனும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ஓய்வாக விடுமுறையை கழிப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த இடம் வளமான ஓக், பைன் மரங்கள் மற்றும் ரோடோடென்ரோன் காடுகளால் சூழப்பட்டிருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 2194 மீ உயரத்தில் இந்த இடம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பயணிகள் இங்கிருந்து சுற்றிலும் எழும்பி நிற்கும் படர்ந்த சிகரங்களின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.

சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் விருப்பமுள்ள பயணிகள் ஒட்டக சவாரி, காற்று பலூன் சவாரி, பாராகிளைடிங் மற்றும் பாறையேற்றம் போன்ற துணிகர அனுபவங்களில் ஈடுபடலாம்.

இயற்கைப்பிரதேசங்களை சுற்றிப்பார்க்கும் விருப்பமுள்ளவர்கள் கரௌளி மற்றும் ரன்தம்பூர் தேசியப்பூங்கா போன்ற இடங்களுக்கு விஜயம் செய்து மகிழலாம். ஜெய்ப்பூர் நகரம் சுற்றுலாப்பயணிகளுக்கு அற்புதமான ஷாப்பிங்க அனுபவத்தை அளிக்கிறது.

Nazz81

 ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்


ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

wikimedia.org

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்


Ziaur Rahman

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

Hermann Luyken

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

wikimedia.org

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

ஜெய்ப்பூரின் அரிய புகைப்படங்கள்

wikimedia.org

Read more about: travel, temple