» »இந்த ராட்சத அணில்களுக்கு தமிழகத்தில் சரணாலயம் எங்கே தெரியுமா?

இந்த ராட்சத அணில்களுக்கு தமிழகத்தில் சரணாலயம் எங்கே தெரியுமா?

Written By: Udhaya

விலங்குகள் சரணாலயம், பறவைகள் பாதுகாப்பகம் போன்ற இடங்களுக்கு செல்வது என்றாலே நமக்குள் ஒரு புத்துணர்வு வந்து ஒட்டிக்கொள்ளும். சரணாலயத்தில் விலங்குகள், பறவைகள் என ஒருசேர காணமுடியும். அவைகளில் சில சரணாலயங்களில் அணில்களையும் காணமுடியும். அணில்களுக்கென்றே தனியாக ஒரு சரணாலயம் இருக்கு கேள்விபட்டிருக்கீங்களா?

அதுதான் நம்ம தமிழ்நாடு. வாங்க அந்த சரணாலயம் பற்றியும், எப்படி போகலாம், சுற்றுலா அம்சங்கள் என்ன என்பது பற்றியும் இங்க பாக்கலாம்.

அணில்களுக்கு சரணாலயம்

அணில்களுக்கு சரணாலயம்


இந்தியாவில் அழிந்துவரும் விலங்கு இனங்களில் அணிலும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் அணில்களுக்கென்று சரணாலயம் அமைக்க முடிவு செய்து தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

Cyrillic

எங்குள்ளது

எங்குள்ளது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புதூர் அருகே அமைந்துள்ளது இந்த அணில்கள் சரணாலயம். இங்கு நரை அணில்கள் எனப்படும் ராட்சத அணில்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Gauthaman

 எவ்வளவு பெரியது தெரியுமா?

எவ்வளவு பெரியது தெரியுமா?

இந்த சரணாலயம் 480கிமீ பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இதனை நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைப்பர். இது 1989ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டுவருகிறது.

Balu

 அமைவிடம்

அமைவிடம்

மதுரை, விருதுநகர் மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு இயங்கிவரும் இந்த சரணாலயத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் பெரியாறு புலிகள் காப்பகமும், வடமேற்கு திசையில் மேகமலை காடுகளும், கிழக்குப் பகுதியில் சிவகிரி காடுகளும் அமைந்துள்ளன.

Balasubramanian M

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

இந்த சரணாலயம் அமைந்துள்ள காடுகளில் நிறைய மலைக்குன்றுகளும், சிகரங்களும் அமைந்துள்ளன. மேலும் எண்ணற்ற ஆன்மீகத் தலங்களும் அருகாமையில் உள்ளன.

Balu

ஆறுகள்

ஆறுகள்


இந்த சரணாலயம் வழியாக அல்லது அருகாமையில் வைப்பாறு நதி மற்றும் குண்டாறு ஆகியவை ஓடுகின்றன. இதனால் காட்டுயிர் விலங்குகளுக்கு போதுமான அளவுக்கு நீர் இங்கிருந்து கிடைக்கிறது.

 அணைகள்

அணைகள்


இந்த பகுதியில் இரண்டு அணைகள் அமைந்துள்ளன. அவை பிலவாக்கல் மற்றும் கோய்லார் அணைகள் ஆகும்.

 தங்கும் வசதிகள்

தங்கும் வசதிகள்

இந்த இடத்துக்கு வரும் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அருகில் 10 கிமீ சுற்றளவுக்குள் நிறைய விடுதிகள் காணப்படுகின்றன. மேலும், விருந்தினர் மாளிகை ஒன்றும் இந்த சரணாலயத்துக்குள் காணப்படுகிறது. முதலியார் ஊத்து எனும் இடத்தில் இது அமைந்துள்ளது. இந்தியாவில் நீலகிரி தார் வகை மான்களை காண இது மிகவும் சிறந்த இடமாகும்.

 மற்ற விலங்குகள்

மற்ற விலங்குகள்

இது அணில்கள் சரணாலயம் என்றாலும், மற்ற விலங்குகளும் இல்லாமல் இல்லை. புலிகள், சிறுத்தைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை காணப்படுகின்றன.

டிரெக்கிங்

டிரெக்கிங்


இங்கு டிரெக்கிங் செல்ல ஆசைப்படுபவர்கள் முன்அனுமதி பெறவேண்டும். இங்கு சாலை வசதிகள் இல்லை என்பதாலும், வழிகள் எளிதாக இருப்பதில்லை என்பதாலும், சரணாலயத்தில் அனுமதி பெற்று வழிகாட்டியின் உதவியோடுதான் பயணிக்கமுடியும்.

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

மலையடிவாரத்தில் அநேகமாக உலர்ந்தும், வெப்பக்காற்றுடனும்தான் இருக்கும்,. மேலே போக போக குளிர்ச்சியான காற்றை உணரலாம். மழை நாட்கள் தவிர்த்த எல்லா நாட்களிலும் செல்லமுடியும்.

Balu

வகைகள் அல்லது பிரிவுகள்

வகைகள் அல்லது பிரிவுகள்


மேற்கு மலை பசுமைகாடுகள், மேற்கு மலை பகுதி பசுமை காடுகள், காய்ந்த காடுகள் மற்றும் வறண்ட காடுகள் என பகுதிகளாக பிரிக்கலாம்.

மூலிகைக் காடுகள்

மூலிகைக் காடுகள்

தண்ணிப்பாறை எனும் பகுதியில் மூலிகை பாதுகாப்பு காடுகள் உள்ளன. இங்கு அரிய வகை மூலிகைகள் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

செய்யவேண்டியவை

செய்யவேண்டியவை


டிரெக்கிங் செல்வதற்கும், நடைபயணம் மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக இது அறியப்படுகிறது.

காலை மாலை நேரங்களில் பறவைகளை காணுதல் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

நிறைய வகை பறவை இனங்களை காணும்போது புத்துணர்ச்சி வருகிறது.

அருகிலுள்ள குளங்களில் நீர் குடிக்க வரும் யானைகளையும் காணமுடியும்.

காட்டில் சவாரி செய்யலாம். இதன் கட்டணம் அவ்வப்போது மாறுபடும்.

Balu

 எல்லைகள்

எல்லைகள்


இந்த சரணாலயமானது சரியாக 9' 21'' டிகிரியிலிருந்து 9' 48'' டிகிரி வடக்கிலும், 77' 21'' - 77' 46'' டிகிரி கிழக்கிலும் அமைந்துள்ளது. இது பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், சிறிய அளவில் மதுரை மாவட்டத்திலும் உள்ளது.

முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியவை

முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியவை

எல்லா காலங்களிலும் இந்த சரணாலயம் இயங்கும்.

எல்லாநாட்களிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை இயங்கும்

 கட்டணங்கள் விபரம்

கட்டணங்கள் விபரம்


ஸ்டில் கேமரா - 25 ரூ
வீடியோ கேமரா - 150ரூ
பார்க்கிங் கட்டணம் - 15ரூ
நுழைவுக் கட்டணம் - சிறியவர் 10ரூ
பெரியவர் - 15ரூ

வழிகள்

வழிகள்

மதுரை பன்னாட்டு விமான நிலையம் 100கிமீ தொலைவில் அமைந்துள்ளது

ரயில் நிலையம் திருவில்லிப்புதூர் 5கிமீ தொலைவில் உள்ளது.

சாலை வசதிகள் குறைவு. விருதுநகரிலிருந்து , திருவில்லிபுதூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. அதற்குமேல் சுய வாகனத்திலோ, கட்டணவாகனத்திலோ பயணிக்கவேண்டும்.

 நரை அணில்களின் சிறப்புகள்

நரை அணில்களின் சிறப்புகள்

இவை 14 ஆண்டுகள் வாழும். இதன் நீளம் 2.5அடி. ஒரே தாவலில் 20 அடி தூரம் தாண்டும்.

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

திருவில்லிப்புதூரிலிருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். போகும் வழியில் திருமலைப்பேரி பேச்சியம்மன் கோயில், குறவன்கோட்டை முனியாண்டி கோயில், புளுகாண்டி கோயில், ராக்காட்சி அம்மன் கோயில் என நிறைய கோயில்கள் உள்ளன.