» »உங்க ராசிக்குரிய செடியை வாங்கினா ஓவர் நைட்டில் கோடிஸ்வரர் ஆகலாமா?

உங்க ராசிக்குரிய செடியை வாங்கினா ஓவர் நைட்டில் கோடிஸ்வரர் ஆகலாமா?

Posted By: Udhaya

மாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஜோதிட தோட்டம் ஆகும். இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன. ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள் கொடுப்பதாக கூறுகின்றனர்.

ஜோதிட தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்தத் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் அவர்களுக்கு தேவைப்படும் ஜோதிட தாவரங்களின் கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருவருடைய ராசிக்கான மரத்தை ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

 மாங்கல்யா வான்

மாங்கல்யா வான்

மாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.
gujarattourism.com

 கைலாஷ் தேக்ரி

கைலாஷ் தேக்ரி

கைலாஷ் தேக்ரி மங்கள்யா வானிலிருந்து சரியாக அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
gujarattourism.com

 நீர்நிலைகள்

நீர்நிலைகள்

நீர்நிலைகள் இருபுறமும் சூழ்ந்துள்ள கைலாஷ் தேக்ரியை அடைய மலையேற்றம் அவசியமாகிறது. இது டிரெக்கிங் போன்ற அனுபவத்தை அளிக்கிறது.
gujarattourism.com

 தனித்தன்மையுடைய ராசி செடிகள்

தனித்தன்மையுடைய ராசி செடிகள்

ஒவ்வொருவருக்கும் அவர்களின் ராசி, நட்சத்திரங்களின்படி ஒரு செடி உள்ளது, அந்த செடியை வளர்த்துவந்தால் நாளடைவில் நன்மை கிட்டும் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.


gujarattourism.com

குவியும் சுற்றுலா பயணிகள்

குவியும் சுற்றுலா பயணிகள்


இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கதையை கேட்டு அதை முழுதாக நம்பி மனதார அவர்களுக்கு ஏற்ற செடிகளை வாங்கிச் சென்று வளர்க்கின்றனர்.

gujarattourism.com

விடுமுறை நாட்களில்

விடுமுறை நாட்களில்


வாரவிடுமுறை நாட்களில் குறைந்தபட்சம் 700 பேராவது ஒரு நாளைக்கு வந்து செடிகளை வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

தொடர்விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1500வரை இருக்குமாம்..

gujarattourism.com

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

குஜராத் ராஜஸ்தான் எல்லையிலுள்ள பணாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது அம்பாஜி. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் நடந்தே செல்லும் இடத்தில் அமைந்துள்ளது கைலாஷ்.

இங்கு ரயில் வசதிகள் இல்லை. விமான நிலையம் அகமதாபாத்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்