Search
  • Follow NativePlanet
Share
» »குஜராத்தே தமிழர்களின் தேசம்தான்! இந்தியாவே மிரண்டு நிற்கும் ஆய்வு முடிவுகள்!

குஜராத்தே தமிழர்களின் தேசம்தான்! இந்தியாவே மிரண்டு நிற்கும் ஆய்வு முடிவுகள்!

By Udhaya

இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதும், சுதந்திர போராட்டங்கள்தான் இந்தியா எனும் பல்வேறு தேசங்கள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்கியது என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்த சங்கதிதான்.

தற்போது தனி நாடாக குடியரசாக திகழும் இந்தியா ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டு கிடந்தது. அதற்கு முன் முகலாயர்கள். இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாரோ ஒரு மன்னர் படையெடுத்து வந்து ஆக்கிரமித்து இங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த இன மக்களை அடிமைப் படுத்தி ஆண்டனர் என்பதே உண்மை.

ஆனால், தமிழகம்? மூவேந்தர்கள் எனும் சேர சோழ பாண்டியர்கள் மற்றும் இதர மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது என்று படித்திருக்கிறோம். குமரி முதல் திருவேங்கடம் வரை பரவியிருந்த தமிழ் இனம் என்றும் கூறுவதுண்டு. ஆனால் அது உண்மையில் குமரி முதல் வடவேங்கடம் என்பதுதான். அப்படி பார்த்தால், இந்தியா முழுமைக்கும் தமிழர்கள் எனும் மூத்தகுடி மக்கள்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஏன்.. உலகில் முதலில் மனிதன் தோன்றியதாக கருதப்படும் ஆப்பிரிக்காவிலும் தமிழர்கள்தான் பழங்குடிகளாக உள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யமான உண்மை.

இந்நிலையில்தான், குஜராத் அருங்காட்சியகத்தில் தமிழர்களின் நூறு கோடி மதிப்பிலான சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து கடத்தி செல்லப்பட்டவை என்பதும், இவை எப்படி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. ஏற்கனவே, தமிழ் கலாச்சாரத்தை வட இந்தியர்கள் சிதைத்து வருகின்றனர், பொய் புரளி செய்து நம் கலாச்சாரத்தை மறைக்கின்றனர் என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இப்படி நடந்திருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது.

நாம் மறந்ததை மீட்டெடுக்க, நம்மைப் பற்றிய அறிவியல் உண்மைகளை தெரிந்து கொள்ள, வரலாற்றைப் புரட்டிப்போட நாம் இப்போது குஜராத் நோக்கி புறப்படுகிறோம்.

குஜராத்

குஜராத்

நம் நாட்டின் பிரதமர் மோடியின், சொந்த ஊரான குஜராத், தற்போது இருப்பதை விட, பல ஆண்டுகள் முன்பு வரை நவ நாகரிகத்துடன் காணப்பட்டது என்று வரலாற்று ஆய்வு கூறுகிறது. சிந்துசமவெளியின் எச்சங்கள் அங்கு கிடைத்துள்ளன. அவர்களின் பண்பாடு, நாகரிகம் எல்லாம், அப்படியே தமிழர்களின் பண்பாட்டை ஒத்துள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படி குஜராத்தை நோக்கிய நம் பயணத்தில் முதலில் நாம் காணவிருப்பது ஒரு கோட்டை. அதற்கு பெயர் லக்பத். ஆம் லக்பத் கோட்டை ஒருகாலத்தில் இந்தியாவின் நுழைவுவாயில்.

நாகர்கள் வாழ்ந்த பகுதிகள்

நாகர்கள் வாழ்ந்த பகுதிகள்

நாகர்கள் என்பவர்கள், ஆதிமுதல் தமிழர்கள் என்று பழங்கால நூல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல மேடைகளில் பேசிவருகிறார். அவர் கூறிய படி பார்க்கும்போது இந்தியா முழுவதும் முற்காலத்தில் தமிழர்களே ஆண்டதாகவும், வாழ்ந்ததாகவும் தெரிய வருகிறது. அதற்கான ஆதாரம்தான் தற்போது கிடைத்துள்ளது.

Rama's Arrow

அடையாளத்தைத் தேடி பயணம்

அடையாளத்தைத் தேடி பயணம்

யாரைக்கேட்டாலும், அடையாளம் என்பதைதான் ஒருவரது முக்கியமான செயல்களில் ஒன்றாக மேற்கோள் காட்டுவார்கள். நம் அடையாளத்தை எப்படி நிறுவிவிட்டு போகிறோம் என்பதில்தான் நாம் காலம் கடந்தும் பேசப்படுவதும், கொண்டாடப்படுவதும் இருக்கிறது.

இப்படித்தான் ராஜராஜ சோழனின் புகழும், பாண்டிய மன்னர்களின் புகழும் நாம் இன்றுவரை பேசும்படியாக இருக்கிறது.

Rama's Arrow

திராவிடப் பழங்குடிகள் வாழும் இடங்கள்

திராவிடப் பழங்குடிகள் வாழும் இடங்கள்

இந்த விவாதத்தில் தமிழ்ப் பழங்குடிகள் வாழும் இடங்கள் என்று எடுத்துக்கொண்டால், அது தமிழ்நாடு மட்டும்தான் நம்மில் பலருக்குத் தெரியும். சிலரோ, மும்பை, டெல்லி உள்ளிட்ட மிக பிரபலமான இடங்களின் சேரி பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள் என்றும் கூறலாம். வரலாற்று அறிஞர்களின் முடிவுகளின்படி, இந்தியாவில் குஜராத் மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா எனும் பரவலான பகுதிகளில் ஆங்காங்கே இன்றும் பல பழங்குடியினர்களை காணமுடிகிறது.

இந்த இடங்களில் மேலும் ஆய்வு செய்தால், தமிழ் கல்வெட்டுக்கள் பல கிடைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் நம்மை ஆளும் மத்திய அரசு விட்டுவிடுமா என்ன?

 வரலாற்று சுற்றுலா

வரலாற்று சுற்றுலா

தமிழகத்தின் பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகள் என்பவை தமிழர்களின் வாழ்வியலைப் பறைசாற்றுபவைதானே. மகாபலிபுரம், தஞ்சாவூர் தொடங்கி மதுரை, குமரியானலும் அனைத்தும் தமிழர்களின் வாழ்வியல், அறிவியல், மருத்துவம் குறித்த அத்தனை செய்திகளை நமக்கு தருகின்றனவே.

உலகின் மற்ற எந்த இடத்தைக் காட்டிலும், பழமையான பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் தமிழகத்துக்குத்தான் என்பது தெரியுமா?

குமரி, மதுரை, தஞ்சை எல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஊர் என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லையல்லவோ?

சிந்து நதி தடங்கள்

சிந்து நதி தடங்கள்

உலகின் முதல் சிறந்த கலாச்சாரம் என்று உலக வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் சிந்து சமவெளி பண்பாடு அப்படியே தமிழர்களின் பண்பாட்டை ஒத்துள்ளன. சிந்து சமவெளிக்கரைகளின் ஆய்வில் கிடைக்கப்பெற்ற கருவிகள், பழங்கால பொருள்கள் என அத்தனையும் கிட்டத்தட்ட மதுரை அருகே கீழடியில் கிடைக்கப்பெற்றவை போலுள்ளது. இதனால்தான் என்னவோ கீழடியை கிடப்பில் போடுகிறது அரசு.

மோடியின் சொந்த மண்

மோடியின் சொந்த மண்

இந்தியாவை ஆளும் அரசின் பிரதமரது சொந்த மண்ணே. தமிழர்களின் தேசம் எனும் அதிர்ச்சிகர முடிவுகள் வெளியாகியுள்ளன. பொதுவாகவே இதுபோன்ற ஆய்வுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிடும் என்று சமூக தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர். அப்படி இந்தியாவே மிரளும் அளவிற்கு உண்மை வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

Goran tek-en

கட்ச் பகுதி

கட்ச் பகுதி

குஜராத்தில் அமைந்துள்ள கட்ச் பகுதி உலக சிறப்பு மிக்க பகுதியாகும். அப்படி அங்கு என்ன உலக சிறப்பு என்றால், அது ஒரு பாலை வனத்தை ஒத்த தோற்றம் கொண்டது. பல காட்டு உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. வெள்ளை நிற மணல்கள் காணப்படும் என நிறைய இருக்கிறது இந்த இடத்தைப் பற்றி கூறுவதற்கு. ஆனால் மிக முக்கியமானது இதுதான். பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த மனிதர்கள் சிறந்த பாரம்பரியத்துடன் பண்பாட்டுடனும் வாழ்ந்துள்ளனர் என்பதுதான். இந்த பண்பாடு திராவிடர்களின் அதாவது தமிழர்களின் வாழ்வியலை ஒத்துக் காணப்படுகிறது என்கிறது ஆய்வு.

Nagarjun Kandukuru

லக்பத் கோட்டை

லக்பத் கோட்டை

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கட்ச் பகுதியில் உயர்ந்து அமர்ந்திருக்கிறது லக்பத் கோட்டை. இந்த கோட்டை தான் ஒரு காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக திகழ்ந்தது. இங்கு ஓடிய சிந்து நதியின் தடங்கள் இப்போதும்கூட கண்கூட காணமுடிகிறது.

Nizil Shah

 நாகர்களின் தேசம் குஜராத்

நாகர்களின் தேசம் குஜராத்

1819ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இங்கு பாய்ந்தோடிய சிந்து நதி இடம் மாறி கடலில் வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுவும் வரலாற்று ஆய்வுகளின் முடிவுதான். இந்த லக்பத் கோட்டையின் முன்புறம் தொல்லியல்துறை இந்த அறிவிப்பை வைத்துள்ளது. இப்போது இந்த இடம் மணற்பாங்கான இடமாக காணப்படுகிறது. இது நாகர்களின் தேசம் என்பதும், ஆதித் தமிழர்களுக்கும், குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதும் இப்போது தெரியவந்துள்ளது. எப்படி தெரியுமா?

Mikenorton

பூஜ்

பூஜ்

கட்ச் பகுதியில் மிகவும் பிரபலமான இடம் பூஜ் என்பதாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் வரும். பூஜ் என்றால் நாகம் என்று பெயர். இது உள்ளூர் மலை ஒன்றை குறிக்கிறது. இந்த பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் பலர் தங்களை நாகர் இன மக்கள் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தாலும், இந்த இடம் நாகர்கள் வாழ்ந்த இடம் என்பது நிரூபிக்கப்படுகிறது.

இங்கு எழுதப்பட்டுள்ள வரலாறுகளும் அப்படியே சொல்கிறது.

Aalokmjoshi

 தோலவீரா

தோலவீரா

இந்த இடம் பூஜ் நகரிலிருந்து 210 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சிந்துசமவெளி நாகரிகத்துக்கான எடுத்துக்காட்டு நகரம். இங்கு நடந்த தொல்லியல் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

ஹரப்பன் நாகரீகத்தில் எஞ்சியவைகளை கொடுள்ளதால் தோலாவிரா மிகவும் புகழ் பெற்று விளங்குவதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கருதப்படுகிறது . சிந்துநதிக்கரை நாகரீகத்தின் முக்கியமான தொல்பொருள் இடமாக விளங்கும் தோலாவிரா, ரான் ஆப் கட்சில் உள்ள கதீர் பெட்டில் உள்ளது. இந்த இடத்தை டிம்பா ப்ரச்சின் மகாநகர் கோட்டடா என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். இங்கு தோண்டி கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பன் நகரம் தான் தோலாவிராவின் முக்கிய ஈர்ப்பாகும்.

முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட இந்நகரம், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது - அவை கோட்டை, மத்திய நகரம் மற்றும் கீழ் நகரம். நகரத்தின் மையப்பகுதி கோட்டையால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் மற்றவைகளை போல செங்கல்களால் கட்டப்படாமல் முழுவதுமாக கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மற்றொரு முக்கிய அம்சமாக விளங்குவது பல நீர்த் தேக்கத்தின் உதவியுடன் செயல்பட்டு வந்த நீர் பாதுகாப்பு அமைப்பு. அணிகலன்கள், பாத்திரங்கள், தங்கங்கள், வெள்ளிகள், கடினமட்பாண்ட (டெர்ரகோட்டா) பாத்திரங்கள் மற்றும் மெசோபோட்டமியனை சேர்ந்த சில பொருட்கள் போன்ற கலை பொருட்கள் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை யனைத்தும் ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் பண்பாட்டுடன் ஒத்துப்போவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கம்போல அரசு இதை வெளிக்கொணர மறுத்து மௌனத்தையே பதிலாக தருகிறது.

ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட்

ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட்

ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் பழங்குடியினத்தவர்கள் பலர் தமிழர்களின் சாயலில் இருக்கிறார்கள். பொதுவாக இவர்களை திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள். இங்கு வாழும் மக்களின் மொழி வேறு மாதிரியாக இருந்தாலும், அது தமிழின் ஆதியை ஒத்து இருக்கிறது. எப்படி தெலுங்கு, மலையாளம் தமிழுடன் பொருந்துகிறதோ அப்படி. ஆனால் ஆரிய வருகை, மொழி திரிதல் என வடமொழி கலந்த மொழியைத் தான் பேசி வருகின்றனர். இது என்ன பிரமாதம் தமிழகத்திலேயே நல்ல தமிழை கேட்கமுடியவில்லை என்கிறீர்களா.

LRBurdak

ஒடிசாவின் கிராமங்கள்

ஒடிசாவின் கிராமங்கள்

ஒடிசாவில் இருக்கும் பல கிராமங்கள் தங்கள் பெயரில் ஊர், பட்டி, கிரி முதலிய பெயர்களைக் கொண்டுள்ளன. ஊர் என்பது தமிழ் மொழியிலிருந்து சென்றது. பாறை, காணல் என்றும் சில ஊர்கள் தங்கள் பெயரைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் தமிழர்களுடன் தொடர்புடையதாகவே கருதப்படுகின்றன.

Devopam

லாக்பட் கோட்டை நகரம்

லாக்பட் கோட்டை நகரம்

லாக்பட் என்பது ஒரு சிறிய நகரமாகும். கட்ச்சினுடைய துணை மாவட்டமாகவும் இந்த லாக்பட் இருக்கிறது. லாக்பட் என்றால் மில்லியனர்களின் மாநகர் என்று பொருள்படும். இந்த நகர் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லாக்பச் கோட்டையினுடைய நான்கு சுவர்களுக்குள் அமைந்திருக்கிறது. குஜராத்தையும் சிந்தையும் இணைக்கும் ஒரு முக்கிய வியாபாரத் தலமாக லாக்பட் விளங்குகிறது. 1819-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த நகர் பேரழிவைக் கண்டது. தற்போதும் இந்த நகரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து வருகின்றனர். லாக்பட் கேட்டையின் மிகப் பெரிய 7 கிமீ தூரமுள்ள கோட்டைகள் 1801ல் ஜமதார் ஃபேட் முகமது என்பவரால் கட்டப்பட்டதாகும். இரவு நேர வானத்தை இங்கு பார்ப்பது சுகமாக இருக்கும். மேலும் இங்கு நடைபெறும் சூரியோதம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

Aalokmjoshi

நாராயண் சரோவர் சரணாலயம்

நாராயண் சரோவர் சரணாலயம்

கட்ச் பகுதியில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய சரணாலயம், நாராயண் சரோவர் சரணாலயம் ஆகும். 15 வகையான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக மற்ற காலநிலைகளில் வாழ முடியாத விலங்குகள் இந்த சரணாலயத்தில் வாழ்ந்து வருகின்றன. மேலும் ஒருசில பாலூட்டிகளான காட்டு பூனைகள், பாலைவன நரிகள் மற்றும் காட்டுக் கரடிகள் போன்ற விலங்குகளும் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. பயமே இல்லாத விலங்கு என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஹனி பட்கர் என்ற விலங்கும் இந்த சரணாலயித்தில் வசித்து வருகின்றது

Chandra

மாதா நோ மாத்

மாதா நோ மாத்

மாதா நோ மாத் என்பது ஒரு ஆன்மீகத் தளமாகும். ஏனெனில் இந்த பகுதியில் கட்ச்சின் தெய்வமான ஆஷபுரா மாதாவின் கோயில் அமைந்திருக்கிறது. லாக்கோ ஃபுலானி, அஜோ மற்றும் அனகார் ஆகியோரின் தந்தையின் நீதியவையில் பணி புரிந்த இரண்டு அமைச்சர்களால் இந்த ஆலயம் கிபி 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. குஜராத்தின் பல பகுதிகளிலிருந்து இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

Raman Patel

 லாலா பர்ஜன் சரணாலயம்

லாலா பர்ஜன் சரணாலயம்

லாலா பர்ஜன் சரணாலயம் என்று அழைக்கப்படும் கட்ச் பஸ்டர்ட் சரணாலயம் 1992-ல் கட்ச்சியில் இருக்கும் ஜக்கு என்ற கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டது.

குறிப்பாக ஓட்டிடிடேயின் ஏவியன் குடும்பத்தைச் சேர்ந்த பறக்கும் மிக அதிக எடை கொண்ட கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட் என்ற பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது.

இந்த கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட் ஒரு ஆபத்தான பறவையாகும். இந்தப் பறவை மிக எளிதாக சரணாலயத்தில் உள்ள புல்வெளியில் தன்னை மறைத்துக் கொள்ளும்.

சுற்றுலாப் பயணிகளை இந்தப் பறவை வெகுவாக கவரும். அதோடு இந்த சரணாலயத்தில் சின்கராக்கள், காட்டு பூனைகள் மற்றும் நைல்கைஸ் போன்ற விலங்குகளும் உள்ளன.

LRBurdak

கட்ச் சியோத் குகைகள்

கட்ச் சியோத் குகைகள்

கட்ச் பகுதியில் இருக்கும் சியோத் குகைகள் கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகின்றன. இந்த குகைகள் கிழக்குப் பக்கம் பார்த்து இருக்கும். மேலும் இந்த குகைகளுக்குள் நடந்து செல்லலாம்.

துறவிகளின் 80 மடங்களுள் இந்த குகைகளும் ஒன்று என்று 7 நூற்றாண்டில் சிந்து ஆற்றின் முகத்துவாரத்திற்கு வந்த சீன பயணிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இது அந்த பகுதியில் சமண மதம் தழைத்தோங்கியதை காட்டுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X