» »உத்தரகண்ட்டின் ஹர்சில் காட்டுக்குள்ள ஒரு ரவுண்ட் போலாமா?

உத்தரகண்ட்டின் ஹர்சில் காட்டுக்குள்ள ஒரு ரவுண்ட் போலாமா?

Written By: Udhaya

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமமான ஹர்சில், கடல் மட்டத்திலிருந்து 2620 மீ உயரத்தில் உள்ளது. உத்ர காசியிலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமம், பாகீரத நதியின் கரையில் அமையப்பெற்றுள்ளது. ஹர்சில் என்பது ஹரி', மற்றும் சிலா' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். இதில் ஹரி என்பது மஹா விஷ்ணுவையும் சிலா என்பது சிற்பத்தையும் குறிக்கும். இக்கிராமம், சார்தாம் புனித யாத்திரையின் நான்கு முக்கிய இடங்களில் ஒன்றான கங்கோத்ரிக்கு மிக அருகில் உள்ளது. இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அங்கெல்லாம் சென்று பார்க்கலாம் வாருங்கள்.

கங்கோத்ரி தேசிய பூங்கா

கங்கோத்ரி தேசிய பூங்கா

கங்கோத்ரி தேசிய பூங்கா மற்றும் முகாபா கிராமம் அகியன பயணிகளை பெரிதும் கவர்கின்றன. புகழ்பெற்ற கங்கோத்ரி தேசிய பூங்கா, ஹர்சிலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. ஹர்சிலில் 1973 ல் நிறுவப்பட்ட பாதுகாப்பு வேளாண் ஆராய்ச்சி ஆய்வகம்(DARL) பயணிகளை பெரிதும் கவர்கிறது. ஹர்சில் ஒரு கிராமமாதலால், இங்கு விமானம் மற்றும், ரயில் நிலையம் ஏதும் இல்லை. டேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஹர்சிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். ரிஷிகேஷில் உள்ள ரயில் நிலையம் ஹர்சிலுக்கு மிக அருகில் உள்ளது. ஹர்சிலுக்கு சுற்றுலா செல்ல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாதங்களும் உகந்ததாக கருதப்படுகின்றன.
DipankarSen68

தாரேளி

தாரேளி


தாரேளி, ஹர்சிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம், புனிதமான கங்கைக்கரையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி பசுமை நிறைந்த பைன் மரங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள் இங்கு ஏராளமான ஆப்பிள் தோட்டங்கள் மற்றும் சிவப்பு காராமணி தோட்டங்களை பார்க்க முடியும். இங்கிருந்து பனி மூடிய சிகரங்களின் மெய்மறக்கச்செய்யும் இயற்கை காட்சிகளை காணலாம். இந்த கிராமத்தில் மிகவும் பழமையான ஒரு சிவாலயம் உள்ளது. இதன் கட்டமைப்பு, புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயத்தின் கட்டமைப்பை ஒத்துள்ளது. முக்கிதிநாத் ஆலயம், கங்கோத்ரி, தபோவன், வாசுகி டால், கங்காநி, மற்றும் சிர்பாசா ஆகியன இதன் அருகில் உள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்களாகும்.

Harisharma.atc

விலங்குகள்

விலங்குகள்

கங்கோத்ரி தேசிய பூங்கா, பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இது இக்கிராமத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் 1553 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இப்பூங்கா, 15 வகையான விலங்குகள், மற்றும் 150 வகையான பறவைகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் இங்கு, பனிச்சிறுத்தைகள், பழுப்புநிற கரடிகள், கஸ்தூரி மான்கள், இமாலய குக்குருவன்கள், வரையாடுகள், புலிகள், மலையாடுகள், வான் கோழிகள், காடைகள், கெளதாரிகள், நீல நிற செம்மறி ஆடுகள், புறாக்கள், மற்றும் கிளிகள் ஆகியவற்றை பார்க்க முடியும்.

Lokeshwar23

 முகாவாஷ்

முகாவாஷ்

முகாவாஷ் என அழைக்கப்படும் `முகாபா' கிராமம், இந்து சமயத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். குளிர்காலத்தில் கங்கோத்ரியில் உள்ள கங்கா தேவியின் சிலை, அதன் ஆலயத்தில் இருந்து இக்கிராமத்திற்கு இடம்பெயர்த்தப்படுகிறது. குளிர் காலத்தில் கங்கோத்ரியை அணுகுவது மிகவும் கடினமாவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Gauravkaintura1234

Read more about: travel, forest