Search
  • Follow NativePlanet
Share
» »கொட்டித்தீர்த்த மழையிலும் கொடைக்கானலில் குவியும் மக்கள்! ஏன் தெரியுமா?

கொட்டித்தீர்த்த மழையிலும் கொடைக்கானலில் குவியும் மக்கள்! ஏன் தெரியுமா?

அடித்து பெய்த மழை.. கொடைக்கானலில் குவியும் மக்கள்!

இதுதான் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல சரியான நேரம். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பெய்த கன மழையால் அந்த நகரிலுள்ள நட்சத்திர ஏரி 30 வருடங்களுக்கு பிறகு நிரம்பியுள்ளது. கொடைக்கானலில் 10.7 செ.மீ என்ற அளவுக்கு பெய்த கன மழையால் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பியது.

 செயற்கை ஏரி

செயற்கை ஏரி


செயற்கை ஏரியான கொடைக்கானல் ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 1863-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த ஏரி மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

படகு சவாரி

படகு சவாரி

பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ஏரி. ஏரியை ஒட்டியே சில படகு துறைகளும் காணப்படுகின்றன. அவை படகு சவாரி செய்ய துடுப்பு படகுகள் மற்றும் மிதிக்கட்டை படுகுகளும் வாடகைக்கு விடுகின்றன.

Me - Self-photographed

குதிரை சவாரி

குதிரை சவாரி


இது போக குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் செய்ய குதிரை மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு கிடைக்கும். ஏரியின் கரையை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு நடை பாதை அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு நடை பயணமும் மேற்கொள்ளலாம். இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஊருக்குள் ஓய்வெடுக்க இந்த ஏரி ஒரு சிறந்த இடம்.

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம்.


M.arunprasad

 கண்டிப்பாக பார்க்கவேண்டிய தலங்கள்

கண்டிப்பாக பார்க்கவேண்டிய தலங்கள்

கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள பல கிறிஸ்துவ ஆலயங்களை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.Rohithriaz

 சாக்லேட் விரும்பிகளே

சாக்லேட் விரும்பிகளே

ப்ளம்ஸ் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களுக்கும் கொடைக்கானல் புகழ் பெற்றது. சாக்லேட் விரும்பிகளின் சொர்க்கம் கொடைக்கானல். இங்கே வீட்டில் தயார் செய்யும் சாக்லேட்கள் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. யூக்கலிப்டஸ் மூலிகை தைலம் இங்கே அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.

Nikhil1508

 அரிய வகை மலர்

அரிய வகை மலர்

அறிய வகை பூவான 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை இங்கே காணலாம். மேலும் இங்கே நடை பயணம், படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் போன்ற பலதரப்பட்ட தீரச்செயல் மிக்க விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம்.

Suresh Krishna

 கொடைக்கானல் வரலாற்றின் ஒரு முன்னோட்டம்!

கொடைக்கானல் வரலாற்றின் ஒரு முன்னோட்டம்!

கொடைக்கானல் மலையில் முதலில் குடியேறியவர்கள் பலையர் பழங்குடி மக்கள். இந்த இடம் கிறிஸ்துவ காலத்து இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், லெப்டினென்டு பி.எஸ்.வார்ட் கட்டுப்பாட்டில், இங்கு முதன் முதலில் அடியெடுத்து வைத்தது 1821-ஆம் வருடம்.

wiki

 நகரம் உருவானது

நகரம் உருவானது

1845 ஆம் வருடம் அவர்களால் இந்நகரம் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் பல இந்திய பிரஜைகள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

Challiyan

கொடைக்கானலை அடைவது எப்படி?

கொடைக்கானலை அடைவது எப்படி?

கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம். மதுரை விமான நிலையம் கோயம்புத்தூர் மற்றும் சென்னை விமான நிலையங்களுடன் சேவையில் உள்ளது.

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

கொடைரோடு ரயில் நிலையம் தான் கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம். கோயம்புத்தூர் சந்திப்பு கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து பெங்களூரு, மும்பை, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன.

 பேருந்து

பேருந்து

கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 கொடைக்கானலின் வானிலை

கொடைக்கானலின் வானிலை

வருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும். கொடைக்கானல் செல்ல சிறந்த காலம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையும், பின் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம்.

Paulosraja

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி:

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி:

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள் இங்கே தண்ணீர் பருக வந்து செல்லுமாம். மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம் இது.

Nijumania

 எழில் மிகு அருவி

எழில் மிகு அருவி


இந்த அருவியை வந்தடைய கூறிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இயற்கை விரும்பிகள் செல்ல ஏற்ற இடம் இதுவாகும். பருவக்காலத்தின் போது எழில்மிகுந்து காணப்படும் இந்த அருவிக்கு அந்நேரம் செல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.


wiki

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X