Search
  • Follow NativePlanet
Share
» »குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த கடற்கரைகளுக்கெள்ளாம் போய்ட்டு வாங்க

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த கடற்கரைகளுக்கெள்ளாம் போய்ட்டு வாங்க

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த கடற்கரைகளுக்கெள்ளாம் போய்ட்டு வாங்க

By Sabarish

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு குடும்பம் என்பது மிக முக்கியமான பகுதியாகும். மேலும், இது எல்லோருடைய வாழ்விலும் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. குடும்பங்கள் அல்லது உறவினர்கள் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை வெறுமனே கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. வாழ்க்கை என்னும் வாகனமானது எப்போதும் ஆதரவு மற்றும் பாசச் சக்கரங்களால் இயங்கி வருகிறது. குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் ஆரோக்கியமான நேரத்தை செலவிட முடிந்தால் மட்டுமே இந்த ஆதரவு மற்றும் பாசம் ஆகியவை முழுமையாகக் கிடைக்கும்.

அன்றாடம் பணிப்பளு, நாகரீகத்தின் நெருக்கடி உள்ளிட்டவற்றில் இருந்து விலகி அவ்வப்போது குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் வாழ்வில் இன்றையமையாதது. அவ்வாறான நேரத்தை மேலும் வலுப்படுத்த ஏற்றது சிறந்த சுற்றுலா. குடும்பத்தினருடன் கடற்கரைக்குச் சென்று உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தும். மேலும், கடற்களைப் பகுதிகள் குடும்பத்தினருடன் பிணைக்கப்பட்டு, நீங்கள் விரும்பும் அனைத்தையும் வழங்குகின்றன. எனவே, இந்த குடும்ப கடற்கரைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

 ஜுகு பீச், மகாராஷ்டிரா

ஜுகு பீச், மகாராஷ்டிரா

ஒரு கடற்கரையில் அமர்ந்து உணவைச் சுவைக்க விரும்பினால் ஜுகு கடற்கரை சிறந்த தேர்வாக இருக்கும். ஜுகு பீச் இந்தியாவில் உள்ள சில புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்று. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் முழுமையாக அனுபவிக்க ஏற்ற இடங்கள் இங்கே நிறைய உள்ளது. தெரு ஓரங்களில் உள்ள பொம்மை விற்பனை, சிற்றுண்டி ஸ்டால்கள் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுபவித்து வரலாம். இங்கே, மும்பையின் ஹாட் உணவுகள் அதிகமாக கிடைக்கும். நகரத்தின் வெப்பத்தில் இருந்து தப்பித்து, சுறுசுறுப்பான ஒரு காலநிலையில் ஓய்வெடுக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மாலை நேர கடற்கரை நடை பயணம் மனதை மயக்கும்..

Dr.Rohit Bhamoura

எப்படிச் செல்லலாம் ?

எப்படிச் செல்லலாம் ?

கேரள மாநிலம், காசர்கோடுவில் இருந்து நீங்கள் இரயில் பயணித்துர்கள் என்றால் ஜுகு தாராவிற்கு சென்று கால்டாக்கி அல்லது பேருந்துகள் மூலம் ஜுகு கடற்கரைக்கு சென்றடையலாம். கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனத்தில் செல்கிறீர்கள் என்றால் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் சென்று அங்கிருந்து புனே வழியாக இந்த கடற்கரையை அடையலாம்.

ஆலப்புழா கடற்கரை, கேரளா

ஆலப்புழா கடற்கரை, கேரளா

கடவுளின் சொந்த நாட்டான கேரளாவில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட ஏற்ற இடங்கள் நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் ஆலப்புழா கடற்கரை. கேரளாவின் மேலோட்டமான பின்புலங்களையும், இயற்கையையும் ஆராய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இங்கே உள்ளது. ஆலப்புழா கடற்கரை திருவிழா, மணல் கலை விழா போன்ற பல பெரிய திருவிழாக்களும் இங்கு நடைபெறுகின்றன. நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், உங்கள் குடும்பத்துடன் இந்த திருவிழாக்களின் பங்கேற்பது இல்லரவாழ்வினை மேம்படுத்தும்.

Pradeep717

கோவை- ஆலப்புழா

கோவை- ஆலப்புழா

கோவையில் இருந்து ஆலப்புழா செல்ல திட்டமிட்டால் திரிசூர் வழியாகக் கொச்சியை அடைந்து ஆலப்புழாவிற்கு செல்லலாம். 235 கிலோ மீட்டர் கொண்ட இந்த பயணத்தில் வடக்கஞ்சேரி, திரிசூர், சாலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நீங்கள் கண்டு ரசிக்க ஏற்ற இடங்களும் ஏராளாக உள்ளது.

புரோமனேட் பீச், புதுச்சேரி

புரோமனேட் பீச், புதுச்சேரி

விடியற்காலைப் பொழுது, வார இறுதி நாட்கள் என கால்நடையாக பயணம் மேற்கொள்ள விரும்பமுள்ளவரா நீங்க? அப்ப உங்களுக்காகவே உள்ளது புதுச்சேரியில் புரோமனேட் கடற்கரை. ஒரு பகுதி கட்டிடங்களால் சூழ மறுபகுதி கடல்நீராகக் காட்சியளிக்கும் புரோமனேட் கடற்கரை குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகும். புதுச்சேரியின் கிழக்குப்பகுதியில் உள்ள கடற்கரை பாறை கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அருகருகே உள்ள உணவகங்களும், ஐஸ் க்ரீம் கடைகளும் குழந்தைகளை மேலும் உற்றாசமடையச் செய்யும்.

இத்தகைய ஒரு அழகான கடற்கரை, தூரத்தில் பரவலாக இயற்கை காட்சி, இந்த அழகிய கடற்கரைக்கு ஏன் உங்கள் குடும்பத்தினருடன் செல்லக் கூடாது?

Karthik Easvur

கடற்கரை ஓரப் பயணம்

கடற்கரை ஓரப் பயணம்

சென்னையில் இருந்து புரோமனேட் சென்றடையும் வழி முழுவதுமே கடற்கரையாகத்தான் காட்சியளிக்கின்றன. சுமார் 150 கிலோ மீட்டர் கொண்ட இந்த பயணத்தில் கோவலம், மாமல்லபுரம், கல்பாக்கம், கடலூர் என மனதை மயக்கும் ஏரிகளும், நீரோடைகளும் காணப்படுகின்றன. குறிப்பாக, கடலூரில் பாலாறு கடலுடன் இணையும் காட்சி பரவசமூட்டும்.

Shahidul Hasan Roman

 ராதாநகர் கடற்கரை, அந்தமான் நிகோபார் தீவுகள்

ராதாநகர் கடற்கரை, அந்தமான் நிகோபார் தீவுகள்

ஆசியாவின் சிறந்த கடற்கரையாக அறிவிக்கப்பட்டுள்ள, ராதாநகர் கடற்கரை அந்தமான் நிகோபார் தீவுகளிலேயே மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்தமான் கடலில் இந்த அழகிய குடும்ப கடற்கரை இருப்பதால் சந்தேகத்திற்கு இடமின்றி அதன் பிரம்மாண்டமான மற்றும் அழகிய அற்புதத்தைப் பார்வையிடலாம். மேலும், இங்குள்ள வெள்ளை மணல் கடற்கரையில் உங்கள் குடும்பத்தாரோடு நீர் விளையாட்டிலும் ஈடுபட்டு மகிழலாம்.

Kotoviski

கடலைக் கடந்து காற்றில் செல்லுங்கள்

கடலைக் கடந்து காற்றில் செல்லுங்கள்

அந்தமான் நிகோபார் தீவில் அமைந்துள்ள ராதாநகர் கடற்கரைக்கு செல்ல விமான சேவை உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 2 மணி நேரம் கடலைக் கடந்து வீர் சவார்க்கர் பன்னாட்டு விமான நிலையம் சென்றடைந்தால் உங்களைச் சூழ்ந்து கடற்கரையே காட்சியளிக்கும். மேலும், இந்த விமானப் பயணம் உங்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் சிறப்பாகவும் அமையும்.

Harvinder Chandigarh

மெரினா கடற்கரை, தமிழ்நாடு

மெரினா கடற்கரை, தமிழ்நாடு

நீங்கள் மக்கள் மற்றும் விற்பனையாளர்கள் நிறைந்த கடற்கரைக்கு செல்லத் திட்டமிட்டால், மெரினா கடற்கரை உங்களது தேவையை பூர்த்தி செய்யும். உலகிலேயே மிக நீலமான கடற்கரைகளில் ஒன்றான இது தினசரியும் புதுப்புது பொழுதுபோக்கையும், ஆச்சரியத்தையும் அளிக்கும். இதனாலேயே அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். மேலும், இந்த மணல் கடற்கரைக்கு வருவதற்கு சிறந்த நேரம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் என்பதால் வார இறுதி நாட்களில் உங்களது பயணத்தை திட்டமிட்டு செல்லுங்கள்.

unknown

 வர்கலா கடற்கரை, கேரளா

வர்கலா கடற்கரை, கேரளா


கேரளாவில் அழகிய மற்றும் தூய்மையான கடற்கரைகளில் ஒன்று வர்கலா. இந்த கடற்கரையில் பாராசூட் குதிப்பு, படகில் பாராசூட் சவாரி போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களிலும் உங்களது குடும்பத்தினருடன் ஈடுபடலாம். கடற்கரைக்கு அருகிலேயே உல்லாச பொழுதுபோக்குக்கு ஏற்ற கபில் ஏரி எனும் நீர்த்தேக்கப்பகுதியும் அமைந்துள்ளது. இவைத்தவிர சிலக்கூர் பீச் எனும் மற்றொரு அழகிய கடற்கரையும் வர்கலா நகரத்துக்கு அருகில் உள்ளது. இது சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசிப்பதற்கேற்ற தலம்.

Achuudayasanan

போக்குவரத்து வசதிகள்

போக்குவரத்து வசதிகள்

திருவனந்தபுரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் வடக்கிலும், கொல்லம் நகரத்திலிருந்து 49 கிலோ மீட்டர் தென்மேற்கிலும் இந்த வர்க்கலா நகரம் அமைந்துள்ளது. கேரள மாநில அரசுப்பேருந்துகள் அனைத்து முக்கிய தென்னிந்திய நகரங்களில் இருந்தும் வர்கலாவுக்கு இயக்கப்படுகின்றன. வர்கலாவில் ரயில் நிலையமும் உள்ளது. அருகிலுள்ள திருவனந்தபுரத்தில் விமான நிலையமும் உள்ளது.

Thejas Panarkandy

மகாபலிபுரம் கடற்கரை, தமிழ்நாடு

மகாபலிபுரம் கடற்கரை, தமிழ்நாடு

கடற்கரை கோவில் இங்குள்ள மகாபலிபுரத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மகாபலிபுரம் கடற்கரை அதன் அருகாமையில் உள்ள ஷோர் கோவில் வளாகத்தின் இருப்பின் காரணமாக புனித கடற்கரை என்று கருதப்படுகிறது. வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுவதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். கடற்கரையில் சுரியக்குளியல் எடுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய முதல் தேர்வாக மகாபலிபுரம் கடற்கரை இருக்கட்டும்.

KARTY JazZ

 மகாபலிபுரத்திற்கு எப்படிச் செல்லலாம்?

மகாபலிபுரத்திற்கு எப்படிச் செல்லலாம்?

சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு விஜயம் செய்யலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.

SINHA

Read more about: travel beach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X