» »"மெர்சல்" படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இடங்கள் பற்றிய மெர்சலாக்கும் உண்மைகள்

"மெர்சல்" படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இடங்கள் பற்றிய மெர்சலாக்கும் உண்மைகள்

Posted By: Udhaya

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் மெர்சல் படத்தின் டீசர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கிறது. 9 மில்லியன் பார்வைகளையும் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது நாம் அறிந்ததே.

அதே நேரத்தில் இந்த படத்தில் வரும் சில இடங்கள் வெளிநாடாகத்தான் இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, அது இந்தியாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பது தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு கச்சிதமாக கையாளப்பட்ட இந்த இடங்கள் குறித்து இந்த பகுதியில் காண்போம்.

 ஜெய்சல்மர்

ஜெய்சல்மர்


தமிழரின் பாரம்பரிய கலை வழியாக விஜய் சண்டையிடுவது போன்ற ஒரு காட்சி டீசரில் உள்ளது. அது எடுக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் ஆகும்.

தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும் அதே சமயம் ராஜரீக அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.

Adrian Sulc

 பாலைவனம்

பாலைவனம்

உலகப்புகழ் பெற்ற இந்த சுற்றுலாத்தலம் புவியியல் ரீதியாக பிரசித்தி பெற்ற தார் பாலைவனத்தின் மையத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். ஒரு புறம் பாகிஸ்தானுடனும் மற்ற திசைகளில் பிக்கானேர், பார்மேர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களுடனும் தன் எல்லையை ஜெய்சல்மேர் மாவட்டம் பகிர்ந்து கொள்கிறது.

Archan dave


கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ராஜஸ்தான் மாநில தலைநகரமான ஜெய்ப்பூரிலிருந்து 575 கி.மீ தொலைவில் இந்த தங்க நகரம் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் மாவட்டத்தின் பிரதான பொருளாதார அடிப்படையாக சுற்றுலாத்தொழில் இயங்குகிறது. 12ம் நூற்றாண்டில் இந்நகரை உருவாக்கிய ‘ராவ் ஜெய்சல்' என்ற மன்னரின் நினைவாக இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

Nagarjun Kandukuru

 சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி


தலைநகர் தில்லியிலிருந்து 790 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நகரம். ராஜஸ்தான் மாநிலதலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 559 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கச்சமன் நகரம், பலோடி, பொக்ரான் வழியாக 9 மணி நேரத்தில் இந்த நகரத்தை அடையலாம்.

காஞ்சி பட்டு, பனாரஸ் பட்டு தெரியும்! .. அப்ப இதெல்லாம்?

 சிறப்புகள்

சிறப்புகள்


இந்த தங்க நகரம் ராஜஸ்தானிய நாட்டார்கலை இசை வடிவத்துக்கும், நடன வடிவங்களுக்கும் சர்வதேச அளவில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பாலைவனத் திருவிழாக் காலத்தின் போது சாம் மணற்குன்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தினரால் ‘கல்பெலியா' எனப்படும் சிருங்கார நடனம் நிகழ்த்தப்படுகிறது. இந்த பாலைவனத் திருவிழா பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கல்வியில் ஏற்றம் பெற நீங்கள் செல்லவேண்டிய கோயில்!!

 விளையாட்டுகள்

விளையாட்டுகள்

அச்சமயம் ஒட்டகப் பந்தயங்கள், தலைப்பாகை அலங்கார நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்களின் ‘மீசை' குறித்த போட்டிகள் என்று பலவிதமான அம்சங்கள் பல திசைகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன. அவைதவிர, கூடார வாசம், இரவில் சொக்கப்பனை வெளிச்ச கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் ஒட்டகச்சவாரி போன்றவையும் ஜெய்சல்மேருக்கு வருகை தரும் பயணிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை அளிக்கின்றன.

Nibedit

 உணவு வகைகள்

உணவு வகைகள்


இந்த தங்க நகரத்தில் விடுமுறையை உல்லாசமாக கழிக்க வரும் பயணிகள் ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்து மகிழலாம். முர்க்-இ-சப்ஸ் எனப்படும் எச்சில் ஊற வைக்கும் உணவு வகை இங்கு பயணிகளால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாகும். இது எலும்புகளற்ற கோழி இறைச்சியை காய்கறித்துண்டங்களுடன் வதக்கி தயார் செய்யப்படும் ஒரு விசேஷ உணவாகும்.

பாலைவன மொச்சை மற்றும் வால்மிளகு இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் ‘கேர் ஷாங்க்ரி' எனும் பதார்த்தமும் ஜய்சல்மேரில் விசேஷமாக கிடைக்கிறது. உருளைக்கிழங்கை புதினா துவையலுடன் சேர்த்து குழம்பில் காய்ச்சி தயாரிக்கப்படும் ‘பனான் ஆலு' எனப்படும் உணவு வகையையும், மாவு உருண்டைகளை பாலாடையில் போட்டு சமைத்த ‘காடி பகோரா' வையும் ஆர்வமுள்ள பயணிகள் ருசித்துப் பார்க்கலாம். மேற்குறிப்பிட எல்லா உணவு வகைகளுமே ஜெய்சல்மேரில் உள்ள உணவகங்களில் கிடைக்கின்றன.

Ana Raquel

 கோட்டைகள்

கோட்டைகள்


ராஜஸ்தானில் உள்ள எல்லா பாலைவன நகரங்களையும் போலவே ஜெய்சல்மேர் நகரமும் இங்குள்ள ராஜகம்பீர கோட்டைகள், கோட்டை மாளிகைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கோயில்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது.

ஜெய்சல்மேரின் பெருமைக்குரிய சின்னமாக கருதப்படும் ஜெய்சல்மேர் கோட்டை இந்த தங்க நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். சூரியன் மறையும் அந்தி நேரத்தில் இந்த மஞ்சள் நிற மணற்பாறைகளால் ஆன கோட்டை தங்க நிறத்தில் ஜொலிக்கின்றது. அதனாலேயே இது தங்க கோட்டை அல்லது சோனார் குய்லா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோட்டைக்கு அக்காய் போல், ஹவா போல், சூரஜ் போல் மற்றும் கணேஷ் போல் என்ற வாசல்கள் உள்ளன. ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலையை இணைத்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த கோட்டையில் பல அரசகுடும்ப அரண்மனைகளையும், ஏழு ஜெயின் கோயில்களையும் மற்றும் எண்ணற்ற கிணறுகளையும் காணலாம். ஏழு ஜெயின் கோயில்களில் ஷாந்திநாத் கோயில், சந்திரபிரபு கோயில் மற்றும் ஷீதல்நாத் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Schwiki

 சுற்றுலா

சுற்றுலா

மஹாராஜா அரண்மனை அல்லது ஜெய்சல்மேர் கோட்டை அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் பண்பாட்டு மையம் போன்றவை ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இந்த அரண்மனை உச்சியிலிருந்து ஜெய்சல்மேர் நகரக்காட்சிகளை பயணிகள் கண்டு ரசிக்க முடியும். வெள்ளி அரியாசனம், அரச கட்டில், பாத்திரங்கள், முத்திரைகள், பணம் மற்றும் ராஜ குடும்பத்தினரின் சிலைகள் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த அரண்மனையில் பயணிகள் பார்ப்பதற்கென்று உள்ளன.

Schwiki

 ஜெய்சல்மேருக்கு எப்படி செல்லலாம்?

ஜெய்சல்மேருக்கு எப்படி செல்லலாம்?

விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும் விதத்தில் ஜெய்சல்மேர் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு அருகாமையில் உள்ள விமானத்தளமாக ஜோத்பூர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இது புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் பல விமான சேவைகளை கொண்டுள்ளது.

ஜெய்சல்மேர் ரயில் நிலையத்தை ஜோத்பூர் மற்றும் முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கும் ரயில் சேவைகள் தினசரி உள்ளன. இவை தவிர டெல்லி, ஜெய்ப்பூர், அஜ்மேர், பிக்கானேர் போன்ற நகரங்களிலிருந்து சொகுசு பேருந்து வசதிகள் ஜெய்சல்மேர் நகருக்கு இயக்கப்படுகின்றன.

 கோனசீமா

கோனசீமா


ஆந்திர பிரதேசத்தின் கோதாவரி படுகை அருகே அமைந்துள்ளது கோனசீமா எனும் சமவெளிப்பகுதி.

இது கோதாவரி ஆற்றின் வடிகாலாகவும் , ஒரு பக்கம் வங்காள விரிகுடாவின் கடற்கரையாகவும் அமைந்துள்ளது.

http://www.aptourism.gov.in

 ராஜமுந்திரி

ராஜமுந்திரி


ராஜமுந்திரி பகுதியைத் தாண்டியதும் கோதாவரி ஆறு, கௌதமி கோதாவரி, வசிஷ்ட கோதாவரி என இரண்டாக பிரிகிறது.

இதில் கௌதமி இரண்டாகவும், வசிஷ்ட கோதாவரி நான்காகவும் மேலும் பிரிந்து அந்தந்த பகுதிகளை செழிப்பாக்குகிறது.

இது உருவாக்கும் சமவெளிப்பகுதி மிகவும் பசுமையாகவும் , இயற்கை செழிப்பாகவும் உள்ளது.

http://www.aptourism.gov.in

 விவசாயம்

விவசாயம்

இந்த பகுதியின் முக்கிய இடங்களாக அமலாபுரம், ராவுலபேலம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. கோனசீமா பகுதியில் அதிகளவில் தென்னை பயிரிடப்படுகிறது. விவசாயமும் நடைபெற்று வருகிறது.


http://www.aptourism.gov.in

 சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

கோனசீமா நிச்சயமாக நாம் அனைவரும் எதிர்பார்க்கும் பச்சை பசேலென்ற இளமை ததும்பும் சுற்றுலா பிரதேசமாகும்.

அதிலும் இது பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகளால் அறியப்படாத, ஆப் பீட் எனப்படும் வகையிலான சுற்றுலா தளம்.

http://www.aptourism.gov.in

 கனவு பிரதேசம்

கனவு பிரதேசம்

நிச்சயமாக இது உங்கள் கனவு சுற்றுலா பிரதேசமாக அமையும். சுற்றிலும் பச்சை நிறங்களில் காணப்படும் மரம் செடி கொடிகள். தென்னை மரங்கள், விவசாய நிலங்கள் உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். .

http://www.aptourism.gov.in

 பயண சுற்றுலா

பயண சுற்றுலா


பயணத்தின் போதே கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள் நீங்கள் பேருந்து, ரயில், சொந்த வாகனம் என எதில் சென்றாலும் அற்புதமாக இருக்கும்.

கோனாசீமாவைச் சுற்றி பப்பிகுன்றுகள், கொல்லேறு ஏரி, பப்பிகொண்டா காடுகள், மாங்குரோவ் காடுகள் என பல உள்ளன.

 படகு வீடுகள்

படகு வீடுகள்

கேரளாவில் உள்ளதைப் போல இங்கும் படகு வீடுகள் இருக்கின்றன. நீங்கள் செல்வதாக இருந்தால் முன்பதிவு செய்யவேண்டும்.

4 பெரியவர்கள் 4 சிறியவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருக்கும் 2 படுக்கை அறை வசதிகள் உள்ளன.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

அருகிலுள்ள விமான நிலையம் ராஜமுந்திரி ஆகும். அமலாபுரம், காக்கிநாடா முதலிய இடங்களிலிருந்து ரயில் வசதிகளும் உள்ளன.

Read more about: travel rajasthan andhra pradesh

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்